முதல் முறையாக ஒரு லட்சம் டாலர்களைத் தொட்ட பிட்காயின் - டிரம்ப் கிரிப்டோ பாலிசி எதிரொலி!
கருத்துக்கணிப்புகள் டிரம்ப்பின் வெற்றியை முன் கூட்டியே கணித்ததால் 'டிஜிட்டல் தங்கம்' என்று அடிக்கடி குறிப்பிடப்படும் பிட்காயினின் விலை, நவம்பர் முதல் 50%க்கு மேல் உயர்ந்துள்ளது.
டொனால்ட் டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் Bitcoin முதன்முறையாக $100,000 ஐ தொட்டது.
கருத்துக்கணிப்புகள் டிரம்ப்பின் வெற்றியை முன் கூட்டியே கணித்ததால் 'டிஜிட்டல் தங்கம்' என்று அடிக்கடி குறிப்பிடப்படும் பிட்காயினின் விலை, நவம்பர் முதல் 50%க்கு மேல் உயர்ந்துள்ளது.
“உலகெங்கிலும் உள்ள அரசுகளும் நிறுவனங்களும் பிளாக்செயின் தொழில்நுட்பத்தைத் தழுவத் தொடங்குவதால், கிரிப்டோகரன்சி சந்தை நம்பிக்கையில் ஒரு எழுச்சியைக் கண்டு வருகிறது, டிஜிட்டல் சொத்துக்களில் முதலீட்டிற்கு வழி வகுக்கிறது. இந்த புதிய உற்சாகம், நீடித்த வளர்ச்சிக்கு தயாராக உள்ள ஒரு முதிர்ச்சியான பொருளாதாரச் சூழல் அமைப்பை பிரதிபலிக்கிறது,” என்று Binance-ன் பிராந்திய சந்தைகளின் தலைவர் விஷால் சசீந்திரன் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
கிரிப்டோ-நட்பு வழக்கறிஞர் பால் அட்கின்ஸை அடுத்த செக்யூரிட்டிஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் கமிஷனின் (எஸ்இசி) தலைவராக டிரம்ப் பரிந்துரைத்த ஒரு நாளுக்குப் பிறகு பிட்காயினின் மதிப்பு இந்த உச்சத்தை எட்டியுள்ளது.
ZebPay-ன் தலைமை நிர்வாக அதிகாரி ராகுல் பகிடிபதி கருத்துப்படி, கிரிப்டோ சந்தையின் மொத்த மூலதனம் இப்போது $3.5 டிரில்லியனை தாண்டியுள்ளது.
"பிட்காயின் இப்போது உலகின் மிக மதிப்புமிக்க முதல் 10 சொத்துக்களில் ஒன்றாகும், தங்கம் தவிர அனைத்து பொருட்களுக்கும் மேலாகவும், பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகளை விடவும் உயர்ந்ததாகவும் உள்ளது," என்றார்.
2025ல் பிட்காயின் சுமார் $1,50,000 என்ற மதிப்பின் உச்சத்தை எட்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
பிட்காயின் 2024 மாநாட்டின் போது டிரம்ப் முன்மொழிந்த திட்டமான, அமெரிக்காவில் பிட்காயின்களின் ரிசர்வை உருவாக்கும் விவாதங்களுக்கு மத்தியில் இன்றைய எழுச்சி ஏற்பட்டுள்ளது. இந்த ரிசர்வ் பிட்காயின் கையிருப்பு நிதித்தேவைகளைச் சந்திப்பதற்கு பயனுள்ளதாக இருக்குமென்று கருதப்படுகிறது, அதே வேளையில், இது முழுதும் நிதி அதிகாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும்.
புதிய அரசுத் துறையை நிர்வகிக்க எலான் மஸ்க், விவேக் ராமசாமி நியமனம்- ட்ரம்ப் அதிரடி!