Gold Rate Chennai: தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு!
கிறிஸ்துமஸ் நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சற்றே உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது.
கிறிஸ்துமஸ் நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சற்றே உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது. எனினும், இது பெரிய விலை மாற்றமாக இல்லை என்பது கவனிக்கத்தக்கது.
இதனிடையே, கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இந்திய பங்குச் சந்தைகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
சென்னையில் செவ்வாய்க்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.10 குறைந்து ரூ.7,090 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.80 குறைந்து ரூ.56,720 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.10 குறைந்து ரூ.7,735 ஆகவும், சவரன் விலை ரூ.80 குறைந்து ரூ.61,880 ஆகவும் இருந்தது.
தங்கம் விலை நிலவரம் - புதன்கிழமை (25.12.2024):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.10 உயர்ந்து ரூ.7,100 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.80 உயர்ந்து ரூ.56,800 ஆகவும் உள்ளது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.10 உயர்ந்து ரூ.7,745 ஆகவும், சவரன் விலை ரூ.80 குறைந்து ரூ.61,960 ஆகவும் உள்ளது.
வெள்ளி விலை:
சென்னையில் இன்று (25.12.2024) 1 கிராம் வெள்ளி விலை 10 பைசா உயர்ந்து ரூ.99 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.100 உயர்ந்து ரூ.99,000 ஆகவும் மாற்றம் ஏதுமின்றி விற்பனையாகிறது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. தற்போது டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வெகுவாக குறைந்து காணப்படுகிறது. சர்வதேச அளவில் தங்கத்துக்கான தேவை குறைந்து வருவதால் விலையில் பெரிதாக மாற்றம் இல்லை. அதேபோல், உள்நாட்டிலும் தங்கத்தின் தேவை குறைந்துள்ளதும் கவனிக்கத்தக்கது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,100 (ரூ.10 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.56,800 (ரூ.80 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,745 (ரூ.10 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.61,960 (ரூ.80 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,100 (ரூ.10 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.56,800 (ரூ.80 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,745 (ரூ.10 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.61,960 (ரூ.80 உயர்வு)
Edited by Induja Raghunathan