Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

19 வயதில் 1 கோடி ரூபாய்க்கு சாக்லெட் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தும் இளைஞர்!

ஒரு பொழுதுபோக்கு ஆர்வமாக ஆரம்பித்து, இப்போது பிரபல சாக்லேட் நிறுவனமாக பரிணமித்துள்ள ‘சராம்’ ரூ.1 கோடிக்கு சாக்லெட்களை விற்பனை செய்துள்ளது.

19 வயதில் 1 கோடி ரூபாய்க்கு சாக்லெட் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தும் இளைஞர்!

Saturday August 05, 2023 , 3 min Read

கோவிட்-19 உலகை உலுக்கிய அந்த ஆண்டுகளில் முழு ஊரடங்கு, கடையடைப்பு, லாக்டவுனின் தாக்கம் என பல்வேறு தரப்பு மக்களுக்கு பலதரப்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டன. அவற்றில் இருந்து மீண்டு எழுச்சி பெற்றவர்கள் சிலரே. பாதிக்கப்பட்டு ஒன்றுமில்லாமல் போனவர்களோ பலர்.

சுமார் 15 கோடி பேர் வேலையிழந்ததாக புறத்தகவல்கள் தெரிவித்தன. ஆனால், இப்படிப்பட்ட அவநம்பிக்கை, விரக்தியான சூழ்நிலையையும் சாதகமாக்கி வாழ்க்கையில் வெற்றி கண்டவர்களின் கதைகளும் உண்டு. இப்படிப்பட்ட வாழ்க்கைக் கதைகள் உண்மையில் பலருக்கும் ஊக்கமளிக்கக் கூடியது.

இந்த வகையில் புத்தெழுச்சி பெற்று உதாரணமாகத் திகழும் திக்விஜய் என்ற 19 வயது இளைஞரின் முன்னேற்றப் பாதையை விவரிப்பதுதான் இந்தக் கட்டுரை.

ஆம்... 19 வயதில் திக்விஜய் என்னும் இளைஞர் ‘சராம்’ என்ற நிறுவனத்துக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார். இது உயர்தர சாக்லேட் உற்பத்தி நிறுவனமாகும். இந்த சாக்லெட் டெல்லி, பெங்களூரு, உதய்பூர் மற்றும் ஜெய்ப்பூரில் விற்பனையாகின்றன.

saraam

டர்னிங் பாயின்ட் ஆன லாக்டவுன்

கோவிட் லாக்டவுன் காலத்தில் மக்களில் ஆர்வமாக இயங்கும் பலரும் தங்களுக்கே உரிய பாணியில் ஆக்கப்பூர்வமான ஆர்வங்களை வளர்த்தெடுத்துக் கொண்டனர். அந்த வகையில், உதய்பூரைச் சேர்ந்த திக்விஜய் நிறைய ஓய்வு நேரத்தைக் கொண்டிருந்தார்.

மேலும், சவாலானதும் மகிழ்ச்சியானதுமான விஷயங்களுக்கு தன் ஓய்வு நேரத்தைப் பயன்படுத்த விரும்பினார். வீட்டிலேயே சாக்லேட் தயாரிக்க முடிவு செய்வதற்கு முன்பு அவர் பல விஷயங்களைப் பரிசோதித்தார். அப்போது 16 வயதாக இருந்த திக்விஜய் சிறு முயற்சியின் பலனாக தனது சொந்த பிராண்டை தொடங்கினார்.

19 வயதில் திக்விஜய்Saraamஎன்ற நிறுவனத்தின் உரிமையாளராகிவிட்டார். இந்த நிறுவனம் பீன் முதல் பார் வரை உயர்தர சாக்லேட்டை தயாரிக்கிறது. இந்த பிராண்டின் கீழ் இரண்டு டன்களுக்கும் அதிகமான சாக்லேட்கள் நாடு முழுவதும் உள்ள நுகர்வோருக்கு வழங்கப்பட்டுள்ளன. டெல்லி, பெங்களூரு, உதய்பூர் மற்றும் ஜெய்ப்பூர் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க நகரங்களில் விசுவாசமான வாடிக்கையாளர் அடித்தளத்தை உருவாக்கியுள்ளார் திக்விஜய்.

ஜாமூன், குங்குமப்பூ மற்றும் வாற்கோதுமை போன்ற பிராந்திய பழ வகைகள் மற்றும் மசாலாப் பொருட்களின் திக்விஜய்யின் பயன்பாடு, உணவுத் துறையில் நாட்டின் உயிரியல் வரலாற்றை உயர்த்தியதோடு மட்டுமல்லாமல், அவரது சாக்லேட்டுகளை எடுத்த எடுப்பிலேயே தனித்துவ ருசியாக்கி பலரும் விரும்பும் ஒரு பிராண்டாக மிளிரத் தொடங்கியது.

யூடியூப் உதவியுடன் கற்றல்

உதய்பூரில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த திக்விஜய், அவரது அர்ப்பணிப்புள்ள தந்தை தனது வாகனத் தொழிலில் கடுமையாக உழைப்பதைக் கண்டு ஏதாவது செய்ய வேண்டும் என்ற தீரா ஆவலை தனக்குள் ஏற்படுத்திக் கொண்டார். திக்விஜய் எப்போதும் வழக்கத்துக்கு மாறான ஒன்றைச் செய்ய விரும்பினார்.

saraam

கோவிட் லாக்டவுன் சமயத்தில் வீட்டிலேயே இருக்க வேண்டிய கட்டாயத்தினால் திக்விஜய் சாக்லேட்களை தயரிக்கும் முடிவை எடுத்தார். அவர் தனது உறவினரான மகாவீர் சிங்கிடம் தன் எண்ணத்தைப் பகிர்ந்து கொண்டு உற்சாகமாக அவருடன் இணைந்தார்.

ஆனால், அப்போது அவர்களில் யாருக்கும் சாக்லேட் தயாரித்த அனுபவம் இல்லை என்பதுதான் விந்தையிலும் விந்தை. 19 வயதான திக்விஜய் (அப்போது அவருக்கு 16 வயது) யூடியூப் உதவியுடன் சாக்லேட் தயாரிப்பது எப்படி என்று கற்றுக்கொண்டார்.

அப்பா மூலம் கிட்டிய ஐடியா

தனது சுவையான தயாரிப்புகளை குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் கொடுக்கத் தொடங்கினார். ஒரு தீபாவளி தினத்தன்று திக்விஜய்யின் தந்தை சாக்லேட் பாக்ஸ் ஒன்றை வீட்டுக்கு கொண்டு வந்தார். விற்கப்படும் ஒவ்வொரு காருக்கும், ஷோரூமின் உரிமையாளர் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாக்லேட் பெட்டிகளை அன்பளிப்பாக வழங்குவதை வழக்கமாகக் கொண்டதை தன் தந்தை கூற, இதிலிருந்து ஒரு யோசனையை தருவித்துக் கொண்டார். உடனேயே வாடிக்கையாளார்களுக்கு அன்பளிப்பாக தான் தயாரிக்கும் சாக்லேட்டுகள் ஏன் செல்லக் கூடாது என்று தனது கையால் செய்யப்பட்ட சாக்லேட்டுகளை விற்பது குறித்து ஹோட்டல் மற்றும் ஆட்டோ டீலர்ஷிப் உரிமையாளர்களை அணுகினார்.

இந்த முயற்சி 2021-ஆம் ஆண்டு திக்விஜய்க்கு பலனளித்தது. ஒரு கார் டீலர்ஷிப் நிறுவனம் முதலில் 1000 சாக்லேட்டுகளுக்கான ஆர்டரை திக்விஜய்க்கு வழங்கியது. அடுத்த ஆண்டே தன் நிறுவனத்திற்கு ‘சராம்’ என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார் திக்விஜய்.

Saraam chocolates

ரூ.1 கோடியை எட்டிய விற்பனை

ஒரு பொழுதுபோக்கு ஆர்வமாக ஆரம்பித்தது, நன்கு அறியப்பட்ட சாக்லேட் நிறுவனமாக பரிணமித்துள்ள சராம் நிறுவனம், 1 கோடி ரூபாய் விற்பனை செய்துள்ளது. குறிப்பாக, நாடு முழுவதும் 2 டன் சாக்லேட் இவரது நிறுவனத்தால் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்த சுவையான சாக்லேட்டுகளை உள்நாட்டுத் தயாரிப்பாகவே கொண்டு வருவதற்கு திக்விஜய் கோகோவை நாட்டின் தென் பகுதிகளான கேரளா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களிலிலிருந்து வாங்குகிறார். கூடுதலாக, கேரளா மற்றும் உதய்பூரில் இருந்து கோகம் போன்ற பழங்களை அதிகம் பயிரிடப்படும் பகுதிகளில் இருந்து வாங்குகிறார்.

உதய்பூர் மற்றும் ஜெய்ப்பூரில் உள்ள கடைகள் தவிர, சராமின் இணையதளம் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை வாடிக்கையாளர்கள் இந்த சுவையான சாக்லேட்டுகளை ஆன்லைனில் வாங்கவும் அழைக்கின்றன.

திக்விஜய்யின் கதை, ஒருவர் தன் விருப்பத்தை, ஆர்வத்தைத் தொழிலாகக் கொள்ள விரும்பும் நபர்களுக்கு ஊக்கமளிக்கும் ஓர் அகத்தூண்டல் குறித்த உண்மைக் கதையாகும்.


Edited by Induja Raghunathan