பெண்கள் ஸ்டார்ட் அப் நிதி திரட்டலில் உலக அளவில் இந்தியாவுக்கு 2வது இடம்!
இந்தியாவில் 7,000க்கும் மேற்பட்ட பெண்கள் தலைமையிலான ஸ்டார்ட் அப்கள் இருக்கின்றன, இந்திய ஸ்டார்ட் அப்`களில் 7.5 சதவீதமாக இவை அமைகின்றன. இது வரை இந்நிறுவனங்கள் 26.4 பில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளன.
பெண்கள் வழிநடத்தும் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான நிதி பெறுவதில், ஒட்டு மொத்த நோக்கில் இந்தியா அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருப்பது டிராக்சன் அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் 7,000க்கும் மேற்பட்ட பெண்கள் தலைமையிலான ஸ்டார்ட் அப்கள் இருக்கின்றன, இந்திய ஸ்டார்ட் அப்களில் 7.5 சதவீதமாக இவை அமைகின்றன. இது வரை இந்நிறுவனங்கள் 26.4 பில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளன.
இவற்றில் 7.8 பில்லியன் டாலர் நிதியுடன் ரீடைல் துறை முதலீடு வகிக்கிறது. கல்வி நுட்பம் (5.4 பில்லியன் டாலர்), நிறுவன செயலிகள் (5 பில்லியன்) ஆகியவை அடுத்த இடங்களில் உள்ளன. பெங்களூரு, மும்பை மற்றும் தில்லி என்.சி.ஆர் ஆகிய நகரங்கள் பெண்கள் ஸ்டார்ட் அப்பில் முன்னிலை வகிக்கின்றன.

2024ல், மொபிகுவிக், உஷா பைனான்சியல்,. டன்வால், இண்டிரீயர்ஸ்& மோர், லாஷிகோ ஆகிய நிறுவனங்கள் பொது பங்குகளை வெளியிட்டன. எனினும், பெண்கள் ஸ்டார்ட் அப்கள் கையகப்படுத்துவது 2021ல் 41 ஆக இருந்தது, 2024 ல் 16 ஆக குறைந்துள்ளது.
பெண்கள் தலைமையிலான ஸ்டார்ட் அப்கள் 6.3 பில்லியன் டாலர் நிதி பெற்ற 2021ம் ஆண்டு அதிக நிதி பெற்ற ஆண்டாக டிராக்சன் அறிக்கை தெரிவிக்கிறது.
2022ல், பெண்கள் ஸ்டார்ட் அப்களுக்கான நிதி திரட்டலில் உலக அளவில் இந்தியா 15.18 சதவீதமாக இருந்தது. உலக அளவில் 32.8 பில்லியன் டாலர் திரட்டப்பட்டது, இந்தியாவில் இது 5 பில்லியன் டலாராக இருந்தது. 2024ல் அமெரிக்கா மற்றும் யூகேவிற்கு அடுத்த படியாக, இந்தியா பெண்கள் ஸ்டார்ட் அப் நிதி திரட்டலில் 3வது இடம் வகித்தது. 2021ல் 8 யூனிகார்ன்கள் நிறுவப்பட்டன.
2019, 2020, 2022 ஆகிய ஆண்டுகளில் சீரான வளர்ச்சி இருந்தாலும், 2017, 2023, 2024ல் புதிய யூனிகார்ன்கள் உருவாகவில்லை. வளர்ச்சியை தக்க வைத்துக்கொள்ள நிதி ஆதரவு, வழிகாட்டுதல், சூழல் ஆதரவு தேவை என இந்த அறிக்கை வலியுறுத்துகிறது.
சரண்யா சக்ரபாணி
Edited by Induja Raghunathan