செப் 28, 29ம் தேதி Startup TN மதுரையில் நடத்தும் 'ஸ்டார்ட் அப் திருவிழா' - பதிவு செய்து கலந்துகொண்டு பயன் பெறுங்கள்!
தமிழ்நாட்டில் ஸ்டார்ட் அப்களை ஊக்குவிக்கும் நோக்கில், ஸ்டார்ட் அப் டி.என் சார்பில் இரண்டு நாள் ஸ்டார்ட் அப் திருவிழா மதுரையில் செப் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் ஸ்டார்ட் அப்களை ஊக்குவிக்கும் நோக்கில், ஸ்டார்ட் அப் டி.என் சார்பில் இரண்டு நாள் 'ஸ்டார்ட் அப் திருவிழா' மதுரை பதிப்பு செப் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட 'Startup TN' அமைப்பு, அடுத்த நான்கு ஆண்டுகளில் 10,000 புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உருவாக்கும் இலக்குடன் செயல்பட்டு வருகிறது.
2030ம் ஆண்டு வாக்கில், தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் மாநில அரசின் திட்டத்தின் ஒரு பகுதியாக இது அமைகிறது. இந்த இலக்கை அடையவும், மாநிலத்தை புதுமையாக்கம் மற்றும் அறிவுசார் மையமாக மாற்றவும், தொழில்முனைவோர், கல்வி நிறுவனங்கள், இன்குபேட்டர், அரசு அமைப்புகளுடன் இணைந்து பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக,
'ஸ்டார்ட் அப் டிஎன்' இரண்டு நாள், ஸ்டார்ட் அப் திருவிழாவை மதுரையில் நடத்துகிறது. ஸ்டார்ட் அப் மற்றும் தொழில்முனைவை ஊக்குவிக்கும் வகையில் செப் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இந்த ஸ்டார்ட் அப் திருவிழா நடைபெறுகிறது.
மதுரை தமுக்கம் மைதான மாநாட்டு அரங்கில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஸ்டார்ட் அப் வல்லுனர்கள், தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், வழிகாட்டிகள் உள்ளிட்டோர் பங்கேற்கும் இந்த மாநாட்டில், தொழில்துறை விவாதங்கள், முக்கிய உரைகள், கண்காட்சி, வர்த்தக சந்திப்புகள் நடைபெறுகின்றன. கலந்துரையாடலுக்கான பரப்போடு கலாச்சார அம்சங்களையும் இந்த மாநாடு கொண்டிருக்கும்.
தைரோகேர் வேலுமணி, சிஐஐ தமிழ்நாடு தலைவர் ஸ்ரீவத்ஸ் ராம், கிஸ்ப்ளோ நிறுவனர் சுரேஷ் சம்பந்தம், நேச்சுரல்ஸ் இணை நிறுவனர் சி.கே.குமாரவேல், உள்ளிட்ட பல முக்கிய தொழில்முனைவோர்கள் ஸ்டார்ட்-அப் திருவிழாவில் உரையாற்ற உள்ளனர்.
ஸ்டார்ட் அப் மற்றும் தொழில்முனைவை ஊக்குவிக்கும் யுவர்ஸ்டோரி தமிழ், இவ்விழாவின் மீடியா பங்குதாரராக பங்கேற்கிறது.
இந்த நிகழ்ச்சி தொடர்பான தகவல்களை அறிய இணையதளம்: https://startuptn.in/fest
Edited by Induja Raghunathan