Gold Rate Chennai: சவரனுக்கு ரூ.320 குறைவு - இன்னும் சரியுமா தங்கம் விலை?
வரலாறு காணாத உச்சங்களைத் தொட்டு வந்த ஆபரணத் தங்கத்தின் விலை, வாரத்தின் முதல் நாளான இன்று சற்றே குறைந்திருப்பது நகை வாங்குவோருக்கு ஆறுதலுக்கு உரியதாக உள்ளது.
வரலாறு காணாத உச்சங்களைத் தொட்டு வந்த ஆபரணத் தங்கத்தின் விலை, வாரத்தின் முதல் நாளான இன்று சற்றே குறைந்திருப்பது நகை வாங்குவோருக்கு ஆறுதலுக்கு உரியதாக உள்ளது. ஆனால், இந்த விலை குறைவு போக்கு தொடருவது சந்தேகமே என்பது வர்த்தகர்களின் கணிப்பு.
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட சனிக்கிழமை அன்று சில்லரை வர்த்தக சந்தையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.7,790-க்கும், சவரனுக்கு ரூ.480 அதிகரித்து ரூ.62,320-க்கும் விற்கப்பட்டது. 24 காரட் சுத்த தங்கம் விலை ஒரு கிராம் ரூ.8,498, ஒரு பவுன் ரூ.67,984 என இருந்தது.
தங்கம் விலை நிலவரம் - திங்கள்கிழமை (3.2.2025):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.40 குறைந்து ரூ.7,705 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.320 குறைந்து ரூ.61,640 ஆகவும் உள்ளது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.44 குறைந்து ரூ.8,405 ஆகவும், சவரன் விலை ரூ.352 குறைந்து ரூ.67,240 ஆகவும் உள்ளது.
வெள்ளி விலை:
சென்னையில் இன்று (3.2.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.107 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,07,000 ஆகவும் விற்பனை ஆகிறது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி கண்டு வருகிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட சர்வதேச சந்தைப் போக்குகளின் எதிரொலியாக, தற்போதைய சூழலில் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை நோக்கி மக்கள் நகர்ந்துள்ளனர்.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரித்து வரும் சூழலில், மத்திய பட்ஜெட்டில் தங்கம் மீதான இறக்குமதி வரி வெகுவாக குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தங்கம் மீதான இறக்குமதி வரி எதிர்பார்த்த அளவுக்கு குறைக்கப்படாததால், ஆரம்பத்தில் கொஞ்சம் விலை சரிவு இருந்தாலும், போகப் போக தங்கம் விலை மேலும் அதிகரிக்கவே செய்யும் என வர்த்தகர்கள் கணிக்கின்றனர்.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,705 (ரூ.40 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.61,640 (ரூ.320 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,405 (ரூ.44 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.ரூ.67,240 (ரூ.352 குறைவு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,705 (ரூ.40 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.61,640 (ரூ.320 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,405 (ரூ.44 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.ரூ.67,240 (ரூ.352 குறைவு)
Edited by Induja Raghunathan