பிஎப் பணத்தை ஏடிஎம் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம்!
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO) தனது உறுப்பினர்களுக்கான முக்கிய புதிய வசதிகளை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, உறுப்பினர்கள் ஏடிஎம் கார்டு மூலம் பணம் எடுப்பது போல, தங்கள் நிதியை விலக்கிக் கொள்ள முடியும்.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO) தனது உறுப்பினர்களுக்கான முக்கிய புதிய வசதிகளை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, உறுப்பினர்கள் ஏடிஎம் கார்டு மூலம் பணம் எடுப்பது போல, தங்கள் நிதியை எடுத்துக் கொள்ள முடியும்.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், விரைவில் இபிஎப்.ஓ 3.0 வடிவத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
இந்த புதிய வடிவம், ஏடிஎம் கார்டு மூலம் பணம் எடுப்பது போல உறுப்பினர்கள் தங்கள் நிதியை ஏடிஎம் இயந்திரங்கள் வாயிலாக விலக்கி கொள்ள வழி செய்வது உள்ளிட்ட புதிய வசதிகளை கொண்டுள்ளது.

இந்த வடிவம், வங்கி போல செயல்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். வங்கித்துறை பரிவர்த்தனைகள் நிகழ்வது போல, பிஎப் அலுவகங்களும் இயங்கும், என கூறினார். ஒவ்வொரு உறுப்பினர்களுக்குமான பொது கணக்கு எண் மூலம் அனைத்து பரிவர்த்தனை எண்களும் மேற்கொள்ள்ப்படும்.
மேலும், உறுப்பினர்கள் இனியும் தங்கள் நிதியை விலக்கிக் கொள்ள அலுவலக கிளைக்கு வர அல்லது தங்கள் நிறுவனங்களின் அனுமதி பெறவோ தேவையில்லை என்று அமைச்சர் கூறினார். பணம் உறுப்பினர்களுடையது என்பதால் அவர்கள் வசதிக்கேற்ப எடுத்துக் கொள்ளலாம் என்றார்.
முக்கிய அம்சங்கள்
உறுப்பினர்கள், வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பது போல, தங்கள் நிதியை நேரடியாக ஏடிஎம் மூலம் விலக்கி கொள்ளலாம். பிஎப் அலுவலங்களுக்கு செல்லும் தேவை அல்லது நிதி பெற காத்திருப்பதை இது தேவையற்றதாக ஆக்குகிறது.
இந்த மாற்றி அமைக்கப்பட்ட முறை வங்கிச்சேவை போலவே செயல்படும். பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்யவும், புகார்களை குறைக்கவும் பிஎப் செயல்பாடு மேம்படுத்தப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார். நிதி பரிவர்த்தனை, கோரிக்கை பைசல், தகவல் அளிப்பது போன்றவற்றை சீராக்கி வருகிறது.
Edited by Induja Raghunathan