'புதுமையாக்கத்தை ஊக்குவிக்க ஸ்டார்ட் அப் கிராண்ட் சாலஞ்ச்' - மத்திய அமைச்சர் அறிவிப்பு!
ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் 9 ஆண்டுகளை கொண்டாடும் நிகழ்ச்சியில் 'பாரத் ஸ்டார்ட் அப் கிராண்ட் சாலஞ்ச்' போட்டியை மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் அறிமுகம் செய்தார்.
ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் 9 ஆண்டுகளைக் கொண்டாடும் நிகழ்ச்சியில் 'பாரத் ஸ்டார்ட் அப் கிராண்ட் சாலஞ்ச்' போட்டியை மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் அறிமுகம் செய்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பியூஷ் கோயல்,
"இரண்டாம் அடுக்கு மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களில் ஸ்டார்ட் அப்'கள் வளர்ச்சியை ஊக்குவிப்பதே இந்த திட்டத்தின் நோக்கம் என்றார். நிதி உதவி வழிகாட்டல் மற்றும் கொள்முதல் வாய்ப்புகள் வாயிலாக இது வழங்கப்படுகிறது," என்றும் கூறினார்.
வர்த்தக நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப்'கள் இடையில் கூட்டு முயற்சி மற்றும் புதுமையாக்கத்தை ஊக்குவிப்பதை ஸ்டார்ட் அப் இந்தியா நோக்கமாகk கொண்டுள்ளது. மறுசுழற்சி எரிசக்தி, பிளாக்செயின், ரோபோடிக்ஸ், உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இதற்காக கொள்முதல் வாய்ப்பு, நிதி உதவி, வழிகாட்டுதள் வளங்கள் உள்ளிட்டவை அளிக்கப்படுகின்றன.
ஸ்டார்ட் அப் இந்தியா திட்டதின் 2026ம் ஆண்டு நிறைவின் போது, புதுமையாக்கம் மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்க அரசு, 75 துறை சார்ந்த போட்டிகளை அறிவிக்க உள்ளது. இந்த நிகழ்ச்சி, உலக அளவில் மிகப்பெரிய ஸ்டார்ட் அப் நிகழ்ச்சியாக திகழும் வகையில் 2,500க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப்கள் பங்கேற்க உள்ள ஸ்டார்ட் அப் மகாகும்பமேளா நிகழ்ச்சி அறிவிப்புக்கான மேடையாகவும் அமைந்தது.
ஏப்ரல் மாதம் பிரயாக்ராஜ் நகரில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. உலகிற்கு இந்தியாவின் திறமையை பறைச்சாற்றும் வகையில் இந்நிகழ்ச்சி, எண்ணங்கள், திறமைகள், வாய்ப்புகளின் சங்கமமாக அமையும், என்று அமைச்சர் தெரிவித்தார்.
இந்திய ஸ்டார்ட் அப் சூழலின் பரந்து விரிந்த தமையை பிரதிபலிக்கும் வகையில் ஸ்டார்ட் அப் மகாகும்பமேளா திட்டமிடப்பட்டுள்ளது. 2024ம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வில், ஆழ்நுட்பம், வேளாண் நுட்பம், நிதி நுட்பம், விண்வெளி நுட்பம், உற்பத்தி ஆகிய துறைகளுக்கான அரங்கங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்த ஆண்டு நடைபெற உள்ள நிகழ்வில், 2,500க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப்கள், சர்வதேச முதலீட்டாளர்கள், 50க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
ஸ்டார்ட் அப்'களை தொழில்துறை தலைவர்கள் மற்றும் வழிகாட்டிகளுடன் இணைக்கும் வகையில் இந்த போட்டி அமைந்துள்ளதாக அமைச்சர் நிகழ்ச்சியில் பேசும் போது தெரிவித்தார்.
“உங்கள் மாற்றத்திற்கான முகவர்களாக பார்க்கிறேன். இந்திய வளர்ச்சி கதையை வரையறுக்கக் கூடிய மனிதர்களாக உங்களை பார்க்கிறேன்,” என அவர் குறிப்பிட்டார்.
"இந்திய ஸ்டார்ட் அப்கள் ஈர்ப்புடையதாக திகழ்வதோடு, முன்னிலையும் வகிக்கின்றன என்று கூறிய அமைச்சர் கோயல் நாட்டின் அதிகரித்து வரும் யூனிகார்ன்கள் எண்ணிக்கை மற்றும் ஸ்டார்ட் அப்களுக்கான நிதிகளின் நிதி உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டினார். இந்த வளர்ச்சியில் பெண்கள் முக்கியம் என்று கூறியவர், இந்தியாவின் ஸ்டெம் பட்டதாரிகளில் 43 சதவீதம் பெண்கள் மற்றும் பாதிக்கு மேற்பட்ட ஸ்டார்ட் அப்களில் பெண்கள் இணை நிறுவனர்களாக இருக்கின்றனர் என்றும் தெரிவித்தார்.
ஆங்கிலத்தில்: சயான் சென், தமிழில்: சைபர் சிம்மன்
'தேசிய ஸ்டார்ட் அப் தினம்' - இந்திய ஸ்டார்ட் அப் சூழல் வளர்ச்சிக்கு உதவிய திட்டங்கள்!
Edited by Induja Raghunathan