கூகுள் தேடலில் புதிய ஏஐ வசதி அறிமுகம்; ஜெமினி 2.0-வில் ஏஐ ஓவர்வியூ மேம்பாடு!
ஜெமினி 2.0 இணைப்பு மூலம், சிக்கலான கேள்விகளுக்கு, குறிப்பாக கோடிங், கணிதம், பல வகை தேடல் ஆகியவற்றுக்கு அதிக தரம் வாய்ந்த பதில்களை அளிப்பதை கூகுள் நோக்கமாக கொண்டுள்ளது.
அமெரிக்காவில் ஏஐ ஜெமினி 2.0 கொண்ட ஓவர்வியூ வசதி அறிமுகத்தின் மூலம் கூகுள் தனது ஏஐ திறன் தேடலை மேம்படுத்தியிருப்பதோடு, ஏஐ மோடு எனும் புதிய சோதனை அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.
அண்மை வலைப்பதிவில் இந்த தகவல்களை வெளியிட்டுள்ள கூகுள், வேகமான பதில்கள், ஆழ்ந்த காரணம் அளித்தல் மற்றும் பரவலான அணுகல் மூலம் தேடல் அனுபவத்தை மேம்படுத்தும் அம்சங்களை சுட்டிக்காட்டியுள்ளது.
“ஏஐ ஓவர்வியூ எங்களின் மிகவும் பிரபலமான தேடல் அம்சமாக இருக்கிறது- ஒரு பில்லியன் மக்களுக்கு மேல் பயன்படுத்தப்படுகிறது - இந்த அனுபவத்தை மேலும் மேம்படுத்துவதை தொடர்கிறோம்,” என கூகுள் தெரிவித்துள்ளது.

ஜெமினி 2.0 இணைப்பு மூலம், சிக்கலான கேள்விகளுக்கு, குறிப்பாக கோடிங், கணிதம், பல வகை தேடல் ஆகியவற்றுக்கு அதிக தரம் வாய்ந்த பதில்களை அளிப்பதை கூகுள் நோக்கமாக கொண்டுள்ளது. இந்த வசதி பதின்பருவ பயனாளிகளுக்கும் இனி அறிமுகமாகும் என்றும், லாகின் செய்ய வேண்டியதில்லை என்றும் தெரிவித்துள்ளது.
ஏஐ மோடு
கூகுள் ஏஐ மோடு எனும் சோதனை வசதியை அறிமுகம் செய்கிறது. மேலும், ஆழமான ஏஐ திறன் கொண்ட பதில்களை நாடும் பயனாளிகளுக்கான சர்ச் லேப்ஸ் வசதியாக இது அமைகிறது. ஜெமினி 2.0 மையமாகக் கொண்ட இந்த வசதி, பயனாளிகளை மிகவும் சிக்கலான, பல அடுக்கு கேள்விகளை கேட்டு, தெளிவான, ஆய்வு சார்ந்த பதிலை பெற உதவுகிறது. நிகழ் வலை தகவல்கள், கூகுளின் நாலெட்க் கிராப், மற்றும் ஷாப்பிங் புரிதல் ஆகிய அம்சங்களை சார்ந்து அமைகிறது.
“உங்கள் மனதில் உள்ள எதையும் கேட்டு, ஏஐ திறன் பதிலை பெறலாம், மேலும் துணை கேள்விகள் கேட்டு வலை இணைப்புகளையும் பெறலாம்,” என கூகுள் தெரிவிக்கிறது.
மேம்பட்ட குவரி பேன் அவுட் அணுகுமுறை உத்தி சார்ந்த ஏஐ மோடு, பல்வேறு தரவுகளில் ஒரே நேரத்தில் தேடு, தகவல்களை ஒப்பிட வழி செய்து, நுணுக்கமான தலைப்புகளை அணுக வழி செய்கிறது.
உதாரணத்திற்கு, ஸ்மார்ட் ரிங், ஸ்மார்ட் வாட்ச் மற்றும் டிராக்கிங் மோட் ஆகிவை தொடர்பான தூக்க கண்காணிப்பு அம்சங்களை ஒப்பிட கேட்டால், ஏஐ மோடு, பொருத்தமான தகவல்களை அழகாக பிரித்து தொகுத்தளிக்கிறது.
இந்த வசதியை கூகுள் தேர்ந்தெடுத்த பயனாளிகளிடம் சோதித்துப்பார்த்து வருகிறது. இதன் வேகம், மற்றும் துல்லியத்தை பயனாளிகள் பாராட்டிய நிலையில், இந்த வசதியை கூகுள் ஒன் ஏஐ பிரிமியம் சந்தாதாரர்களுக்கு குறைந்தபட்ச ஆப்ட் இன் மூலம் விரிவாக்கம் செய்துள்ளது.
“எந்த ஒரு ஆரம்ப நிலை ஏஐ சேவை போலவும், துவக்கத்தில் இது சரியாக அமையவில்லை,” என்று கூறியுள்ள நிறுவனம், தகவல் துல்லியம், உள்ளடக்க தன்மை, காட்சி, வீடியோ ஒருங்கிணைப்பு ஆகிய அம்சங்களை மேம்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளது.
இணைய உள்ளடக்கத்தை புதிய வழிகளில் அணுகுவது, பயனாளிகள் எதிர்வினையை பெறுவது உள்ளிட்ட மேலும் புதிய அம்சங்களை அறிமுகம் செய்ய உள்ளது.
தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan