Stock News: சென்செக்ஸ் 350 புள்ளிகள் சரிவு- ஐடி குறியீடும் கடும் சரிவு...
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை 246 புள்ளிகள் சரிந்து 77,334.27. புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு சுமார் 78 புள்ளிகள் சரிந்து 23,455 புள்ளிகளாகவும் உள்ளன.
இந்திய பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் திங்கட்கிழமையான இன்று (18-11-2024) சரிவுத் தொடக்கம் கண்டுள்ளன. சென்செக்ஸ் சுமார் 350 புள்ளிகளும் தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு 64 புள்ளிகளும் சரிந்தன.
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை 10:05 மணி நிலவரப்படி, 246 புள்ளிகள் சரிந்து 77,334.27. புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி 50 குறியீடு சுமார் 78 புள்ளிகள் சரிந்து 23,455 புள்ளிகளாகவும் உள்ளன.
நிப்டி பேங்க் குறியீடு இன்று 129.15 புள்ளிகள் உயர, நிப்டி ஐடி குறியீடு 1044 புள்ளிகளும் பிஎஸ்இ ஸ்மால் கேப் 300 புள்ளிகளும் சரிவு கண்டன. மும்பைப் பங்குச் சந்தையின் மிட் கேப் குறியீடும் கண்டுஉயர்வு கண்டுள்ளது.
காரணம்:
தேசியப் பங்குச் சந்தையின் ஐடி குறியீடு இன்று 1044 புள்ளிகள் சரிவடைந்து பங்குச் சந்தையை சரிவுத் தொடக்கம் காணச் செய்துள்ளன. மேலும், அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தைக் குறைப்பதில் அவசரப்படப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளது. உலகப்பங்குச் சந்தைகளில் தாக்கம் செலுத்துகிறது. இன்று இந்தியப் பங்குச் சந்தை போகப்போக உயர்வு காணலாம் என்று பங்குச் சந்தை நிபுணர்கள் கருதுகின்றனர்.
ஏற்றம் கண்டுவரும் பங்குகள்:
ஹீரோ மோட்டோகார்ப்
ஹிண்டால்கோ
ஹெச்டிஎஃப்சி
பஜாஜ் பைனான்ஸ்
கோல் இந்தியா
இறக்கம் கண்ட பங்குகள்:
டாக்டர் ரெட்டீஸ் லேப்
இன்போசிஸ்
விப்ரோ
அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ்
ஹெச்.சி.எல். டெக்
இந்திய ரூபாயின் மதிப்பு அனைத்து கால சரிவு:
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு டாலர் ஒன்றுக்கு இன்று ரூ.84.38 ஆக உள்ளது.