Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

மைலேஜுடன் இணைந்த ஏஜி&பி பிரதம் திங் கேஸ் எரிபொருள் கார்டு அறிமுகம்!

வாயு எரிபொருள் சேவை வழங்கும் ஏஜி & பிரதாம்- திங் கேஸ் நிறுவனம், பல்வேறு அம்சங்கள் கொண்ட மைலேஜ் மற்றும் சி.என்.ஜி எரிபொருள் அட்டையை அறிமுகம் செய்துள்ளது.

மைலேஜுடன் இணைந்த ஏஜி&பி பிரதம் திங் கேஸ் எரிபொருள் கார்டு அறிமுகம்!

Monday January 06, 2025 , 2 min Read

வாயு எரிபொருள் சேவை வழங்கும் ஏஜி & பிரதம்- திங் கேஸ் நிறுவனம், பல்வேறு அம்சங்கள் கொண்ட மைலேஜ் மற்றும் சி.என்.ஜி எரிபொருள் அட்டையை அறிமுகம் செய்துள்ளது. ஏஜி & பிரதம்- திங் கேஸ் தலைவர் அமிதவா சென்குப்தா இந்த கார்டை அறிமுகம் செய்தார்.


ஜேகல் ப்ரீபெய்டு ஓஷன் சர்வீசஸ் நிறுவன சேவையை அடிப்படையாக கொண்ட இந்த கார்டு, ஏஜி & பிரதாம்- திங் கேஸ் வாடிக்கையாளர்களுக்கு எரிபொருள் நிறப்புவதில் புதிய அனுபவம் அளிக்கிறது. இந்த கார்டு மூலம் வாடிக்கையாளர்கள் சிக்கல் இல்லாத, பாதுகாப்பான பரிவர்த்தனையை பெறலாம்.

இந்த கார்டு முழுமையான டிஜிட்டல் பரிவர்த்தனை சேவையை வழங்கி, நிறுவன சி.என்,ஜி மையங்களில் சீரான பரிவர்த்தனையை சாத்தியமாக்குகிறது.

gas

மேலும், இந்த கார்டு, கேஷ்பேக் சலுகை, பாதுகாப்பான பரிவர்த்தனை, எரிபொருள் கண்காணிப்பு உள்ளிட்ட வசதிகளை வழங்குகிறது. வாகன உரிமையாளர்கள் ஒரே கணக்கில் பல கார்டுகளை வைத்திருக்கலாம். ஒரு மைய கணக்கு மூலம் வாகனங்கள் எரிபொருள் நிலைமையை கண்காணிக்க இது உதவும்.

“மைலேஜ் மற்றும் எரிபொருள் கார்டு மிகப்பெரிய புதுமையாகும். எரிபொருள் நிறப்பும் அனுபவத்தை இது மேம்படுத்தும். வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட தூய, நீடித்த வளர்ச்சி கொண்ட எரிபொருள் நிறப்ப சேவையை அளிக்கும் எங்கள் பயணத்தில் இது முக்கிய மைல்கல்,” என்று ஏஜி & பிரதம்- திங் கேஸ் தலைவர் அமிதவா சென்குப்தா கூறினார்.

இந்த கார்டு அம்சங்கள் நிறைந்த தனித்தன்மையானது. வாடிக்கையாளர்கள் எரிபொருள் நிறப்பும் தேவையை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டது, என்று நிறுவனர் சி.இ.ஓ மற்றும் நிர்வாக இயக்குனர் அபிலேஷ் குப்தா கூறினார்.

இந்த கார்டு, வல்லம் மற்றும் வாலாஜா ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. நிகழ்நேர காட்சி விளக்கமும் அளிக்கப்பட்டது. இந்நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு இந்த கார்டு மூலம் எரிவாயுவில் கிலோவுக்கு ரூ.3 அளவு சேமிப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளது.

ஏஜி & பிரதம்- திங் கேஸ்  நிறுவனம், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் எரிவாயு விநியோக, நிறப்பும் சேவையை வழங்கி வருகிறது.


Edited by Induja Raghunathan