ரூ.65,000 கோடியில் ‘ஆமை வடிவ’ பிரம்மாண்ட கப்பல்: வாய்பிளக்க வைக்கும் மிதவை நகரம்!
ஆமை வடிவில் உலகின் மிகப்பெரிய மிதக்கும் கப்பல் சவுதி அரேபியாவில் விரைவில் உருவாக உள்ளது.
ஆமை வடிவில் உலகின் மிகப்பெரிய மிதக்கும் கப்பல் சவுதி அரேபியாவில் விரைவில் உருவாக உள்ளது.
மனிதர்களின் கற்பனை சக்திக்கும், நவீன தொழில்நுட்பத்திற்கும் வேலை கொடுக்கும் விதமாக புதுப்புது விஷயங்கள் அவ்வப்போது உருவாக்கப்படுவது உண்டு. சவுதி அரேபியாவில் உருவாக உள்ள மிதக்கும் நகரம் பற்றிய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதன் சிறப்பம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்...
மிதக்கும் பிரம்மாண்ட நகரம்:
சவுதி அரேபியாவில் விரைவில் 5 பில்லியன் டாலர் மதிப்பிலான 'Pangeos' ’பான்ஜியாஸ்’ என்ற ஆமை வடிவத்திலான மிதக்கும் கப்பல் தயாராக உள்ளது.
ஆமை வடிவத்திலான இதனை கப்பல் எனச் சொல்வதற்கு பதிலாக மிதக்கும் நகரம் என்றே அழைக்கலாம். ஏனெனில், இதில் 60,000 பேர் வரை தங்கலாம். இத்தாலிய டிசைன் ஸ்டுடியோ லாஸ்ஸரினி இந்த கப்பலை வடிவமைத்துள்ளது.
"200 மில்லியனிலிருந்து 335 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பான்ஜியா என்ற சூப்பர் கண்டத்தின் பெயரை நினைவூட்டும் விதமாக ‘பான்ஜியாஸ்’ என அதற்கு பெயரிட்டுள்ளனர்.”
இதில் ஹோட்டல்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், குடியிருப்புகள், ஷாப்பிங் சென்டர்கள், பூங்காக்கள், கப்பல் மற்றும் விமான துறைமுகங்கள் கூட இருக்கும் எனக்கூறப்படுகிறது. குறிப்பாக ஆமை வடிவிலான இந்த கப்பலின் இறக்கை பகுதியில் 19 வில்லாக்கள் மற்றும் 64 அடுக்குமாடி குடியிருப்புகள் அமைக்கப்பட உள்ளன.
இந்த பிரம்மாண்ட கப்பலில் ரூப்டாப் கார்டன், பீச் கிளப், மால்கள் போன்ற எக்ஸ்ட்ரா பொழுதுபோக்கு அம்சங்களும் இடம் பெற உள்ளன.
650 மீட்டர் அகலமும், 600 மீட்டர் நீளமும் கொண்ட ‘டெராஷிப்யார்ட்’ ’Terayacht’ உள்கட்டமைப்பும், கடலுக்கு நேரடி அணுகலை வழங்கும் தனித்துவமான கட்டமைப்பையும் கொண்டிருக்கும்.
இந்த மிதக்கும் நகரத்தின் நீளம் 1,800 அடியாக இருக்கும் என்றும், அகலம் 610 மீட்டர் (2,000 அடி) இருக்கும் என்றும் லாஸ்ஸரினி நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் பயணம் செய்யும் விதமாக கட்டமைக்கப்பட உள்ள இந்த கப்பலுக்கான ஆற்றல் கடல் அலை மற்றும் சூரிய மின்சக்தி மூலமாக எடுக்கப்பட்டு, முற்றிலும் பசுமை வழியில் இயக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ராட்சத ஆமை வடிவ படகு அதிகபட்சமாக 5.7 mph/9.2 kph வேகத்தில் பயணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சவுதி அரேபியா கடற்கரை பகுதியில் கட்டுமான பணிகளை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்ட மிதக்கும் நகரத்தை உருவாக்க, 8 வருட காலக்கெடுவுடன் 8 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்படும் என்று Lazzarini நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகிலேயே முதன் முறையாக ஆமை வடிவத்தில் உருவாக உள்ள பிரம்மாண்ட கப்பலை கட்டமைக்கும் பணி 2025ம் ஆண்டு தொடங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
கப்பலில் மெய்நிகர் இடங்களை வாங்க விரும்புவோருக்காக NFT க்ரவுட்ஃபண்டிங் முறையான "அன்ரியல் எஸ்டேட்" என்ற விற்பனையையும் நிறுவனம் தொடங்க உள்ளது. இதன் மூலம் மெய்நிகர் போர்டிங் டிக்கெட்டுகள், ஹோட்டல் அறைகள், மெட்டாவர்ஸ் மூலமாக வீடுகளைக் கூட வாங்கலாம். இதற்காக மெய்நிகர் போர்டிங் 2023ம் ஆண்டு முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முகேஷ் அம்பானி மகனுக்காக துபாயில் வாங்கிய காஸ்ட்லியான வீடு: விலை என்ன தெரியுமா?