Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

‘வங்கிப்பணி டு டெக்னாலஜி’ - டெக் நிறுவனம் தொடங்கி சாதிக்கும் ஆல் ரவுண்டர் செந்தாமரை!

வங்கி ஊழியராக இருந்து டெக்னாலஜி துறையில் சாதனைப் பெண்ணாக தன்னை உருவாக்கிக் கொண்டுள்ளார் Betamonks Technology-யின் இணை நிறுவனர் செந்தாமரை கோகுலகிருஷ்ணன்.

‘வங்கிப்பணி டு டெக்னாலஜி’ - டெக் நிறுவனம் தொடங்கி சாதிக்கும் ஆல் ரவுண்டர் செந்தாமரை!

Tuesday September 20, 2022 , 7 min Read

டெக்னாலஜி துறை என்றாலே அது ஆண்களுக்கானது என்ற பொது சிந்தனை உள்ளது. டெக்கில் பெண்கள் பங்கும் அதற்கேற்றாற்போல் குறைவாகவே இருக்கிறது. இருப்பினும், ஒரு சில பெண்கள் டெக்னாலஜி துறையில் சாதிப்பது மட்டுமின்றி, டெக் நிறுவனம் தொடங்கி தொழில்முனைவராகவும் வெற்றி பெற்று வருகிறார்கள்.

நாம் செய்யும் செயல் மற்றவர்களின் வாழ்க்கையில் நல்ல பயனுள்ள தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருப்பவர் செந்தாமரை கோகுலகிருஷ்ணன்.

வங்கித் துறையில் 12 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் நிறைவான சம்பளம், பணியாற்றிய வங்கியில் நற்பெயர் என்ற போதிலும் தனக்கான அடையாளம் என்ன? தன்னுடைய பணியால் எப்படி மற்றவர்களுக்கு பயனைத் தர முடியும்? என்ற தொடர் சிந்தனையின் விளைவாக டெக்னாலஜி துறையில் மென்பொருள் நிறுவனப் பணி என்பதோடு மட்டுமே சுருக்கிக் கொள்ளும் பெண்ணாக இல்லாமல் புதிய Product-களை உருவாக்கித் தரும் தொழில்முனைவராக உருவெடுத்து நிற்கிறார் இவர்.

Betamonks Technology Factory Private limited இன்று உலகளாவிய நிறுவனமானது எப்படி என்று அதன் இயக்குனரும் இணை நிறுவனருமான Dr. செந்தாமரை கோகுலகிருஷ்ணன் யுவர் ஸ்டோரி தமிழிடம் பகிர்ந்து கொண்டார்.

senthamarai betamonks

தொழில்முனைவின் தொடக்கம்

“சின்ன வயசுலேருந்து எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம்னா படிப்பு. நான் ரொம்ப குறிக்கோளுடனே இருக்கிற சென்னைப் பொண்ணு, எப்பவுமே நான் ஸ்கூல் டாப்பர், ஒரு விஷயத்தை முடிவு பண்ணிட்டா அதை செஞ்சு முடிக்கிற வரைக்கும் என் பேச்ச நானே கேட்க மாட்டேங்கிற கேரக்டர்.

அதே போல, தொழில்முனைவுப் பயணங்கிறதும் சின்ன வயசுலயே தொடங்கிடுச்சுன்னு கூட சொல்லலாம். எண்கள், கணிதம் மற்றும் கணக்கியல் எனக்கு மிகவும் பிடித்த பாடங்கள் அதை நான் என்னுடைய அக்கம்பக்கத்து வீட்டு பிள்ளைகளுக்கு சொல்லி கொடுத்து அதில் இருந்து பகுதி நேர சம்பளம் பெற்றேன்.

“நமது தேவைகளை நாமே பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் சொந்த சம்பாத்தியம் வேண்டும் என்கிற சிந்தனை சிறு வயதிலேயே எனக்கு இருந்தது,” என்று இலக்குடனே தான் வளர்ந்ததைப் பற்றி கூறினார் செந்தாமரை.

வங்கிப் பணியில் ஆளுமை

Commerce and general lawவில் இளநிலை பட்டம் பெற்று கல்லூரி படிப்பை முடித்ததுமே குடும்ப பொருளாதாரத்திற்கு உதவ வேண்டிய கட்டாயச் சூழ்நிலையால் உடனடியாக ஒரு பணியில் சேர்ந்து விட்டேன். எனினும் தொடர்ந்து புதிய விஷயங்களை கற்க வேண்டும் என்கிற ஆர்வம் உந்திக் கொண்டே இருந்தது.

எனக்கு Computer programming-ல் விருப்பம் இருந்ததால் Diploma in computing and software படித்தேன். AMEX பேன்கில் 2007 வரை பணியாற்றினேன். அங்கு என்னுடைய செல்லப் பெயரே ’கோடிங் செய்யும் வங்கியாளர்’ என்பது தான் என்று பெருமைப்படுகிறார் செந்தாமரை.

பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றியது வாடிக்கையாளர்களை புரிந்து கொள்ள மிகவும் உதவியாக இருந்தது. AMEXல் தென்னிந்திய செயல்பாடுகளை நான் கவனித்து வந்தேன் அது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையை என்னுள் ஏற்படுத்தியது என்கிறார் செந்தாமரை.

பன்முகப் பெண்

நீ என்னவாக நினைக்கிறாயோ அதுவாக முடியும் என்கிற தீவிர நம்பிக்கை எனக்கு உண்டு. 2007ல் AMEX தன்னுடைய சேவையை நிறுத்திக் கொண்டது, அந்த சமயத்தில் எனக்கும் திருமணம் நடந்தது. என்றாலும் கல்யாணத்துக்குப் பிறகும் கூட நான் தொடர்ந்து படித்தேன். சொல்லப்போனால் என்னுடைய மகன் பிறந்த 15 நாளில் CFP (Certified Finance Planner) படித்தேன்.

இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது என்று நினைக்கலாம் ஆம் என்னுடைய கடின உழைப்பிற்கு கிடைத்த ஆச்சரியப் பரிசு தான், இந்தத் தேர்வை முதல் முறையிலேயே எழுதி தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பெண்களில் நானும் ஒருவர் என்பது தான் அது.

இந்த வெற்றியால் நான் படித்த அதே கல்லூரி எனக்கு பேராசிரியராகும் வாய்ப்பை கொடுத்தது. மற்றவர்களுக்கு கற்றுத்தரும் ஆசிரியர் பணி என்பது உள்ளூர இருந்துகொண்டே இருந்ததால் அவ்வபோது வகுப்புகளையும் எடுத்து வந்தேன், என்றார்.

மென்பொருள் துறைக்கு மறுபிரவேசம்

தொழில்முனைவு என்பதில் என்னுடைய முழுக்கவனமும் இருந்து கொண்டே இருந்தது. மற்றவர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே என்னுள் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும் குரல். வங்கிப் பணியையும் அப்படி நினைத்துத் தான் தேர்வு செய்தேன், ஆனால் அதில் அந்த ஆவல் நிறைவேறியதா என்பது கேள்விக்குறியே.

அதனால் வேறு எதாவது செய்ய வேண்டும் என்கிற உந்துதல் என்னுடனே தொடர்ந்தது. அதிர்ஷ்டவசமாக என்னுடைய கணவருக்கும் இதே சிந்தனை இருந்தது. என்னுடைய கணவரும் ஒரு fintech நிறுவனத்தில் பணியாற்றினார். அனைத்து பெரிய வங்கிகளுக்கும் debit, credit மற்றும் payment தொழில்நுட்பத்தை உருவாக்கித் தரும் பணியை அவர் செய்து வந்தார்.

அந்த நிறுவனத்தில் வங்கிப் பணியோடு கம்ப்யூட்டர் கோடிங்கும் தெரிந்த நபருக்கான தேவை இருந்ததால் அவர்களின் செயல்பாடுகளை தலைமை தாங்கி நிர்வகிக்கும் பொறுப்பிற்கு அவர் என்னை பரிந்துரைத்தார். இப்படித் தான் நான் மீண்டும் சாப்ட்வேர் துறையில் நுழைந்தேன்.

சொந்த நிறுவனம்

அந்த நிறுவனத்தில் நானும் என்னுடைய கணவரும் உயர் பொறுப்பில் சிறப்பாக பணிகளை செய்து வந்ததைப் பார்த்த yelamanchili நிறுவனர் நாங்கள் ஏன் சொந்தமாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கக் கூடாது என்று கேட்டதன் விளைவாகவே Betamonks technology factory prv ltd உருவாகியது. இதன் இணை நிறுவனர்களாக நானும் என்னுடைய கணவர் கோகுலகிருஷ்ணனும் செயல்படத் தொடங்கினோம்.

ஒரு டெக்னாலஜியை எப்படி எல்லோராலும் பயன்படுத்த வைக்க முடியும் என்பதே எங்களுடைய தொலைநோக்கு திட்டம். எங்களுக்கு product building and Service management-ல் மட்டுமே அனுபவம் இருந்தது. ஆனால் Betamonks சற்றே வித்தியாசமாகத் தான் தொடங்கினோம். இதனை வைத்து எப்படி மற்ற ஸ்டார்ட் அப்களுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் உதவ முடியும் என்கிற பார்வையுடனே அணுகினோம்.
betamonks

சிறப்புகள் என்ன?

Product-களை எப்படி வடிவமைப்பது அதனை எப்படி cocreate செய்வது என்பதே எங்களுடைய முக்கியப் பணியாகும். ஒரு தொழில்முனைவர் எப்படி தன்னுடைய தயாரிப்பை மேம்படுத்துவது, அதனை எவ்வாறு கட்டமைப்பது அதற்கு எந்த மாதிரியான தொழில்நுட்பம் தேவை போன்றவற்றிற்கான சரியான தீர்வைத் தருவதே சரியான பீடாமாங்க்ஸ்ன் முக்கியத்துவம்.

Payment application-களில் எங்களுக்கு நிறைய அனுபவம் என்பதால் அதில்தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம். Health care, LMS (Learning Management system) போன்றவற்றிற்கு அதிகம் பணியாற்றி இருக்கிறோம். பெரும்பாலும் எங்களுடைய கிளையன்ட்கள் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களே. பிரான்ஸ், ரஷ்யா, அயர்லாந்து போன்ற வெளிநாடுகளைச் சேர்ந்த ஸ்டார்ட் அப்களுக்கு அவர்களின் Productஐ ஒரு பிராண்டாக மாற்றுவதற்கான அனைத்து தொழில்நுட்ப உதவிகளையும் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.

ஸ்டார்ட் அப்கள் ஏன் ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் துறையாக இருக்கிறது என்று கடந்த 10 ஆண்டுகளாக என்னை மிகவும் சிந்திக்க வைத்த விஷயம். ஏனெனில் நாங்கள் பணியாற்றிய பிரான்சைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு கற்றலுக்கான ஒரு community உருவாக்கித் தந்தோம். அது மட்டுமே பெண் தொழில்முனைவரால் செயல்படும் நிறுவனம், பின்னர் அந்த நிறுவனத்திற்கு நிதியுதவி கிடைத்ததோடு பிரான்ஸ் அரசாங்கமே அந்த திட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது.

டிஜிட்டல் மயமாக்கல்

தமிழகத்தில் ஆர்த்தி ஸ்கேன்ஸ்க்கு லேர் மேனேஜ்மென்ட்டில் தொடங்கி வீட்டிற்கே சென்று மாதிரிகள் சேகரிக்கும் முறை, Franchisee முறை போன்றவற்றை தொழில்நுட்ப ரீதியில் எளிமையாக்கும் பணியை பல ஆண்டுகளாக நாங்கள் செய்து கொடுத்து கொண்டிருக்கிறோம்.

Guinea அரசாங்கம், Fijiiயின் நிலவரங்களை டிஜிட்டல் மயமாக்குவது போன்ற பல e-governance விஷயங்களை செய்து கொடுத்திருக்கிறோம். அதே போல, சென்னையில் இயங்கும் இந்திய அரசின் மத்திய காலணி பயிற்சி மையம் (CFTI) MSMEகளுக்காக கட்டமைக்கும் ஒரு eco முறையை உருவாக்கும் பணியை நாங்கள் தற்போது செய்து கொண்டிருக்கிறோம்.

முதன்முறையாக நாங்கள் இதில் வருமானத்தை பகிர்ந்து கொள்ளும் முறையில் கையெழுத்திட்டிருக்கிறோம், என்று தங்கள் நிறுவனம் ஓய்வின்றி சிகரம் நோக்கி அடுத்தடுத்த ப்ராஜக்ட்டுகளில் மின்னல் வேகத்தில் செயல்பட்டுக் கொண்டிருப்பதை வரிசையாக பட்டியலிட்டார் செந்தாமரை.

Betamonks வளர்ச்சி

2012ல் Betamonksஐ சொந்த முதலீட்டில் வீட்டின் ஒரு அறையில் நானும் என்னுடைய கணவரும் இணைந்து தொடங்கினோம். 11 ஆண்டுகளில் இன்று சென்னை, நாக்பூர், விசாகப்பட்டினம் என மூன்று நகரங்களில் 210 ஊழியர்களுடன் செயல்படும் அளவிற்கு விரிவாக்கம் அடைந்திருக்கிறோம்.

தொழில்நுட்பத்தின் உதவி எல்லோருக்கும் தேவை என்பதால் எங்களின் சேவை பலருக்கும் அத்தியாவசியமாக இருந்தது. மேலும் அதிக முதலீடின்றி சொந்த பணத்திலேயே bootstrap நிறுவனமாகத் தான் பீடாமாங்ஸ் செயல்படத் தொடங்கியது.

Betamonksன் முக்கிய செயல்பாடுகளே மூன்று மையப்புள்ளிகள்தான். 1) ஸ்டார்ட் அப்களுடன் சேர்ந்து எப்படி அவர்களின் தயாரிப்புகளை உருவாக்குவது 2) பொருட்களை எப்படி வெளிக்கொண்டுவருவது என்று தெரியாமல் தவிக்கும் ஸ்டார்ட் அப்களுக்கு அவர்களுக்கு ஏற்ற தீர்வைத் தருவது 3) (Automation) தானியங்கி முறையில் செயல்படும் தொழில்நுட்பத்தை உருவாக்கித் தருவது போன்றவையாகும்.

பீடாமாங்க்ஸ்ன் மறுபிறப்பானது 2019ல் நிகழ்ந்தது என்றே சொல்லலாம் என்கிறார் செந்தாமரை.

லாபமல்ல சேவையே நோக்கம்

மற்ற தொழில்நுட்ப நிறுவனங்களை ஒப்பிடும் போது Betamonksன் வருமானம் என்பது மிகவும் குறைவு. நாங்கள் முழுக்க முழுக்க சேவை மனப்பான்மையுடனே செயல்படுகிறோம், 25 சதவிகிதம் லாபத்துடனே செயல்பட்டாலும் ஊழியர்களுக்கு அதிக சம்பளம் கொடுத்து பணியில் வைத்துக் கொள்ளும் ஒரு நிறுவனமாகவே நாங்கள் இருக்கிறோம். எ

“ங்களுடைய கொள்கைகளும், சிந்தனைகளும் மக்களைச் சார்ந்ததாகவே இருப்பதால் நாங்கள் லாபத்தில் அதிக கவனம் செலுத்துவதில்லை. எனினும் ஒவ்வொரு ஆண்டும் பொருளாதார ரீதியிலும் கூட 25 முதல் 50 சதவிகித வளர்ச்சியைக் காணும் நிறுவனமாக பீடாமாங்ஸ் மெல்ல வளர்ச்சி கண்டு வருகிறது.”

சாத்தியமானது எப்படி?

2012ல் Betamonks தொடங்கினோம் அடுத்த ஆண்டே உலக அளவில் பெண் தொழில்முனைவருக்கான பயிற்சி அளிக்கும் Goldman sacs-இன் நிகழ்ச்சியில் நான் தொடக்க நிலையிலேயே தேர்வு செய்யப்பட்டது என்னுடைய தொழிலை நான் எப்படி எடுத்துச் செல்வது என்பதற்கு மிகவும் பயனாக அமைந்தது. உலக அளவில் தேர்வு செய்யப்பட்ட 10 ஆயிரம் பெண் தொழில்முனைவர்களின் அப்போதே என்னுடைய தொழில்முனைவுத் திட்டம் பிடித்துப் போனதால் கோல்ட்மேன் சேக் எனக்கு அந்த வாய்ப்பை தேடி வந்து கொடுத்தது.

இதில் கிடைத்த அனுபவத்தின் மூலம் ஒரு தொழில்முனைவர் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை அறிந்து கொண்டேன். மேலும் எங்களுக்கென நாங்கள் எந்த விளம்பரமும் செய்து கொண்டதில்லை, எங்களுடைய கிளையன்ட்களே எங்களுடைய பிராண்ட் அம்பாசிடர்கள் என்று புன்னகைக்கிறார் செந்தாமரை.

பெண்களுக்கான தளம்

தொழில் நிமித்தமாக பல நாடுகளுக்கு பயணித்திருப்பதால் பெண்கள் முன்னேற்றம் குறித்து அதிகம் சிந்தித்திருக்கிறேன். நான் முதல் தலைமுறை தொழில்முனைவர் என்பதால் என்னைப் போன்று மேலும் பல பெண்கள் தொழில்முனைவராக வேண்டும் என்று பலருக்கும் உத்வேகம் தந்திருக்கிறேன்.

என்னதான் Betamonks-ல் நான் இணை நிறுவனராக இருந்தாலும் நான் கம்ப்யூட்டர் கோடிங் செய்யும் டெக்னாலஜி பெண் என்கிற அடையாளம் எனக்குக் கிடைக்கவில்லை. பெண்களே பெண் தொழில்முனைவோருக்கு உதவும் வகையிலான ஒரு தளத்தை ஏன் உருவாக்கக் கூடாது என்ற சிந்தனை இருந்து கொண்டே இருந்தது.

பெண் தொழில்முனைவர் தன்னிறைவாக எப்படி ஒரு தொழிலைச் செய்ய ஒரு தளத்தை எப்படி பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதற்காகவே Yuukke (you are the key) www.yuukke.com என்கிற புதிய பிளாட்பார்மை அறிமுகம் செய்திருக்கிறேன். இதை 80% நான் நிர்வகிக்கிறேன் எஞ்சிய 20 சதவிகிதம் சர்வதேச முதலீட்டாளர்கள் ஆலோசகர்களிடம் உள்ளது.
Yuukke launch

எதற்காக YUUKKE?

உலகில் எந்த மூளையில் இருக்கும் பெண்ணும் மற்ற பெண் தொழில்முனைவர்களுடன் இணையும் ஒரு தளமாக yuukke வடிவமைக்கப்பட்டுள்ளது. Linkedin, insta போன்ற ஒரு தளமே yuukke, இதில் micro community உருவாக்கலாம், பெண்கள் தங்களது தயாரிப்புகளை விற்பனை செய்யலாம், வழிநடத்துவதற்கான மென்டர்களை அணுக முடியும், முதலீடுகளைப் பெறுவதற்கான பரிந்துரைகளும் இதன் மூலம் செய்யலாம்.

yuukeeக்காக முதலீட்டாளரை அணுகிய போது ஒரு முதலீட்டாளர்.

“ஏன் பெண்களுக்கென்று தனித்துவமாக இருக்க வேண்டும் அனைவரும் பயன்படுத்தும் வகையில் இந்தத் தளம் இருந்தால் 100% முதலீடு செய்யத் தயார் என்று கூறியதை சவாலாக எடுத்துக் கொண்டு ஏன் இதனை பெண்களுக்கானதாக மட்டும் இருக்கக் கூடாது என்று நானே என்னுடைய சொந்த முதலீட்டில் செயல்படுத்த முடிவெடுத்தேன். இதில் சுவாரஸ்யமான விஷயம் இந்த திட்டத்திற்காக செயல்பட்டவர்கள் பெரும்பாலும் பெண்களே ஆவார்கள். நான் பெண்ணியவாதியல்ல ஆனால் பெண்கள் முன்னேற்றம் அவசியம்,” என்கிறார் செந்தாமரை.

அடுத்த திட்டம்

Yuukke போலவே வயதானவர்களுக்கான ஒரு தளத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். Voice command-கள் மூலம் அவர்கள் தங்களது மொழியில் அவர்களுக்கான தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான ஒரு செயலியையும், அவர்களின் தினசரி விஷயங்களை கண்காணித்து அதில் எச்சரிக்கும் விதமான ஏதேனும் விஷயங்கள் இருந்தால் வயதானவர்களின் பிரதான உறவினர்கள் மற்றும் அவரின் மருத்துவருக்கு அலெர்ட் தகவல் அனுப்பும் வகையிலான ஒரு கருவியையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

”லாபத்தை மட்டுமே எண்ணாமல் நமக்குத் தெரிந்த ஒரு தொழில்நுட்பத்தின் மூலம் சமூகத்திற்கு என்ன செய்ய முடியும் என்கிற சிந்தனையோடு இதனைச் செய்து வருகிறோம். விரைவில் இதுவும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. Yuukee மற்றும் வயதானவர்களுக்கான இந்த சேவைகள் என இவற்றிற்கு அதிக கட்டணம் எதுவும் வசூலிக்காமல் குறைந்த கட்டணம் அதிக பயன் என்பதையே நோக்கமாக வைத்து செயல்படுகிறோம்,” என்கிறார் செந்தாமரை.

வாழ்க்கை ஒரு முறையே

டெக் பெண்மணியாக இருந்தாலும் Fashion எனக்கு மிகவும் பிடித்தத் துறை, ஆடை வடிவமைப்புத் துறையிலும் தடம் வைத்து தனி முத்திரை பதித்திருக்கிறேன். ஆனால், துரதிர்ஷ்டவசமாக ஒரு அறுவை சிகிச்சையால் என்னுடைய தொழில்முனைவுப் பயணத்தில் பின்னடைவு ஏற்பட்டாலும் என்னுடைய குடும்பத்தினர் மற்றும் என்னை வழிநடத்திச் சென்றவர்களின் உற்சாகத்தால் நான் நம்பிக்கையை விட்டுவிடாமல் மீண்டும் எழுந்து ஓடத் தொடங்கினேன்.

இப்போது எனக்கு கிடைத்திருப்பது இரண்டாவது இன்னிங்ஸ் இதில் எனக்கு கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் என்னுடைய நோக்கத்தை நிறைவேற்றிவிட வேண்டும் என்கிறார் இவர். பேஷன் டிசைனர், கம்ப்யூட்டர் கோடர், பெண்கள் முன்னேற்றத்திற்கு ஊக்கம் தரும் பேச்சாளர் என சிறகடித்து உயர உயர பறக்கத் துடிக்கும் பட்டாம்பூச்சி போல அடுத்து என்ன செய்யலாம் என்று உயர உயர பறந்து தனக்குத் தானே மணிமகுடம் சூட்டிக்கொண்டு வருகிறார் செந்தாமரை கோகுலகிருஷ்ணன்.