Gold Rate Chennai: அப்பாடா நிம்மதி... தங்கம் விலை ‘தடாலடி’ சரிவு - சவரனுக்கு ரூ.560 குறைவு!
கடந்த சில நாட்களாக புதுப்புது வரலாற்று உச்சங்களைத் தொட்டு வந்த ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் தடாலடியாக குறைந்துள்ளது, நகை வாங்க விழைவோருக்கு மிகுந்த நிம்மதியைத் தந்துள்ளது.
கடந்த சில நாட்களாக புதுப்புது வரலாற்று உச்சங்களைத் தொட்டு வந்த ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் தடாலடியாக குறைந்துள்ளது, நகை வாங்க விழைவோருக்கு மிகுந்த நிம்மதியைத் தந்துள்ளது.
சென்னையில் செவ்வாய்க்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.80 உயர்ந்து ரூ.8,060 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.640 அதிகரித்து ரூ.64,480 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.87 உயர்ந்து ரூ.8,793 ஆகவும், சவரன் விலை ரூ.696 அதிகரித்து ரூ.70,344 ஆகவும் இருந்தது.
தங்கம் விலை நிலவரம் - புதன்கிழமை (12.2.2025):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.70 குறைந்து ரூ.7,940 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.560 குறைந்து ரூ.63,520 ஆகவும் உள்ளது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.71 குறைந்து ரூ.8,667 ஆகவும், சவரன் விலை ரூ.568 குறைந்து ரூ.69,336 ஆகவும் உள்ளது.
வெள்ளி விலை:
சென்னையில் இன்று (12.2.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.106.90 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,06,900 ஆகவும் விற்பனை ஆகிறது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. அமெரிக்கா - சீனா இடையிலான வரிவிதிப்பு யுத்தம் உள்ளிட்ட காரணங்களால் சர்வதேச பங்குச் சந்தைகளில் தடுமாற்றம் நிலவுகிறது. தங்கத்தில் முதலீடு செய்வதே இப்போதைக்கு பாதுகாப்பு என்று மக்கள் நம்புகின்றனர்.

இந்தக் காரணங்களால், சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளதால் ஆபரணத் தங்கத்தின் விலையும் வரலாறு காணாத புதிய உச்சங்களைத் தொட்டு வந்தது. இந்நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சற்றே மீண்டெழத் தொடங்கியுள்ளது உள்ளிட்ட சில காரணங்களால் தங்கம் விலை இன்று வெகுவாக சரிந்துள்ளது. எனினும், தொடர்ந்து சரியுமா என்பது போகப் போகவே தெரியும் என வர்த்தகர்கள் கருதுகின்றனர்.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,940 (ரூ.70 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.63,520 (ரூ.560 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,667 (ரூ.71 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.69,336 (ரூ.568 குறைவு)
தங்கம் விலை @ மும்பை

Edited by Induja Raghunathan