2020யில் Netflix-ல் இந்தியா விரும்பிப் பார்த்த படங்கள் இவைதான்!
இந்த ஆண்டு, மற்ற ஆண்டுகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டிருந்தது. கொரோனா தொற்றுக்கு மத்தியில், இந்தியர்கள் மனம் விட்டு சிரிக்கவும், பொழுதை கழிக்கவும் எந்த திரைப்படங்களை பார்தது என நெட்பிளிக்ஸ் பட்டியலிடுகிறது.
நெட்பிளிக்ஸ் நிறுவனம், 2020ல் இந்தியர்கள் அதிகம் பார்த்த திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு மத்தியில் இருந்தியர்கள் எத்தகைய பொழுதுபோக்கை அணுகினர் என்பது தொடர்பான தகவல்களை இந்த பட்டியல் கொண்டிருக்கிறது.
முதலில் முக்கிய அம்சங்களைப் பார்க்கலாம்:
- நெட்பிளிக்ஸ் இந்தியா 370 மடங்கு வளர்ச்சியை கண்டது மற்றும் கொரிய படங்களுக்கான வரவேற்பு 250 மடங்கு அதிகரித்தது.
இந்தியாவில் அதிகம் விரும்பிப் பார்க்கப்பட்ட கொரிய திரைப்படங்கள் வருமாறு: தி கிங்: ஈட்டர்னல் மோனார்க், கிங்டம் (எஸ்2), இட்ஸ் ஓகே இட்ஸ் நாட் டு பி ஓகே, ஸ்டார்ட் அப். மேலும், லவ் ஆஜ் கல், கின்னி வெட்ஸ் சன்னி, மிஸ்மேட்ச்டு (The King: Eternal Monarch, Kingdom (S2), It’s Okay to Not Be Okay and Start-up. Meanwhile, Love Aaj Kal, Ginny Weds Sunny, Mismatched) ஆகியவை அதிகம் பார்க்கப்பட்ட ரொமான்டிக் படங்கள் மற்றும் தொடர்களாகும்.
அது மட்டும் அல்ல, உலக அளவில் இந்தியர்கள் தான் நெட்பிளிக்சில் அதிக அளவில் படம் பார்த்துள்ளனர். கடந்த ஆண்டு முதல், 80 சதவீத பயனாளிகளுக்கு மேல், வாரம் ஒரு திரைப்படம் பார்த்துள்ளனர்.
திரில்லர்கள் முதல் காமெடி படங்கள் வரை இந்தியா எல்லாவற்றையும் பார்த்து ரசித்திருக்கிறது: Raat Akeli Hai, Ludo, மற்றும் Gunjan Saxena: The Kargil Girl ஆகிய படங்கள் அதிகம் விரும்பி பார்க்கப்பட்டன.
"இந்தியர்களாகிய நாம், அனைத்து பிரிவுகளிலும் வலுவான பெண் பாத்திரங்கள் கொண்ட கதைகளை விரும்பிப் பார்த்துள்ளோம்,” என்கிறார் நெட்பிளிக்ஸ் இந்தியா உள்ளடக்கம் துணைத்தலைவர் மோனிகா ஷெர்கில்.
இந்தியாவில் இந்த ஆண்டு டாப் டென் படங்களின் பட்டியலில் நீளமான படமாக, Thriller Jamtara: Sabka Number Aayega அமைவதாகவும் நெட்பிளிக்ஸ் தெரிவித்துள்ளது.
Ala Vaikunthapurramuloo (தெலுங்கு), கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் (தமிழ்), Kappela (மலையாளம்), மற்றும் Uma Maheswara Ugra Roopasya (தெலுங்கு) ஆகிய படங்களும் டாட் டென்னில் இடம்பெற்றுள்ளன.
மஸபா மஸ்பா, புல்பில், ஷி, மிஸ் இந்தியா, நெவர் ஹேவ் ஐ எவர் அண்ட் எமிலி இன் பாரிஸ் ஆகிய படங்கள் மற்றும் தொடர்களும் அதிகம் பார்க்கப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கான படங்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது.
அபுனைவுக் கதைகள்
இந்த ஆண்டு, இந்தியர்கள் அபுனைவு வகை படங்களையும் அதிகம் பார்த்துள்ளனர். அபுனைவு படங்கள் 250 சதவீதம் அதிகரித்தன என்றால், ஆவணப்படங்கள் 100 சதவீதம் அதிகரித்தன.
டூ ஹாடு டு ஹாண்டில், இந்தியன் மேட்ச்மேக்கிங், மற்றும் அண்மையில் வெளியான ஃபேபுலஸ் லிவ்ஸ் ஆப் பாலிவுட் வைவ்ஸ் ஆகியவை அதிகம் விரும்பிப் பார்க்கப்பட்ட அபுனைவு படங்களாக அமைகின்றன.
ஆவணப்படங்களில், பேட் பாய் மில்லினர்ஸ், தி சோஷியல் டைலமா, மணி ஹெய்ஸ்ட் ஆகியவை அதிகம் பார்க்கப்பட்டன. சர்வதேச கதைகளும் இந்தியர்களை கவர்ந்து இழுத்தன.
"ஜெர்மனி தொடரான டார்க், காலத்தில் முன்னோக்கியும், பின்னோக்கியும் சென்று வர செய்ததோடு, ஸ்பெயின் தொடரான Money Heist, நம்மை வங்கியில் இருக்க விரும்பச்செய்தது என நெட்பிளிக்ஸ் தெரிவித்துள்ளது.
டார்க், இந்தியாவில் 95 நாட்களுக்கு தொடர்ந்து டாப் டென்னில் இருந்தது மற்றும் மணி ஹெய்ஸ்ட், 170 நாட்கள் டாப் டென்னில் இடம்பெற்றது என நெட்பிளிக்ஸ் தெரிவித்துள்ளது. The Protector என்ற டர்கிஸ் தொடர், அதிகம் விரும்பி பார்க்கப்பட்ட இந்திய மற்றும் ஆங்கில மொழி அல்லாத தொடராக அமைந்தது.
இதனிடையே, Pokémon: Mewtwo Strikes Back-Evolution, Blood of Zeus, and One-Punch Man (S2) ஆகிய அனிமேஷன் படங்களும் விரும்பிப் பார்க்கப்பட்டன.
ஆங்கிலத்தில்: சோஹினி மிட்டர் | தமிழில்: சைபர்சிம்மன்