‘ஆங்கிலம் பேசத் தெரியவில்லை’ - கிண்டல், கேலியை தாண்டி IAS ஆகி அசத்தும் சுரபி கெளதம்!
சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெறுவது பல மாணவர்கள் ஆண்டுதோறும் முயற்சி செய்கிறார்கள், ஆனால் அவர்களில் சிலர் மட்டுமே தேர்ச்சி பெறுகிறார்கள். யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு தேர்வர்களும் வெவ்வேறு மாதிரியான யுக்திகளை கையாள்கிறார்.
சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெறுவது பல மாணவர்கள் ஆண்டுதோறும் முயற்சி செய்கிறார்கள், ஆனால், அவர்களில் சிலர் மட்டுமே தேர்ச்சி பெறுகிறார்கள். யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு தேர்வர்களும் வெவ்வேறு மாதிரியான யுக்திகளை கையாள்கிறார்.
இப்படி கடுமையாக முயன்று ஐஏஎஸ் அதிகாரியானவர் சுரபி கவுதம். தனது திறமைக்கு ஏற்ப தன்னை வழிநடத்தி முதல் முயற்சியிலேயே ஐஏஎஸ் அதிகாரியுள்ளார். தற்போது சிவில் சர்வீஸ் தேர்விற்கு முயன்று வரும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு உத்வேகம் அளித்து வருகிறார்.
யார் அந்த சுரபி கெளதம்?
மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த சுரபி கௌதம் சிறுவயதிலிருந்தே புத்திசாலித்தனமான மாணவராக வலம் வந்தவர். இவரது தந்தை சிவில் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும், தாயார் ஆசிரியையாகவும் பணியாற்றுள்ளனர்.
சுரபி தனது பள்ளிப் பருவத்தில் இருந்தே வகுப்பில் முதலிடம் பிடித்து வந்துள்ளார். குறிப்பாக 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் டியூசன், ஸ்பெஷ்ல் கோச்சிங் போன்ற எந்தவித உதவியும் இன்றி 90 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளார்.
பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, சுரபி மாநில பொறியியல் நுழைவுத் தேர்வில் கலந்துகொண்டு தேர்வில் வெற்றி பெற்றார். இதனையடுத்து, மேற்படிப்புக்காக நகரத்திற்கு இடம் பெயர்ந்தார்.
தனது கிராமத்தில் இருந்து நகரத்திற்கு படிக்கச் சென்ற முதல் பெண் சுரபி கெளதம் தான். போபாலில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்ஸ் துறையில் பொறியியல் முடித்தார், அங்கு அவர் பல்கலைக்கழகத்தில் முதலிடம் பெற்றார் மற்றும் அவரது செயல்திறனுக்காக தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
போட்டித் தேர்வுகளில் கலக்கிய சுரபி:
யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வில் கலந்து கொள்வதற்கு முன்பு, பல்கலைக்கழகத்தில் முதலிடம் மற்றும் தங்கப் பதக்கம் வென்றார். இதனையடுத்து, சுரபி கவுதம் பல தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளார். சுரபி கௌதம் BARCல் அணு விஞ்ஞானியாக ஓராண்டு பணியாற்றியவர்.
கேட், இஸ்ரோ, செயில், எம்பிபிஎஸ்சி, பிசிஎஸ், எஸ்எஸ்சி சிஜிஎல், டெல்லி போலீஸ் மற்றும் எஃப்சிஐ போன்ற தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றுள்ளார். இது மட்டுமின்றி, 2013ல் நடந்த ஐஏஎஸ் தேர்வில் ஏஐஆர் 1 கிரேடு பெற்றுள்ளார்.
மோசமான ஆங்கிலத்திற்காக கிண்டல்:
பள்ளி முதல் கல்லூரி வரை அனைத்திலும் முதலிடம், எழுதிய போட்டித் தேர்வுகளில் எல்லாம் வெற்றி என பலவகையில் திறமைசாலியாக இருந்தாலும், ஆங்கிலத்தில் சரியாக பேச முடியாததால் சுரபி கெளதம் நிறைய கேலி, கிண்டல்களை சந்திக்க வேண்டியிருந்தது.
ஆங்கிலம் சரியாகப் பேசாததால் வகுப்பில் பலமுறை கேலி செய்யப்பட்டார். ஆனாலும், அவள் நம்பிக்கையை இழக்கவில்லை, அவளுடைய வெற்றியின் மூலம் அதை அவர்களுக்குத் திரும்பக் கொடுக்கத் முடிவெடுத்தார்.
தன் கருத்தை மற்றவருக்குப் புரிய வைக்கும் அளவுக்கு மொழியைக் கற்றுக் கொண்டால் தான் சிறந்த நிலையைப் பெற முடியும் என்பதை சுரபி அறிந்து கொண்டார். அதனால், தினமும் 10 புதிய வார்த்தைகளை ஆங்கிலத்தில் கற்க ஆரம்பித்தாள்.
இதற்கிடையில், அவர் கடுமையாக உழைத்து ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றார், 2016 ஆம் ஆண்டில் ஏஐஆர் 50 மூலம் வெற்றி பெற்று ஐஏஎஸ் அதிகாரியானார்.
ஐஏஎஸ் அதிகாரியான சுரபி கெளதம்:
சுரபி கௌதம் ஐஏஎஸ், தன் வாழ்வில் உள்ள அனைத்து தடைகளையும் தாண்டி, யுபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகும் பணியில் முழு ஈடுபாட்டையும் அர்ப்பணிப்பையும் அளித்து, தானே படித்து, முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றவர்.
ஐ.ஏ.எஸ் அதிகாரியான பிறகு அவரது கடின உழைப்புக்கு பலன் கிடைத்தது. தற்போது தன்னை முன்னூதரணமாக எடுத்துக்கொண்டு பலரும் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு முயற்சித்து வரும் அளவிற்கு தூண்டுகோலாக மாறியுள்ளார்.
சுரபி கெளதமின் கதை நமக்கு உணர்த்துவது ஒன்றை மட்டுமே எதையும் விட்டுக்கொடுக்காமல் முன்னேறினால், வாழ்க்கையில் நமது இலக்குகளை அடையலாம்.