FASTag புதிய விதிமுறைகள் அமல் - தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?
கடந்த 2021 பிப்ரவரி முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை கடக்கும் வாகனங்கள் அனைத்தும் FASTag மூலமாக சுங்கக் கட்டணம் செலுத்தும் நடைமுறை கட்டாயமானது. பிப்ரவரி 17 முதல் FASTag பயன்பாடு சார்ந்து புதிய விதிமுறைகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. அது குறித்து விரிவாக பார்ப்போம்.
கடந்த 2021 பிப்ரவரி முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை (டோல் பிளாசா கடக்கும் வாகனங்கள் அனைத்தும் FASTag மூலமாக சுங்கக் கட்டணம் செலுத்தும் நடைமுறை கட்டாயமானதாக செயல்பாட்டில் இருந்து வருகிறது.
இந்த நிலையில், அண்மையில் FASTag பயன்பாடு சார்ந்து புதிய விதிமுறைகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. அது குறித்து விரிவாக பார்ப்போம்.
நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்ரெஷன் ஆப் இந்தியா (NPCI) மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் இணைந்து சுங்கச்சாவடி கட்டணத்தை ஒழுங்குபடுத்தும் வகையில் புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. இந்த விதிமுறைகள் பிப்ரவரி 17, 2025 முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் FASTag பரிவர்த்தனையின் எண்ணிக்கையும், அதற்கான கட்டண தொகையும் அதிகரித்துக் கொண்டுள்ளது. இதை என்பிசிஐ புள்ளிவிவரங்கள் உறுதி செய்துள்ளன.
இது FASTag வசூல் முறையில் செயல்திறனை மேம்படுத்தவும், சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசலைக் குறைப்பதற்கும், சுங்கக் கட்டணம் சார்ந்த முறைகேடுகளை தவிர்க்கும் நோக்கிலும் இந்த புதிய விதிமுறை அறிமுகமாகி உள்ளது.

வாகன உரிமையாளர்கள் அல்லது வாகன ஓட்டிகள் கவனத்தில் கொள்ள வேண்டியது என்ன?
- இதற்கு முன்பு வரை சுங்கச்சாவடிகளை நெருங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக கூட FASTag ரீசார்ஜ் செய்து பயன்படுத்த முடியும். ஆனால், புதிய விதிமுறையின்படி, இனி அது முடியாது. சுங்கச்சாவடியை நெருங்குவதற்கு சுமார் 60 நிமிடங்களுக்கு முன்னதாக FASTag ரீசார்ஜ் செய்யப்பட்டிருக்க வேண்டும். இதன் மூலம் அபராதங்களை தவிர்க்கலாம்.
- வாகனம் சுங்கச்சாவடியை நெருங்குவதற்கு 60 நிமிடங்களுக்கு முன்பும், சுங்கச்சாவடியை கடந்த 10 நிமிடங்களுக்கு பிறகும் FASTag செயல்பாட்டில் இருக்க வேண்டும். அப்படி FASTag செயல்பாட்டில் இல்லை என்றால் அது Error Code 176 என குறிப்பிடப்படும். அதற்கான அபராதமும் விதிக்கப்படும்.
- ஆன்லைன் மோசடியை தவிர்க்கும் வகையில் வகையில், இப்போது பரிவர்த்தனைக்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வாகனம் சுங்கச்சாவடியை கடந்த 15 நிமிடங்களுக்கு பிறகு கட்டணம் வசூலிக்கப்பட்டால் அதற்கு கட்டணத்துடன் சேர்த்து அபராதம் அல்லது பிளாக்லிஸ்ட் செய்யப்படும் வாய்ப்புள்ளது.
- மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பயனர்கள் தங்கள் கேஒய்சி விவரங்களை மீண்டும் அப்டேட் செய்ய வேண்டும் என்பது கட்டாயம் ஆகியுள்ளது. இதன் மூலம் தங்களது FASTag-களை பயனர்களை ஆக்டிவாக வைத்துக்கொள்ள முடியும்.
- அதேபோல, ஐந்து ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ள பழைய FASTag-களை ரீப்ளேஸ் செய்ய வேண்டும். அதற்கு பயனர்கள் தங்கள் FASTag வழங்குநர்கள் அல்லது வங்கியை தொடர்பு கொள்ளலாம்.
- பிளாக்லிஸ்ட் செய்யப்பட்ட அல்லது பேலன்ஸ் குறைவாக உள்ள FASTag கணக்கின் பரிவர்த்தனை சுங்கச்சாவடிகளில் Decline செய்யப்படும்.

என்னென்ன காரணங்களால் FASTag கணக்கு பிளாக்லிஸ்ட் செய்யப்படும்?
FASTag கணக்கில் சம்பந்தப்பட்ட சுங்கச்சாவடியில் செலுத்துவதற்கான போதிய கட்டணம் இல்லாதது, மினிமம் பேலன்ஸ் இல்லாதது, கேஒய்சி அப்டேட் செய்யாமல் இருப்பது, வாகனத்தின் மீது ஏதேனும் சட்ட ரீதியான சிக்கல் இருந்தால் FASTag கணக்கு பிளாக்லிஸ்ட் செய்யப்படும் என்பது கவனிக்கத்தக்கது. இதையெல்லாம் உறுதி செய்து கொண்டு பயனர்கள் தங்கள் பயணங்களை சிரமமின்றி திட்டமிடலாம்.
Edited by Induja Raghunathan