Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

வங்கிகளில் உரிமைக் கோரப்படாத ரூ.1 லட்சம் கோடி - வாடிக்கையாளர்கள் பணத்தை எடுக்க ஆர்.பி.ஐ புதிய அறிக்கை!

பொதுப் பணம் ரூ.1 லட்சம் கோடி செயல்படாத வங்கிக் கணக்குகளில் சிக்கியுள்ளது. அதில், ரூ.42,200-க்கும் அதிகமான தொகை கோரப்படாத டெபாசிட்களில் மட்டும் உள்ளது.

வங்கிகளில் உரிமைக் கோரப்படாத ரூ.1 லட்சம் கோடி - வாடிக்கையாளர்கள் பணத்தை எடுக்க ஆர்.பி.ஐ புதிய அறிக்கை!

Tuesday December 10, 2024 , 2 min Read

கடந்த வாரம் மக்களவையில் வங்கிச் சட்டங்களில் பல புதிய திருத்தங்களை நிறைவேற்றியது. இதில் ரிசர்வ் வங்கிச் சட்டமும் அடங்கும். ரிசர்வ் வங்கி சட்டம் உட்பட வங்கி அமைப்பை நிர்வகிக்கும் தற்போதைய சட்டங்களில் 19 திருத்தங்களை கொண்டு வந்தது.

ஆனால், அறிமுகப்படுத்தப்பட்ட 19 திருத்தங்களில், இரண்டு மட்டுமே சாமானிய மக்களுக்கு உண்மையான சேவையில் நீண்ட தூரம் செல்லத்தக்கதாக உள்ளன. இதில் இதுவரை யாரும் உரிமை கோராத ரூ.1 லட்சம் கோடி டெபாசிட் தொகைக்கான சட்டத்திருத்தம் சாமானிய மக்களுக்கானது.

பொதுப் பணம் ரூ.1 லட்சம் கோடி செயல்படாத வங்கிக் கணக்குகளில் சிக்கியுள்ளது, அதில் ரூ.42,200-க்கும் அதிகமான தொகை கோரப்படாத டெபாசிட்களில் மட்டும் உள்ளது.

Rupee

இந்த மசோதா நிறைவேற்றப்படுவதற்கு ஒரு நாள் முன்பு, ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளின் தலைவர்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது, பணத்தைத் திரும்பப்பெறுவதற்கான வழிமுறைகளை அவ்வப்போது மதிப்பாய்வு செய்வது போக, வாரியத்தால் கண்காணிக்கப்படும் ஒரு முறையை உருவாக்கக் கோரியுள்ளது.

உரிமை கோரப்படாத வைப்புத்தொகைகள் மற்றும் செயல்படாத வங்கிக் கணக்குகளில் சிக்கியவை மற்றும் உரிமை கோரப்படாத ஈவுத்தொகை மற்றும் பங்குகள் போன்ற பிற நிதிக் கருவிகளில் இழந்த பணம் கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் கீழ் முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதிக்கு மாற்றப்படும் என்று கூறுவதைத் தவிர, மாற்றங்களின் செயல்பாட்டு பகுதியை மசோதா விவரிக்கவில்லை.

ஒரு வங்கிக் கணக்கு வைத்திருப்பவர் ஒரே நேரத்தில் நான்கு நாமினிகளை உருவாக்கவும் இந்த மசோதா அனுமதிக்கிறது, இதனால் வாரிசுகளோ அல்லது மற்ற உரிமைதாரரோ உண்மையான கணக்கு வைத்திருப்பவர் உயிரோடு இல்லாத நிலையில் நிலையான வைப்புத்தொகை உள்ள ஒருவர் நிதியை எடுக்க முடியும்.

ஒரு கணக்கு வைத்திருப்பவர் ஒரே சமயத்தில் நாமினிகளையோ அல்லது ஒவ்வொரு நாமினிக்கும் இருக்கும் தொகையில் எவ்வளவு கொடுக்கப்பட வேண்டும் என்பதையும் தெரிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. அல்லது முன் வரையறுக்கப்பட்ட வரிசையில் நாமினிகள் மரபுரிமையாக பணத்தைப் பெற முடியும்.

இச்சட்டத் திருத்தங்கள் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறும்போது செயல்பாட்டு விவரங்கள் வெளியிடப்படும், பின்னர், கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தால் பிரிவு வாரியாக திருத்தங்கள் விளக்கப்படும்.

digital onboarding

செயல்படாத வங்கிக்கணக்கு - நடவடிக்கை என்ன?

  • கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அவர்களின் கணக்குகளின் செயலற்ற தன்மை அல்லது கோரப்படாத டெபாசிட்களை எஸ்எம்எஸ் அல்லது மின்னஞ்சல் மூலம் வங்கிகள் தானாகவே தெரிவிக்கும் செயல்முறையை வகுத்துள்ளது.

  • முழுமையான விண்ணப்பத்தைப் பெற்ற மூன்று வேலை நாட்களுக்குள் செயல்படாத கணக்குகள் அல்லது கோரப்படாத வைப்புகளை செயல்படுத்துவதற்கான கோரிக்கைகளை வங்கிகள் செயல்படுத்த வேண்டும்.

  • ஒரு வருடத்திற்கும் மேலாக வாடிக்கையாளர் பரிவர்த்தனைகள் இல்லாத கணக்குகளின் வருடாந்திர மதிப்பாய்வுகளை வங்கிகள் நடத்தி அத்தகைய மதிப்பாய்வு விவரங்களை வங்கியில் உள்ள போர்டு-நிலை நபரிடம் தெரிவிக்கப்பட வேண்டும்.

ரிசர்வ் வங்கி சில ஆண்டுகளுக்கு முன்பு 'உத்கம்' என்ற பிரத்யேக ஆன்லைன் தளத்தை உருவாக்கி, பதிவு செய்த பயனர்களுக்கு பல வங்கிகளில் இருந்து கோரப்படாத டெபாசிட்கள் மற்றும் கணக்குகளைத் தேட உதவுகிறது.

ஒவ்வொரு உரிமைகோரப்படாத கணக்கு அல்லது டெபாசிட்டுக்கும் தனிப்பட்ட UDRN எண் உருவாக்கப்பட வேண்டும் என்று வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கணக்கு வைத்திருப்பவரின் வங்கிக் கிளையை மூன்றாம் தரப்பினர் அடையாளம் காண்பது தடுக்கப்படுகிறது.