ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்திற்கு சிசிபிஏ மீண்டும் நோட்டீஸ்!
நுகர்வோர் உரிமை மீறல்கள், தவறான விளம்பரங்கள் மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் ஆகிய குற்றச்சாட்டுகளின் மீதான விவரங்களைக் கோரி CCPA அக்டோபர் தொடக்கத்தில் Ola Electric நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வாடிக்கையாளர்களின் புகார்கள் குவிந்து வரும் நிலையில், மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ஓலா எலெக்ட்ரிக் மின்வாகன நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு இன்னொரு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அக்டோபர் 22 அன்று ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் பதிலைப் பற்றிய கூடுதல் ஆவணங்கள் மற்றும் தகவல்களை நுகர்வோர் கண்காணிப்பு ஆணையம் கோரியுள்ளது.
நுகர்வோர் உரிமை மீறல்கள், தவறான விளம்பரங்கள் மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் ஆகிய குற்றச்சாட்டுகளின் மீதான விவரங்களைக் கோரி CCPA அக்டோபர் தொடக்கத்தில் Ola Electric நிறுவனத்திற்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியது.
CCPA இலிருந்து பெற்ற 10,644 புகார்களில் 99.1% புகார்களை நிவர்த்தி செய்துள்ளதாக ஓலா எலக்ட்ரிக் நோட்டீஸுக்கு பதிலளித்துள்ளது. இந்த பதில் தொடர்பான கூடுதல் விவரங்களை கண்காணிப்புக் குழு இப்போது கோரியுள்ளது.
பதிலைச் சமர்ப்பிக்க மின்னஞ்சல் தொடர்பு தேதியிலிருந்து 15 நாட்கள் காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் டிசம்பர் 4 ஆம் தேதி நோட்டீஸைப் பெற்றதாக தெரிவித்தது.
ஒலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் சந்தை பங்கு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் நவம்பரில் 24.7% ஆக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.