Stock News: வலுவாகத் தொடங்கிய பங்குச் சந்தை - ஸ்ரீராம் பைனான்ஸ், அதானி போர்ட்ஸ் ஏற்றம்!
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை நிலவரப்படி, 270.67 புள்ளிகள் உயர்ந்து 80,518.75 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டிகுறியீடு சுமார் 78.40 புள்ளிகள் உயர்ந்து 24,377 புள்ளிகளாகவும் உள்ளன.
இந்திய பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் செவ்வாய்க்கிழமையான இன்று (03-12-2024) உயர்வுத் தொடக்கம் கண்டுள்ளன. சென்செக்ஸ் தொடக்க நிலவரங்களின் படி, சுமார் 270 புள்ளிகள் உயர்ந்தது. தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு 24,300 புள்ளிகளைக் கடந்தது.
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை 10:15 மணி நிலவரப்படி, 270.67 புள்ளிகள் உயர்ந்து 80,518.75 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு சுமார் 78.40 புள்ளிகள் உயர்ந்து 24,377 புள்ளிகளாகவும் உள்ளன.
நிப்டி பேங்க் குறியீடு இன்று 479 புள்ளிகளும் நிப்டி ஐடி குறியீடு 157 புள்ளிகளும் பிஎஸ்இ ஸ்மால் கேப் 576 புள்ளிகளும் அதிகரித்துள்ளன. ஸ்ரீராம் பைனான்ஸ், அதானி போர்ட்ஸ் பங்குகள் லாபம் அடைந்துள்ளன.
காரணம்:
உலகப் பங்குச் சந்தைகளின் பாசிட்டிவ் ட்ரெண்ட்டினால் முதலீட்டாளர்களின் பங்குச் சந்தை முதலீடு ஆர்வம் அதிகரித்துள்ளமையே இன்றைய உயர்வுக்குக் காரணம்.
ஏற்றம் கண்டுவரும் பங்குகள்:
சிப்ளா
ஸ்ரீராம் பைனான்ஸ்
அதானி போர்ட்ஸ்
எஸ்பிஐ
ஓ.என்.ஜி.சி
இறக்கம் கண்ட பங்குகள்:
ஐடிசி
ட்ரெண்ட்
பார்தி ஏர்டெல்
ஹிண்டால்கோ
சன் பார்மா
இந்திய ரூபாயின் மதிப்பு அனைத்து கால சரிவு:
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு பலவீனமடைந்து டாலர் ஒன்றுக்கு இன்று ரூ.84.74 ஆக உள்ளது.