Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

3ம் 'அனைத்துலக தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு' அறிவிப்பு!

இம்மாநாட்டில் மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, உள்ளிட்ட 35க்கும் மேலான உலக நாடுகளிலிருந்து தமிழ்த் தொழிலதிபர்கள் கலந்துகொண்டு, திறனாளர்களை சந்தித்து, தொழில்- வணிக உறவுகளை உருவாக்கிக் கொள்ள உள்ளனர்.

3ம் 'அனைத்துலக தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு' அறிவிப்பு!

Saturday September 21, 2019 , 2 min Read

மூன்றாம் ’உலகத்தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு’ இவ்வாண்டு நவம்பர் 14, 15, 16 தேதிகளில் சென்னை நுங்கம்பாக்கம் ’மகளிர் கிறித்தவக் கல்லூரி’ அரங்கில் நடைபெற இருக்கிறது.


மலேசியா, சிங்கப்பூர், மியான்மார், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, தென் ஆப்ரிக்கா, பிரித்தானியா, ஜெர்மனி, நார்வே, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஒமான், கத்தார், குவைத், பஹ்ரைன், சிறிலங்கா, மொரிசியஸ் உள்ளிட்ட 35க்கும் மேலான உலக நாடுகளிலிருந்து வரும் தமிழ்த் தொழிலதிபர்கள்- திறனாளர்களை சந்திக்கவும், தொழில்- வணிக உறவுகள் உருவாக்கிக் கொள்ளவும் அரிய வாய்ப்பாக இம் மாநாடு அமையும் என ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Rise

’எழுமின்’ (Rise) அமைப்பினை நிறுவியவர் அருட்திரு தமிழ்ப்பணி ஜெகத் கஸ்பார் அவர்கள். அதன் இந்தியத் தலைவர் மூத்த வழக்கறிஞர் திரு.காந்தி, ஆகியோர் இம்மாநாட்டின் அறிவிப்பினை செயிதியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டனர்.


மூன்றாம் ’உலகத்தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு’ பற்றி பேசிய ஜெகத் கஸ்பர், இம்முறை போட்ஸ்வானா, நமீபியா, ஃபிஜி தீவுகள் போன்ற சிறிய நாடுகளிலிருந்தும் தமிழ் தொழிலதிபர்கள் கலந்து கொள்ள உள்ளனர் என்றார்.

“35 நாடுகளைச் சேர்ந்த புலம் பெயர்ந்த, மற்றும் பல ஆண்டுகளாக சிறியது முதல் பெரிய தொழில் சாம்ராஜ்யத்தை கட்டமைத்த தமிழர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பிப்பார்கள். இதன் மூலம் சிறு, குறு தொழில் முனைவர்களிடையே சுமார் 300 தொழில் வணிகப் புரிந்துமை ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்ப்பாக்கிறோம்,” என்றார்.

எழுமின் அமைப்பு முதல் உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாட்டினை கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் மதுரை மாநகரிலும், இரண்டாம் மாநாட்டினை மலேசியா கோலாலம்பூர் சைபர் ஜயா பல்கலைக் கழகத்திலும் நடத்தின. அதைத்தொடர்ந்து 3வது முறையாக சென்னையில் நடக்கவிருக்கும் இம்மாநாடு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களோடு பிரம்மாண்டமாக நடைப்பெறும் என்று தெரிவித்தார்.


எழுமின் அமைப்பின் ஆசிய- பசிபிக் மற்றும் ஆசியான் பிராந்திய ஒருங்கிணைப்புத் தலைமையகமாக மலேசியா திகழ்கிறது. இப் பிராந்தியத்திற்கான ஒருங்கிணைப்பு இயக்குநராக த்ரா மலேசியா தலைவர் திரு. சரவணன் சின்னப்பன் செயற்படுகிறார்.

எதிர்வரும் மாநாட்டில் மலேசியாவிலிருந்து மட்டுமே நூற்றுக்கும் மேலான பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் எனவும், ஆசிய-பசிபிக் பிராந்தியத்திலிருந்து மொத்தமாக சுமார் 200 தமிழ்த் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் பங்கேற்கவுள்ளார்கள். 'வீட்டுக்கு ஒரு தொழிலமுனைவர்' என்ற முழக்கம் இலட்சிய முழக்கமாக இம்மாநாட்டில் முன்வைக்கப்படும்.

கடந்த மே மாதம் நடந்த மலேசிய மாநாட்டில் பங்கேற்ற தமிழ்த் தொழில் அதிபர்களுக்கு இடையே 102 தொழில்-வணிகப் புரிந்துமை ஒப்பந்தங்கள் கைச் சாத்திடப்பட்டன. அதில் சுமார் 70 ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டும் விட்டன என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.


மேலும் இம்முறை சர்வதேச அளவில் தலைச்சிறந்த 10 தமிழ் தொழிலதிபர்களை கெளரவித்து விருது வழங்கவுள்ளதாகவும் ஜெகத் கஸ்பர் தெரிவித்தார். இப்படி பலச் சிறப்புகளுடன் நடைபெறும் இம்மாநாட்டில் பங்கேற்றுப் பயனடைந்திட தமிழுலகிற்கு அழைப்பு விடுத்தனர் எழுமின் அமைப்பினர்.

செப்டம்பர் 30க்குள் பதிவு செய்பவர்களுக்கு சலுகையில் பதிவுக் கட்டணம் ரூ.15000 மட்டுமே. இது எல்லா வரிகளையும் உள்ளடக்கியது. மேலும் சிறு கிராமங்களில் இருந்து வர நினைக்கும் பெண் தொழில்முனைவோர்களுக்கு சிறப்பு சலுகையாக அனுமதி கட்டணத்துக்கு ஸ்பான்சர் அளிக்கப்படும். அதற்கு அவர்களின் விவரம், தொழில் விவரத்தை விண்ணப்பப்படிவத்தில் குறிப்பிட்டு அனுப்பினால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்,” என கஸ்பர் தெரிவித்தார்.

பதிவு செய்ய:

https://www.tamilrise.org/ வங்கிக் கணக்கிற்கு NEFT மூலம் பணம் செலுத்தி பதிவுசெய்ய விரும்புவோர் 7395922365 என்ற எண்ணில் ஹேமாவதி என்பவரை தொடர்புகொள்ளலாம்.