Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

குரோச்சே பொம்மைகள் செய்து வருவாய் ஈட்ட பழங்குடியினப் பெண்களுக்கு பயிற்சி - 61 வயது பெண்மணியின் முயற்சி!

2021ல் காஞ்சன் பதானி துவங்கிய Loophoop கைவேலைப்பாடு கொண்ட பொம்மைகளை உருவாக்கும் பழங்குடியின பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறது.

குரோச்சே பொம்மைகள் செய்து வருவாய் ஈட்ட பழங்குடியினப் பெண்களுக்கு பயிற்சி - 61 வயது பெண்மணியின் முயற்சி!

Saturday June 17, 2023 , 3 min Read

வாரத்தில் ஐந்து நாட்கள் ஜார்கன்டின் சிறிய நகரமான ஜும்ரி டேலையாவைச் சேர்ந்த பெண்கள் 1500 சதுர அடி வீட்டில் திரண்டு நூலிழைகளுக்கு உயிர் கொடுத்து வருகின்றனர்.

இழைகளை வண்ணம், அடர்த்தி மற்றும் தன்மைக்கேற்ப கவனமாக பிரித்தெடுக்கின்றனர். அதன் பிறகு, தங்கள் விரலைச் சுற்றி, சின்ன சின்ன நுணுக்கங்களை கவனித்தபடி ஒன்றோடு ஒன்று பின்னி தையலாக்குகின்றனர்.   

எல்லாம் முடிந்த பிறகு, தனியே இருக்கும் நூல் முனையை ஒன்றாக்கி, மென் பொருட்கள் மற்றும் அன்பு கொண்ட மென் பொம்மைகளாக்குகின்றனர். இந்த பொம்மைகளோடு விளையாடும் குழந்தைகள் முகத்தில் புன்னகை தவழும் வகையில் அவை தயாராகின்றன.

இந்த பெண்கள், ஜார்கண்டைச் சேர்ந்த 61 வயதான பெண்மணி காஞ்சன் பதானி உண்டாக்கிய லூப்ஹூப் (Loophoop) நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர். 2021ல் துவக்கப்பட்ட நிறுவனம் கைவேலைப்பாடு கொண்ட பொம்மைகளை உருவாக்கும் பழங்குடியின பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறது. 

பொம்மை

இந்த நகரத்துடன் பதானிக்கு நெருக்கமான தொடர்பு இருக்கிறது. இந்த பகுதியில் அவரது குடும்பம் சுரங்கத்தை கொண்டிருந்ததோடு உள்ளூர் மக்களாக் நன்கறியப்பட்டிருந்தனர்.  

பல ஆண்டுகளுக்கு முன் மைக்கா சுரங்கம் மூடப்பட்ட போது எண்ணற்ற பேர் வேலைவாய்ப்பு இழந்தனர். வருவாய்க்கு வழியில்லாமல் அவர்கள் மிகவும் அவதிப்பட்டனர். இந்த சூழலில் இங்குள்ள பெண்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக பதானி உருவானார்.

“எனக்கு ஒரே ஒரு இலக்கு தான் இருந்தது, உள்ளூர் பெண்களுக்கு இயன்ற வாய்ப்புகளை அளிக்க வேண்டும் என்பது தான் அது. லூப்ஹூப் வர்த்தகம் மட்டும் அல்ல, இந்த பெண்களுக்கு நம்பிக்கை மற்றும் வாய்ப்புகள் அளிக்கும் எனது முயற்சியுமாகும்,” என்று பதானி ஹெர்ஸ்டோரியிடம் கூறுகிறார்.  
பெண்

வர்த்தகமாக மாறிய ஈடுபாடு

கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்த பதானி, சின்ன வயதில் இருந்தே தனது பாட்டி உருவாக்கும் குரோச்சே (crochet) கொக்கி பின்னலிழை பொம்மைகளை பார்த்து, இந்த கலை மீது ஆர்வம் கொண்டார்.  

1982ல் திருமணம் ஆன பிறகு, அவர் ஜார்கண்டில் உள்ள ஜும்ரி டேலையாவிற்கு (Jhumri Telaiya) குடி பெயர்ந்தார். அவர் தனது வீட்டை அலங்கரிப்பதற்காக பலவிதமான குரோச்சே பின்னலிழை பொருட்களை, மேஜை விரிப்பு, பொம்மைகள் என உருவாக்கத்துவங்கினார்.

இதனிடையே, அருகாமையில் உள்ள பெண்களுக்கும் இந்த கலையை கற்றுத்தந்தார்.

உதவி தேவைப்படும் பெண்களுக்கு கைகொடுக்க விரும்பினாலும் அவர் வீட்டுப் பொறுப்புகளையும் கவனித்துக் கொள்ளவேண்டியிருந்தது. எனவே, அவரது சமூக ஆர்வம் பின்னுக்குத்தள்ளப்பட்டது.

இருப்பினும், பெண்களுக்கு உதவ வேண்டும் எனும் அவரது கனவு மங்கிவிடவில்லை. 2021ல் அவரது குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களான பிறகு வாழ்க்கை முழு வட்டத்தை அடைந்து, தனது கனவை நிறைவேற்றுவதற்கான நேரம் அவருக்குக் கிடைத்தது.

“குரோச்சே கொக்கி பின்னலிழை கலையில் எனக்கு மிகுந்த ஈடுபாடு இருந்ததாலும், பலரும் எனது பொம்மை வடிவமைப்புகளை பாராட்டியதாலும், இதை கொண்டு ஏதேனும் செய்ய தீர்மானித்தேன்,”என்கிறார் பதானி.

அவர் பள்ளி மாணவர்கள் மூலம், லூப்ஹூப் மற்றும் குரோச்சே பயிற்சி பற்றி அவர்களுடைய அம்மாக்களுக்கு எடுத்துக்கூறினார். உள்ளூர் பெண்களுக்கு இந்த கலையை அவர் இலவசமாக கற்றுத்தருகிறார்.

10 முதல் 15 நாட்களில் இதை கற்றுக்கொள்ளலாம். பின்னர், பயிற்சி செய்து திறனை மேம்படுத்திக்கொள்ளலாம். இதுவரை அவர் 50 பெண்களுக்கு பயிற்சி அளித்திருக்கிறார். அவர்களில் 25 பேர் லூப்ஹூப் நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர்.

“துவக்கத்தில், இறுதி வடிவமைப்பை கொடுப்பதற்கு முன் பயிற்சி செய்ய டம்மி வடிவமைப்பை கொடுப்பேன்,” என்கிறார் பதானி.

லூப்ஹூப் பொருட்கள் இரண்டு ஆலைகளில் தயாராகின்றன. வீட்டிற்கு வெளியே அதிக நேரம் செலவிட முடியாத பெண்கள் தங்கள் வீட்டிலேயே பொம்மைகள் செய்யலாம். பொதுவாக பெண்கள் அவர்கள் உருவாக்கும் எண்ணிக்கைக்கு ஏற்ப மாதம் ரூ.4,000 முதல் 5,000 வரை சம்பாதிக்கின்றனர்.

பொம்மை

தரமும், பாதுகாப்பும்

லூப்ஹூப், விலங்கு பொம்மைகள், கடவுள் உருவங்கள், பொம்மைகள், இதர பொருட்களை உற்பத்தி செய்கிறது. இவற்றின் விலை, அளவு மற்றும் வடிவமைப்பிற்கு ஏற்ப ரூ.450 முதல் 2,500 வரை அமையலாம். நிறுவனத்தின் இணையதளம் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

நிறுவனம் 3,000 பொருட்கள் வரை கொண்டுள்ளது. மாதம், ஒரு லட்சம் முதல் 1.5 லட்சம் வரை விற்பனை செய்கிறது. நிறுவனம் பயன்படுத்தும் மூலப்பொருட்கள் மற்றும் தயாரிப்புகள் உரிய சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, இந்த தர நிர்ணய சான்றிதழ் பெற்றது.

”லூப்ஹூப் நிறுவனம் சீரான தன்மையில் கவனம் செலுத்துவதாக,” பதானி கூறுகிறார்.

நாங்கள் தயாரிக்கும் ஒவ்வொரு பொம்மையும் அதிக தரம் கொண்டதாக, அளவு, வடிவமைப்பு சீரான தன்மையுடன் இருப்பதை உறுதி செய்கிறோம். சின்ன சின்ன விவரம்ங்களில் கூட கவனம் செலுத்தி, முழுமையான பொருட்களை உருவாக்குகிறோம், என்கிறார். பொம்மைகள் குழந்தைகளுக்கு பாதுகாப்பாக இருப்பதற்காக நிறுவனம் எதற்கும் பிளாஸ்டிக் பயன்படுத்துவதில்லை.

இதற்குப் பதிலாக கண்கள் போன்ற பகுதிகளை உண்டாக்க மெல்லிய நூல் பயன்படுத்தப்படுகிறது. நேரடி விற்பனை நிலையங்களையும் அமைக்க திட்டமிட்டுள்ளதால் பதானி ஓய்வு பெறுவது பற்றி யோசிக்கவில்லை.

“உங்கள் கனவை பின்பற்ற வயது இல்லை. என்னைச்சுற்றியுள்ள பெண்களுக்கு உதவி செய்ய வேண்டும் என விரும்பினேன். லூப்ஹூப் மூலம் அதை செய்து வருகிறேன். பெண்களுக்கு உதவி அவர்களுக்கு நிறைவை அளித்து வருகிறேன்,” என்கிறார்.

ஆங்கிலத்தில்: சிம்ரன் ஷர்மா | தமிழில்: சைபர் சிம்மன்


Edited by Induja Raghunathan