30 நிமிடத்தில் டெலிவரி: Myntra அறிமுகம் செய்யும் துரித டெலிவரி சேவை!
ஃபேஷன், அழகுப் பொருட்கள் மற்றும் வீட்டு அலங்கார சாதனங்கள் ஆகிய வகைகளில் 10,000 ஸ்டைல்களுக்கு இந்த 30 நிமிட எம்-நவ் சேவை வழங்கும். இது 2-4 மாதங்களில் 1 லட்சத்திற்கும் அதிகமான ஸ்டைல்களாக மாற்ற மிந்த்ரா இலக்கு வைத்துள்ளது.
ஃபிளிப்கார்ட்டிற்கு சொந்தமான இ-காமர்ஸ் தளமான மிந்த்ரா நவம்பரில் பெங்களூரின் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் 'M-Now’ என்ற 30 நிமிட டெலிவரி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஃபேஷன், அழகு, பாகங்கள் மற்றும் வீட்டு அலங்கார சாதனங்கள் ஆகிய வகைகளில் 10,000 ஸ்டைல்களுக்கு இந்த 30 நிமிட எம்-நவ் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இது 2-4 மாதங்களில் 1 லட்சத்திற்கும் அதிகமான ஸ்டைல்களாக மாற்ற மிந்த்ரா இலக்கு வைத்துள்ளது.
”பிராண்டுகளுடன் இணைந்து, ஃபேஷன் சாத்தியங்களை விரிவுபடுத்துவதற்கும், இந்தியாவின் லைஃப்ஸ்டைல் ஷாப்பிங் அனுபவத்தை மறுஉருவாக்கம் செய்வதற்கும் எங்களின் கூட்டுப் பணியை மேம்படுத்துவதில் M-Now கவனம் செலுத்ஹ்டும்,” என்று மைந்த்ராவின் CEO நந்திதா சின்ஹா கூறினார்.
தற்போது, M-Now டெலிவரியில் MANGO, Tommy Hilfiger மற்றும் Levi's போன்ற உலகளாவிய பிராண்டுகள் அடங்கும். துரித விநியோகத்தில் மிந்த்ராவின் முதல் முயற்சியே இந்த எம்-நவ். ஏற்கனவே உள்ள எக்ஸ்பிரஸ் என்னும் சேவை தேர்ந்தெடுக்கப்பட்ட வகைகளுக்கு 24-48 மணிநேர டெலிவரியை வழங்கி வருகிறது.
Nykaa, அதன் Nykaa Now சேவையுடன், வாடிக்கையாளர்களுக்கு விரைவாகச் சேவை செய்ய டார்க் ஸ்டோர் நெட்வொர்க்கை அமைக்கத் திட்டமிட்டு வருகிறது. 70 மில்லியன்களுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட மிந்த்ரா இப்போது எம்-நவ்வில் உள்ள பிராண்டுகள் மூலம் அதன் தொழில்நுட்ப அடுக்கு மற்றும் சேவைகளை அதன் வாடிக்கையாளர் தளத்தை ஆழமாக்க அனுமதிக்கும்.
மிந்த்ராவின் இந்த புதிய முயற்சி மிகப்பெரிய வாடிக்கையாளர்களின் ஆர்வத்தை ஈர்த்துள்ளது, அதன் புகழை அதிகரித்துள்ளது, என்று நிறுவனம் பெருமை தெரிவித்துள்ளது.