பிசினஸ் ‘கம்பேக்’ கதைகள் - 3 பிராண்டுகள் விழுந்து எழுந்தது எப்படி?
நிதி, மார்க்கெட் ரீதியாக பின்னடைவு கண்ட பிறகு, மிகச் சில நிறுவனங்களே தங்களைத் தாங்களே புதுப்பித்து, நம்பமுடியாத அளவுக்கு கம்பேக் கொடுத்துள்ளன.
பிசினஸ் உலகில் தோல்வியில் இருந்து வெற்றிக்கு ஒரு நிறுவனம் திரும்புவது என்பது இன்ஸ்பிரேஷனுக்கு சற்றும் குறைவில்லாத ஒன்று.
ஃபைனான்ஸ் ரீதியாக சரிவை எதிர்கொண்டாலும் சரி அல்லது மார்க்கெட் ட்ரெண்ட் மாறியதில் சிக்கியிருந்தாலும் சரி, மிகச் சில நிறுவனங்களே தங்களைத் தாங்களே புதுப்பித்து, நம்பமுடியாத அளவுக்கு கம்பேக் கொடுத்துள்ளன.
இந்தக் கதைகள் பிசினஸை பின்னடைவில் இருந்து முன்னோக்கி கொண்டுசென்று வெற்றிக்குத் திரும்பும் திறமைக்கு ஒரு சான்றாகும். அப்படி செய்த 3 பிசினஸ்களின் கம்பேக் கதை இதோ...
1. லெகோ (Lego): திவால் டு பிசினஸ் ஐகான்
90-களில், உலகின் மிகவும் பிரபலமான பொம்மை பிராண்டுகளில் ஒன்றாக இருந்ததுதான் இந்த ‘லெகோ’ நிறுவனம். ஆனால், இந்நிறுவனம் சீக்கிரமாகவே சரிவை சந்திக்க தொடங்கியது. இதனால் நிறுவனம் மார்க்கெட்டுடன் இருந்த தொடர்பையும் இழக்கத் தொடங்கியது.
அந்த நாட்களில் குழந்தைகள் பொம்மையை தாண்டி வேறு பொழுதுபோக்குகளுக்கு நகர்ந்துகொண்டிருந்தனர். போதாக்குறைக்கு லெகோவின் தயாரிப்புகள் ஒரே மாதிரியான தயாரிப்புகளாக இருந்தன.
2003-ம் ஆண்டு வாக்கில், நிலைமை இன்னும் மோசமாகி நிறுவனத்துக்கு 300 மில்லியன் டாலர் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. இதனால், லெகோவின் எதிர்காலம் இருண்டதாக மாறத் தொடங்கியது. இந்த நேரத்தில்தான், புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக தொலைநோக்கு பார்வை கொண்ட ஜோர்கன் விக் நுட்ன்ஸ்டார்ப் என்ட்ரி கொடுத்தார். அவர் லெகோ நிறுவனத்தை அதன் வேருக்கு அழைத்துச் சென்றார்.
படைப்பாற்றலை வளர்க்கும் நோக்கத்துடன் எளிமையான அதேநேரம், கற்பனையான விளையாட்டுகளுடன் கூடிய புதுமையான டிசைன்களை லெகோ வெளிப்படுத்தியது. கூடவே, தனது பழைய தரத்துடன், புதிய ஆபர்களுடன் மார்க்கெட்டில் ரீ என்ட்ரி கொடுத்தது. தனது டிசைனில் முக்கியத்துவம் கொடுத்து புதுமைகளை புகுத்தியது.
இது டிஜிட்டல் மீடியாவிலும் குறிப்பிடத்தக்க உந்துதலை ஏற்படுத்தியது. விளைவு, இன்று லெகோ லாபகரமானது மட்டுமல்லாது உலகின் மிகவும் பிரியமான பொம்மை பிராண்டுகளில் ஒன்றாகவும் மாறியிருக்கிறது.
2. கான்வர்ஸ்: கிளாசிக் புத்துயிர் பெறுதல்
கான்வர்ஸ் நிறுவனம் அதன் ஐகானிக் தயாரிப்பான சக் டெய்லர் (Chuck Taylor) ஸ்னீக்கர் ஷூ வகைகளுக்காக அறியப்படுகிறது. இந்நிறுவனம் நீண்ட வரலாறு கொண்டது.
பல தசாப்தங்களாக தடகள வீரர்களுக்கான காலணி தயாரிப்பில் சந்தையில் ஆதிக்கம் செலுத்திய கான்வர்ஸ், 1980-90-களில் சரிவை எதிர்கொண்டது. நைக் மற்றும் அடிடாஸ் போன்ற ஷூ பிராண்டுகளின் எழுச்சி கான்வர்ஸுக்கு சரிவை ஏற்படுத்தியது. விற்பனையில் பெரிய வீழ்ச்சியை எதிர்கொண்டது.
இப்படியான நிலையில்தான், நைக் நிறுவனத்தை கையகப்படுத்தியது கான்வெர்ஸ். இதன்பின் மிகப் பெரிய கம்பேக் கொடுத்தது. பிராண்ட் புத்துயிர் பெற்றதுடன், ரெட்ரோ ஸ்டைலில் கவனம் செலுத்த தொடங்கியது. இளைய தலைமுறையினரைக் கவரும் வகையில் புதிய டிசைனில் தனது பழைய கிளாசிக் ஸ்னீக்கர்களை மறுவடிவமைப்பு செய்து மீண்டும் கொண்டுவந்தது.
டாப் டிசைனர்களுடன் கூட்டு சேர்ந்தது கான்வர்ஸ். இது பிராண்டை நவீனமயமாக்கவும் கலாச்சாரத்துக்கு ஏற்ற தயாரிப்புகளை உருவாக்கவும் உதவியது. இப்படியான முயற்சிகளால் இன்று, கான்வர்ஸ் மீண்டும் ஃபேஷன் மற்றும் காலணி துறையில் முன்னணி பிராண்டாக உள்ளது.
3. ஐபிஎம் (IBM): மெயின்பிரேம் டு கிளவுட்
ஐபிஎம்-ன் கம்பேக், வேகமாக மாறிவரும் தொழில்நுட்ப உலகில் ஒரு நிறுவனம் எவ்வாறு தொடர்புடையதாக இருக்க முடியும் என்பதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. மெயின்பிரேம் கம்ப்யூட்டர் (பெருங்கணினி) துறையில் ஆதிக்கம் செலுத்திய ஐபிஎம், 90களில் ஸ்மார்ட் கம்ப்யூட்டர் புரட்சி தொடங்கியதை அடுத்து, பிசினஸில் வீழ்ச்சியடைந்தது. இதனால், 1993-இல் ஐபிஎம் 8.9 பில்லியன் டாலர் நஷ்டத்தை சந்தித்தது.
பலரும் ஐபிஎம்மின் சிறப்பான நாட்கள் முடிவுக்கு வந்துவிட்டன என்று அஞ்சத் தொடங்கினர். இந்த நேரத்தில்தான் பழைய பிசினஸ் மாடலில் இருந்து வெளிவந்த ஐபிஎம், தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ள ஒரு தைரியமான நடவடிக்கையை மேற்கொண்டது. சிஇஒ லூயிஸ் கெர்ஸ்ட்னரின் தலைமையின் கீழ், ஐபிஎம் தனது கவனத்தை சாஃப்ட்வேர் மற்றும் சர்வீஸ் பக்கம் திருப்பியது.
இன்று, ஐபிஎம் கிளவுட் கம்ப்யூட்டிங், செயற்கை நுண்ணறிவு மற்றும் குவாண்டம் கம்ப்யூட்டிங் ஆகிய துறையில் முன்னணியில் உள்ளது. இப்போது, ஐபிஎம் தொழில்நுட்ப உலகில் தொடர்ந்து பல புதுமைகளை உருவாக்கி வருகிறது.
டேக் அவே...
இந்த 3 பிரபலமான பிராண்டுகளும் பிசினஸில் நீண்ட வரலாறு கொண்ட நிறுவனங்களாக இருந்தும், சந்தை மாற்றங்களுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டதால் வெற்றிகரமான கம்பேக் கொடுத்தன.
புதிய தொழில்நுட்பத்தைத் தழுவியதன் மூலமாகவும், தங்களது தயாரிப்புகளுக்கு புத்துயிர் அளித்தன் மூலமாகவும், தங்களது பிசினஸ் மாடலை முற்றிலும் மாற்றியதன் மூலமாகவும், கிரியேட்டிவிட்டி உள்ளிட்டவை பிசினஸ் உலகில் உயிர்வாழ்வதற்கான முக்கியமானவை என்பதை இந்நிறுவனங்கள் நிரூபித்துள்ளன.
தோல்வி என்பது பெரிய வெற்றியின் ஆரம்பம்தான் என்பதை அவர்களின் கதைகள் நமக்கு நினைவூட்டுகின்றன.
Edited by Induja Raghunathan