Stock News: சரிவில் இருந்து மீளும் பங்குச் சந்தை - சென்செக்ஸ் சற்றே உயர்வு!
கடந்த வாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்த இந்திய பங்குச் சந்தையில், வாரத்தின் தொடக்க நாளான இன்று சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் சரிவில் இருந்து சற்றே மீளத் தொடங்கியுள்ளன.
கடந்த வாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்த இந்திய பங்குச் சந்தையில், வாரத்தின் தொடக்க நாளான இன்று சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் சரிவில் இருந்து சற்றே மீளத் தொடங்கியுள்ளன.
மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் வெள்ளிக்கிழமை வர்த்தகம் நிறைவடைந்தபோது, சென்செக்ஸ், நிஃப்டி முறையே 1.24% மற்றும் 1.17% வீழ்ச்சி கண்டன. இதனால், முதலீட்டாளர்களின் பங்கு மதிப்பு ரூ.5 லட்சம் கோடி அளவில் குறைந்து, ரூ.460.46 லட்சம் கோடியாக இருந்தது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (செப்.9) காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 281.74 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 80,902.19 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 81.45 புள்ளிகள் சரிந்து 24,770.70 ஆக இருந்தது.
இதனால், முதலீட்டாளர்களிடையே இன்று ஆரம்பமே கலக்கமாக இருந்தது. ஆனால், உடனடியாக இந்தியப் பங்குச் சந்தைகள் மீளத் தொடங்கின.
முற்பகல் 11.30 மணியளவில் சென்செக்ஸ் 146.31 புள்ளிகள் (0.18%) உயர்ந்து 81,330.24 ஆக இருந்தது. அப்போது, நிஃப்டி 27.20 புள்ளிகள் (0.11%) உயர்ந்து 24,879.35 ஆக இருந்தது.
காரணம் என்ன?
சர்வதேச பங்குச் சந்தைகளின் நிலவரம், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஆர்வமின்மை உள்ளிட்ட காரணங்களால் தாக்கம் ஏற்பட்டாலும், உள்ளூர் முதலீட்டாளர்கள் நம்பிக்கையுடன் முக்கியப் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுவதால் இந்தியப் பங்குச் சந்தைகளில் ஒரளவு மீட்சி நிலவுகிறது.
ஏற்றம் காணும் பங்குகள்:
ஐசிஐசிஐ பேங்க்
ஹிந்துஸ்தான் யூனிலீவர்
ஐடிசி
கோடாக் மஹேந்திரா பேங்க்
ஹெச்சிஎல் டெக்னாலஜ்ஜிஸ்
இன்ஃபோசிஸ்
டிசிஎஸ்
இண்டஸ் இண்ட் பேங்க்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
ஆக்சிஸ் பேங்க்
சன் பார்மா இண்டஸ்ட்ரீஸ்
ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல்
நெஸ்லே இந்தியா
விப்ரோ
டைட்டன்
மாருதி சுசுகி
டாடா ஸ்டீல்
இந்திய ரூபாய் மதிப்பு
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு பெரிதாக மாற்றமின்றி டாலர் ஒன்றுக்கு இன்று ரூ.83.94 ஆக உள்ளது.
Edited by Induja Raghunathan