இறந்த உடலை பாதுகாக்கும் புதிய தொழில்நுட்பம் - தேனி அரசு மருத்துவக் கல்லூரி அரிய கண்டுபிடிப்பு!
இறந்த உடலை பைபர் கிளாஸ் மூலம் பாதுகாக்கும் தொழில்நுட்பம் ஒன்றை தேனி அரசு மருத்துவக் கல்லூரி கண்டுப்பிடித்துள்ளது.
இறந்த உடலை பைபர் கிளாஸ் மூலம் பாதுகாக்கும் தொழில்நுட்பம் ஒன்றை தேனி அரசு மருத்துவக் கல்லூரி கண்டுப்பிடித்துள்ளது. இறந்த உடலை ஆராய்ச்சி மற்றும் மருத்துவக் கல்விக்காக இந்த தொழில்நுட்பம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
உடல் பாகங்கள் மற்றும் முழு உடலை பைபர் கிளாஸ் எம்பெட்டிங் முறையில் பாதுகாக்கும் தொழில்நுட்பத்தை தற்போது கண்டுபிடித்து அசத்தியுள்ளது தேனி மருத்துவக் கல்லூரி.
"இந்தத் தொழில் நுட்பம் மூலம் உடலை வருடக் கணக்கில் பாதுகாத்து வைக்க முடியும் என்று கூறிய முதல்வர் பால சங்கர், இறந்த உடலை பாதுகாப்பதற்காக பைபர் கிளாஸ் எம்பெட்டிங் என்ற புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்ததாகவும் இதற்காக பிசின் என்ற ரசாயன பொருள் பிளாஸ்டினேசன் செய்யப்பட்ட உடல் மீது உயர் வெப்பத்தில் ஊற்றி மிகவும் குறைவான வெப்பம் அதாவது, சுமார் 20 டிகிரி சென்டி கிரேட் உள்ள அறையில் 24 மணி நேரம் வைக்கப்பட்டு பின் உலரச் செய்யப்படும் என்றும் இம்முறையில் பாதுகாக்கப்படும் உறுப்புகள் மற்றும் உடல்களை எளிதில் அழிக்க முடியாதவை," என்றும் கூறியுள்ளார்.
இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் உடல்களை ஆண்டுக்கணக்கி பாதுகாக்க முடியும், சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்காதது என்றார். மேலும் இத் தொழில்நுட்பத்தினால் பக்க விளைவுகள் இல்லை. குறைபாடு உள்ள சிசுக்கள், அறுவை சிகிச்சை செய்யப்பட்ட வேண்டாத மனித உறுப்புகள், குறுக்கு வெட்டு மாதிரிகள் போன்றவற்றையும் இம்முறையில் பாதுகாத்து மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்காக பயன்படுத்தலாம் என்று கூறிய முதல்வர் பால சிங்கம் இந்தக் கண்டுபிடிப்புக்காக காப்புரிமை கேட்டு விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தேனியில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கடந்த 2004-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு சிக்கலான அறுவைசிகிச்சைகள் உயர் தொழில்நுட்பத்துடன் மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல் உதவி: காமதேனு