Stock News: பங்குச் சந்தையில் பலத்த அடி - சென்செக்ஸ் 600+ புள்ளிகள் வீழ்ச்சி!
கடந்த மூன்று நாட்களாக ஏற்றம் கண்டு வந்த இந்தியப் பங்குச் சந்தையில் பெரும் வீழ்ச்சி நிலவி வருகிறது. சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் கடும் சரிவை சந்தித்துள்ளன.
கடந்த மூன்று நாட்களாக ஏற்றம் கண்டு வந்த இந்தியப் பங்குச் சந்தையில் பெரும் வீழ்ச்சி நிலவி வருகிறது. சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் கடும் சரிவை சந்தித்துள்ளன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (ஜன.17) காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 485 புள்ளிகள் சரிந்து 76,557.79 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 144.75 புள்ளிகள் சரிந்து 23,167.05 ஆக இருந்தது.
கடந்த மூன்று தினங்களாக மீண்டு வந்த பங்குச் சந்தை இப்போது மீண்டும் கடும் வீழ்ச்சி நோக்கி நகர்வது, முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இன்று முற்பகல் 11.10 மணியளவில் சென்செக்ஸ் 669.69 புள்ளிகள் (0.87%) சரிந்து 76,373.13 ஆகவும், நிஃப்டி 176.60 புள்ளிகள் (0.76%) சரிந்து 23,135.20 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை வர்த்தகம் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் சியோல், டோக்கியோ, பங்குச் சந்தைகளில் வீழ்ச்சியும், ஹாங்காங் மற்றும் ஷாங்காய் பங்குச் சந்தைகளில் ஏற்றமும் நிலவியது. வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஆர்வம் குறைந்தது, சர்வதேச போக்குகளின் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தைகளில் மீண்டும் வீழ்ச்சி நிலவுகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பும் மிளவில்லை.
ஏற்றம் காணும் பங்குகள்:
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
நெஸ்லே இந்தியா
ஏசியன் பெயின்ட்ஸ்
ஐடிசி
ஹிந்துஸ்தான் யூனிலீவர்
டாடா ஸ்டீல்
டாடா மோட்டார்ஸ்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
என்டிபிசி
டைட்டன் கம்பெனி
பாரதி ஏர்டெல்
மாருதி சுசுகி
பஜாஜ் ஃபைனான்ஸ்
எஸ்பிஐ
ஹெச்டிஎஃப்சி பேங்க்
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, 3 பைசா குறைந்து ரூ.86.58 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan