Gold Rate Chennai: தொடர்ந்து தங்கம் விலை அதிரடி சரிவு - எவ்வளவு தெரியுமா?
சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் ரூ.60 குறைந்து 6,430 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.65குறைந்து 7,015ரூபாயாகவும் உள்ளது.
சென்னையில் இன்று வியாழக்கிழமை (25.07.2024) ஆபரணத்தங்கத்தின் ஒரு கிராம் விலை இன்றும் ரூ.60 குறைந்தது. அதேபோல், ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ.480 குறைந்துள்ளது. பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான சுங்க வரிக் குறைப்பினால் விலைகள் கடுமையாகக் குறைந்து வருகின்றன.
தங்கம் விலை நிலவரம், வியாழக்கிழமை (25.07.2024):
சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் ரூ.60 குறைந்து 6,430 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.65 குறைந்து 7,015ரூபாயாகவும் உள்ளது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480குறைந்து ரூ.51,440ஆகவும் விற்பனையாகிறது.
சென்னை சந்தையில் 10 கிராம், 22 காரட் ஆபரணத்தங்கம் விலை ரூ.600 குறைந்து ரூ.64,300 என்றும் 24 காரட் சுத்தத்தங்கம் விலை 10 கிராம் ரூ.650 குறைந்து ரூ.70,150-ற்கும், 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை ரூ.520 குறைந்து ரூ.56,120-ற்கும் விற்பனையாகின்றன.
வெள்ளி விலை சரிவு:
சென்னையில் வியாழக்கிழமை (25-07-24)1 கிராம் வெள்ளி விலை ரூ.3 குறைந்து ரூ.89 என்றும், ஒரு கிலோ வெள்ளி ரூ.89,000-ற்கும் விற்பனையாகிறது.
காரணம்:
2024-25 பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி சுங்கவரியை 15 சதவீதம் என்பதிலிருந்து 6 சதவீதமாகக் குறைந்ததாலும் ஆடிமாத காலம் என்பதால் தேவை குறைவினாலும் தங்கம் விலை அதிரடியாக சரிந்து வருகிறது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.6,430(மாற்றம்ரூ.60குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.51,440(மாற்றம்ரூ.480குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,015(மாற்றம்ரூ.65குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.56,120(மாற்றம்ரூ.520குறைவு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.6,400மாற்றம்ரூ.95குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.51,200(மாற்றம்ரூ.760குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.6,982(மாற்றம்ரூ.104குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.55,856(மாற்றம்ரூ.832குறைவு)