Stock News: பங்குச் சந்தை சரிவு முகம் - சென்செக்ஸ் 200+ புள்ளிகள் பின்னடைவு!
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை நிலவரப்படி, 252.29 புள்ளிகள் குறைந்து 81,456.83 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு சுமார் 85.60 புள்ளிகள் குறைந்து 24,592.20 புள்ளிகளாகவும் உள்ளன.
இந்திய பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் திங்கட்கிழமையான இன்று (09-12-2024) சரிவுத் தொடக்கம் கண்டுள்ளன. சென்செக்ஸ் 250 புள்ளிகளும் தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு 85 புள்ளிகளும் பின்னடைவு கண்டுள்ளது.
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை 10:14 மணி நிலவரப்படி, 252.29 புள்ளிகள் குறைந்து 81,456.83 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு சுமார் 85.60 புள்ளிகள் குறைந்து 24,592.20 புள்ளிகளாகவும் உள்ளன.
நிப்டி பேங்க் குறியீடு இன்று 82.20 புள்ளிகள் குறைய நிப்டி ஐடி குறியீடு 88 புள்ளிகள் சரிவு கண்டது. பிஎஸ்இ ஸ்மால் கேப் 100 புள்ளிகள் அதிகரித்தது. மிட்கேப் புள்ளிகளும் சற்றே உயர்ந்து காணப்படுகின்றன.
காரணம்:
சரிவுக்குக் காரணம் முதலீட்டாளர்களின் ஆர்வமின்மையே என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால், ஃபாரின் போர்ட்போலியோ முதலீட்டாளர்களின் ஆதரவுடன் மீண்டும் உயர்வு நிலைக்குத் திரும்பி விடும் என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.
ஏற்றம் கண்டுவரும் பங்குகள்:
லார்சன்
பிஎஸ்இ லிமிடெட்
ஹெ.டி.எஃப்.சி. பேங்க்
ஏஞ்சல் ஒன்
ஹிந்துஸ்டான் ஏரோன்
கல்யாண் ஜுவெல்லர்ஸ்
இறக்கம் கண்ட பங்குகள்:
ரிலையன்ஸ்
காத்ரெஜ் கன்ஸ்யூமர்
டாடா மோட்டார்ஸ்
சொமேட்டோ
ஹெச்.யு.எல்
இந்திய ரூபாயின் மதிப்பு:
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று டாலர் ஒன்றுக்கு இன்று ரூ.84.73ஆக உள்ளது.