விஎஸ்.மணி & கோ நிறுவனத்தில் இசையமைப்பாளர் அனிருத் முதலீடு - இணை நிறுவனராகவும் இணைந்தார்!
தென்னிந்தியாவின் ஃபில்டர் காபி மற்றும் ஸ்னேக்ஸ் பிராண்டான வி.எஸ்.மணி & கோ நிறுவனத்தில் பிரபல திரைப்பட இசையமைப்பாளர் அனிருத் முதலீடு செய்து இணை நிறுவனராகவும், விளம்பர தூதராகவும் இணைந்துள்ளார்.
தென்னிந்தியாவின் ஃபில்டர் காபி மற்றும் ஸ்னேக்ஸ் பிராண்டான வி.எஸ்.மணி & கோ நிறுவனத்தில் பிரபல திரைப்பட இசையமைப்பாளர் அனிருத் முதலீடு செய்து இணை நிறுவனராகவும், விளம்பரத் தூதராகவும் இணைந்துள்ளார்.
ஃபில்டர் காபி மற்றும் ஸ்னேக்ஸில் கவனம் செலுத்தி வரும் வி.எஸ். மணி & கோ, ஷார்க் டாங்க் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மேலும் பிரபலமானது. மேலும், நிறுவனம் திரைப்பட பிரபலங்களின் ஆதரவையும் பெற்று வருகிறது.
கடந்த காலத்தில், திரை நட்சத்திரங்கள் ஷோபிதா துலிபாலா, ராணா டகுபதி, ரன்பீர் கபூர், திஷா பட்னி உள்ளிட்டோரிடம் இருந்து நிதி திரட்டியுள்ளது. நட்சத்திரங்களுடன் இணைந்து செயல்படுவது நிறுவனத்தை நன்கறிந்த பெயராக மாற்றியுள்ளது.

ANIRUDH
பல்வேறு நகரங்களில் செயல்பாடுகளைக் கொண்டு தென்னிந்திய சந்தையில் முதலில் கவனம் செலுத்தி வரும் இந்நிறுவனம் தற்போது, பிரபல தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் அனிருத்தை இணை நிறுவனராக இணைத்துக்கொண்டுள்ளது.
“விஎஸ் மணி & கோ நிறுவனம் எனது தலைமுறையினருக்கு முக்கியமாக அமைகிறது. நிறுவன வெற்றிக்கதையில் நானும் இணைய வேண்டும் என தீர்மானித்தேன். வாடிக்கையாளராக மட்டும் அல்லாமல், இணை நிறுவனராக, தென்னிந்திய உணவு, ஃபில்டர் காபியை மேலும் பிரபலமாக்க விரும்புகிறேன்,” என அனிருத் கூறியுள்ளார்.
”தென்னிந்திய ஃபில்டர் காபிக்கான பிராண்டை உருவாக்கிய பிறகு, இசையமைப்பாளர் அனிருத்துடன் இணைந்து செயல்படுவது உற்சாகம் அளிக்கிறது. தென்னிந்தியாவின் நாடித்துடிப்பாக விளங்கும் அனிருத் இந்த பிராண்டை பிரதிபலிக்க பொருத்தமானவர்,” என நிறுவனர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் 27 வயது முதல் 40 வயது வரை கொண்டவர்களை இலக்காகக் கொண்டு செயல்படுகிறது. சென்னை, பெங்களூரு, ஐதராபாத், மும்பை உள்ளிட்ட நகரங்கள் இதன் முன்னணி வருவாய் நகரங்களாக உள்ளன.
2020ம் ஆண்டு, ஜிடி பிரசாத், யாஷாஸ் அலூர், ரகுல் பஜாஜ் ஆகியோர் இந்நிறுவனத்தை துவக்கினர். நிறுவனம், கெட்டல்பரோ விசி, லெட்ஸ் வென்சர், ஐதராபாத் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட முதலீட்டாளர்களிடம் இருந்து 1.5 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளது.
Edited by Induja Raghunathan