Stock News: சரியுது... ஏறுது... பங்குச் சந்தையில் தொடரும் நிலையின்மை...
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை நிலவரப்படி, 7.21 புள்ளிகள் குறைந்து 81,758.60 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டிகுறியீடு சுமார் 5 புள்ளிகள் உயர்ந்து 24,703.25 புள்ளிகளாகவும் உள்ளன.
இந்திய பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் வெள்ளிக்கிழமையான இன்று (06-12-2024) சரிவுத் தொடக்கம் கண்டு பிறகு மீண்டு தற்போது மீண்டும் குறையத் தொடங்கி பிறகு சற்றே உயர்ந்து, ஆட்டத்துடன் தொடங்கியுள்ளது. சென்செக்ஸ் 7 புள்ளிகளும் தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு 5 புள்ளிகளும் பின்னடைவு கண்டுள்ளது.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை 10:41 மணி நிலவரப்படி, 7.21 புள்ளிகள் குறைந்து 81,758.60 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு சுமார் 5 புள்ளிகள் உயர்ந்து 24,703.25 புள்ளிகளாகவும் உள்ளன.
நிப்டி பேங்க் குறியீடு இன்று 83 புள்ளிகள் உயர நிப்டி ஐடி குறியீடு 140 புள்ளிகள் சரிவு கண்டது. பிஎஸ்இ ஸ்மால் கேப் 162 புள்ளிகள் அதிகரித்தது. ஸ்ரீராம் பைனான்ஸ், அதானி போர்ட்ஸ் பங்குகள் லாபம் அடைந்துள்ளன.
காரணம்:
மத்திய ரிசர்வ் வங்கி ஜிடிபி குறைவு நிலவரங்கள் காரணமாக ரெபோ ரேட்டை 50 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது. இதோடு முதலீட்டாளர்கள் மீடியா, ரியால்டி பங்குகளை விற்று வருவதால் பங்குச் சந்தை ஏற்ற நிலை பின்னடைவு கண்டு தற்போது மீண்டும் உயர்ந்து வருகிறது.
ஏற்றம் கண்டுவரும் பங்குகள்:
பஜாஜ் ஆட்டோ
பீபிசிஎல்
ஐடிசி
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
எய்ஷர் மோட்டார்ஸ்
இறக்கம் கண்ட பங்குகள்:
சிப்லா
ஹெச்.டி.எஃப்.சில் பேங்க்
டாடா மோட்டார்ஸ்
டிசிஎஸ்
அல்ட்ரா டெக் சிமெண்ட்
இந்திய ரூபாயின் மதிப்பு:
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு லேசாக பின்னடைவு கண்டு டாலர் ஒன்றுக்கு இன்று ரூ.84.74 ஆக உள்ளது