Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

Stock News: சென்செக்ஸ் 84,000-ஐ கடந்து சாதனை - பங்குச் சந்தையில் புதிய வரலாறு!

மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் குறியீட்டு எண் 84,000 புள்ளிகளைக் கடந்து, இந்தியப் பங்கு வர்த்தகத்தில் புதிய வரலாறு படைத்துள்ளது. நிஃப்டியும் புதிய உச்சம் கண்டுள்ளது.

Stock News: சென்செக்ஸ் 84,000-ஐ கடந்து சாதனை - பங்குச் சந்தையில் புதிய வரலாறு!

Friday September 20, 2024 , 1 min Read

மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் குறியீட்டெண் 84,000 புள்ளிகளைக் கடந்து, இந்தியப் பங்கு வர்த்தகத்தில் புதிய வரலாறு படைத்துள்ளது. நிஃப்டியும் புதிய உச்சம் கண்டுள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று (செப்.20) காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 439.75 புள்ளிகள் உயர்ந்து 83,624.55 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 132.05 புள்ளிகள் உயர்ந்து 25,547.85 ஆக இருந்தது.

கடந்த இரு தினங்களாக சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் புதிய உச்சங்களை எட்டியடி, இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் பாசிட்டிவ் வைப் உடன் தொடர்வது முதலீட்டாளர்களுக்கு உத்வேகத்தை அளித்துள்ளது. குறிப்பாக, மிகச் சிலவற்றைத் தவிர, ஏறக்குறைய அனைத்து நிறுவனப் பங்குகளின் நிலவரத்திலும் பச்சை விளக்கு எரிவது கவனிக்கத்தக்கது.

முற்பகல் 11.45 மணியளவில் சென்செக்ஸ் 972.85 (1.17%) உயர்ந்து 84,157.65 ஆகவும், நிஃப்டி 294.89 புள்ளிகள் (1.16%) உயர்ந்து 25,710.60 ஆகவும் ஏற்றம் கண்டிருந்தது.

காரணம் என்ன?

அமெரிக்க ஃபெடரல் வங்கி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வட்டி விகிதத்தை 50 bps அடிப்படையில் குறைத்துள்ளது, சர்வதேச அளவிலான பங்கு வர்த்தகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க பங்குச் சந்தையில் மிகப் பெரிய ஏற்றத்துடன் வர்த்தகம் நிறைவடைந்துள்ளது. அதேபோல், சியோல், டோக்கியோ, ஹாங்காங் என ஆசிய பங்குச் சந்தைகளிலும் சாதகமான சூழல் நீடித்து வருகிறது. இதன் எதிரொலியாக, இந்தியப் பங்குச் சந்தைகளிலும் எழுச்சி தொடர்ந்துள்ளது. குறிப்பாக, இந்தியப் பங்குச் சந்தைகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆர்வம் மிகுதியாகி இருக்கிறது.

bse

ஏற்றம் காணும் பங்குகள்:

ஜேஎஸ்டபிள்ய்யூ ஸ்டீல்

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா

மாருதி சுசுகி

எல் அண்ட் டி

டாடா ஸ்டீல்

ஐசிஐசிஐ பேங்க்

நெஸ்லே இந்தியா

பார்தி ஏர்டெல்

ஐடிசி

இறங்கு முகம் காணும் பங்குகள்:

என்டிபிசி

டிசிஎஸ்

ஆக்சிஸ் பேங்க்

ரூபாய் மதிப்பு

இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 பைசா உயர்ந்து ரூ.83.56 ஆக இருந்தது.


Edited by Induja Raghunathan