கல்வி நிலையங்கள் உட்பட அனைத்திலும் கட்டண கேளிக்கை நிகழ்வுகளுக்கு 10% வரி: தமிழ்நாடு அரசு மசோதா தாக்கல்!
முன்மொழியப்பட்ட வரி விகிதம் "ஒவ்வொரு டிக்கெட் கட்டண வசூல் சேர்க்கைக்கும்" 10% என்பது குறிப்பிடத்தக்கது.
கல்வி நிறுவனம் உட்பட எந்த ஒரு நிறுவனமும் நடத்தும் டிக்கெட் கொடுத்து கட்டணம் வசூல் செய்யும் இசை நிகழ்ச்சிகள், நாடகங்கள், நிகழ்ச்சிகள் மற்றும் பிற நிகழ்வுகளுக்குக் கேளிக்கை வரி விதிப்பதற்கான மசோதாவை தமிழக அரசு சட்டசபையில் தாக்கல் செய்துள்ளது.
முன்மொழியப்பட்ட வரி விகிதம் "ஒவ்வொரு டிக்கெட் கட்டண வசூல் சேர்க்கைக்கும்" 10% என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. மேலும், தமிழ்நாடு வேளாண்மை விளைபொருள் விற்பனை (ஒழுங்குமுறை) சட்டம், 1987-க்குத் திருத்தம் கொண்டு வரும் மசோதாவையும் அதிமுக எதிர்த்தது. இந்த மசோதாக்கள் டிசம்பர் 9ம் தேதியான நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
பண்ணை விளைபொருள்கள் தொடர்பான மசோதா வந்தபோது, மூன்று மார்க்கெட் கமிட்டிகளின் (திருச்சிராப்பள்ளி, கடலூர், தேனி) சிறப்பு அதிகாரிகளின் பதவிக்காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பது தொடர்பான மசோதாவுக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் கேளிக்கை வரி சட்டம், 2017-ல் திருத்தம் கொண்டுவரப்படுவதையும் அதிமுக எதிர்த்தது. 2017 சட்டத்தில் கச்சேரிகள், நாடகங்கள், நிகழ்ச்சிகள் அல்லது ஒரு கல்வி நிறுவனம் உட்பட எந்த ஒரு நிறுவனமும் நடத்தும் மற்ற டிக்கெட்டு நிகழ்வுகளுக்கு கேளிக்கை வரி வசூலிப்பதற்கும் எந்த விதியும் இல்லாததால், அரசாங்கம் இந்த திருத்தத்தை முன்மொழிந்தது.
இந்த மசோதாக்கள் இன்று சட்டப்பேரவையில் விவாதத்திற்கு ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.