'வர்த்தனா' கையடக்க செலவில் கல்வியை வசப்பட வைக்கும் முயற்சி
வர்த்தனாவின் ஒரே லட்சியம் - குறைந்த வருவாய் குடும்பப் பின்னணியில் இருந்துவரும் குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்கும் வகையில் "அஃபர்டபிள் பிரைவேட் ஸ்கூல்ஸ்" (Affordable Private School (APS) - ஏபிஎஸ் என்ற முறையில் தனியார் பள்ளிகளின் முதலீட்டை அதிகரிப்பதே ஆகும்.
பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்த வங்கி அமைப்பு சாரா நிதி நிறுவனத்திற்கு தற்போது நிதி ஆதாரம் அளித்து வருகிறது எசென்ஷியல் கேபிடல் கன்சார்டியம் Essential Capital Consortium (ECC) .
டச்சு வங்கியின் குளோபல் சோஷியல் பினான்ஸ் குரூப் (Deutsche Bank’s Global Social Finance Group) இசிசியை இதை நிர்வகிக்கிறது. வர்த்தனாவுக்கு இசிசி, 2 மில்லியன் டாலர் அளவில் ஷேர்களாக, இகுவிட்டிகளாக வழங்கக்கூடிய டெபன்சர்களை அளித்துள்ளது. வர்த்தனாவுக்கான பரிவர்த்தனைகள் அனைத்தும் நெற்றி பிரைவேட் பவுண்டேஷன் மூலம் சாத்தியப்பட்டுள்ளது. இப்படியாக பல்வேறு வாயிலாக வர்த்தனாவுக்கு நிதி ஆதாரம் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. இதன்மூலம் உள்ளூர் சந்தை நிலவரத்தில் கடன் சுமை ஏற்பட்டாலும் கூட வர்த்தனாவால் சமாளிக்க முடிகிறது.
இது குறித்து வர்த்தனாவின் சி.இ.ஓ. ஸ்டீவ் ஹார்ட்கிரேவ் கூறும்போது, எசென்ஷியல் கேபிடல் கன்சார்டியம் எங்களது நிதி ஆதாரத்தை எப்போதுமே வலுவாக வைக்கிறது. எங்களால் நிறைய பள்ளிகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடிகிறது" என்றார்.
2013 முதல் இப்போது வரை... ஒரு விரைவுப் பார்வை
2013 ஜனவரியில் "வர்த்தனா" (Varthana) நிறுவப்பட்டது. 2013 மே மாதத்தில் அகியானின் வென்சூர் லேப் முதன்முதலில் வர்த்தனாவில் முதலீடு செய்தது. 2014 ஆகஸ்டு மாதத்தில் சீரிஸ் ஏ ரவுண்ட் தொடங்கியது. அதில் ரூ.27 கோடி ஓமிட்யார் நெட்வொர்க் வாயிலாக ஈர்க்கப்பட்டது. அதனுடன் எல்.ஜி.டி. வென்சூர் பிலான்திராபி எலிவார் இகுவிட்டி ஆகியனவும் இணைந்து கொண்டன.
சோசியல் ஸ்டோரி சார்பில் 2013-ல் அவர்களுடன் ஒரு நேர்காணல் நடத்தப்பட்டது. அப்போது அவர்கள் 30% கடனை திருப்பிச் செலுத்தியிருந்தனர். மேலும், 10 உறுப்பினர்களும் இருந்தனர். இன்று வர்த்தனா தனது கடன் மதிப்பை ரூ.65 கோடிக்கும் அதிகமாக்கியுள்ளது. 20 நகரங்களில் 800 பள்ளிகளில் 100 பேர் கொண்ட குழுவினர் வர்த்தனாவுக்காக செயல்படுகின்றனர். கல்வித்துறையில் மகத்தான புதுமைகளை வர்த்தனா புகுத்தி வருகிறது.
ஸ்டீவ் மேலும் கூறும்போது, "புதிய சூழலில் இத்தகைய புதிதான தொழிலை கையில் எடுக்கும்போது சவால்களை நேர்த்தியாக எதிர்கொள்ள வேண்டும். முதல் இரண்டு ஆண்டுகளில் இத்தகைய பள்ளிகளுக்கான கடன்களை வழங்குவதில் நாங்கள் மிகவும் கவனமாக இருந்தோம். ஏனெனில் எங்களது சேவை சிறப்பாக இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். அதேவேளையில் சரியான இடத்தில் முதலீடு சென்றடைய வேண்டும் என்பதிலும் நாங்கள் குறியாக இருந்தோம்.
எத்தகைய பள்ளிகள் பயனடைகின்றன?
வர்த்தனாவில் கடன் பெற வேண்டும் என்றால் அதற்கு அந்தப் பள்ளி ஏற்கெனவே குறைந்தது இரண்டு கிளைகளாவது கொண்ட பள்ளியாக இருத்தல் வேண்டும்.
முற்றிலும் புதிதாக தொடங்கப்படும் பள்ளிக்கு நாங்கள் கடன் வழங்குவதில்லை. சொல்லப்போனால், கடன் பெறுவதற்கான முறைகள் சற்று கடினமானதே.
இரண்டு ஆண்டுகளாவது அந்தப் பள்ளி நல்ல நிலையில் இயங்குவதாக இருக்க வேண்டும். கடனைத் திருப்பிச் செலுத்தும் தகுதியும் அப்பள்ளிக்கு இருப்பது அவசியம்.
எனவே, இத்தகைய தொழிலில் எங்கோ ஓரிடத்தில் மேஜை நாற்காலியில் அமர்ந்து கொண்டு விரல் நுணியில் வேலைகளை முடித்துவிட முடியாது என்பதை சுட்டிக் காட்டும் ஸ்டீவ், "இது மிகவும் சிரமமானது. தங்களது பள்ளியை எப்படியாவது தரம் உயர்த்த வேண்டும் என்ற துடிப்புமிக்கவர்களை தேடியறிந்து அவர்களுடன் பணியாற்ற வேண்டும். கணிசமான செலவில் சிறந்த கல்வி கிடைக்கும் என்ற நம்பிக்கையை மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் ஏற்படுத்த வேண்டும்" என்றார்.
இரண்டு விதமான கடன்:
உத்தரவாதத்துடன் பெறும் பெருந்தொகை அதாவது 5 வருடங்களுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை உத்தரவாதம் அளிக்காமல் பெறக் கூடிய கடன். அதாவது 3 வருடங்களுக்கு ரூ.5 லட்சம் என இரண்டு விதமாக கடன் வழங்கப்படுகிறது.
இந்தக் கடன்களை பள்ளியின் எந்த ஒரு மேம்பாட்டுக்காக வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம். அதாவது, பள்ளியில் கணினி ஆய்வுக்கூடம் அமைப்பது முதல் பள்ளிக்கூடத்துக்கான மேஜை, நாற்காலி, புத்தகங்கள் வாங்குதல், கட்டிடம் புதுப்பித்தல் என எதற்காக வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
வர்த்தனாவுக்கு பொதுவாக எத்தகைய வங்கிக் கடன் கோரிக்கைகள் வருகின்றன?
ஸ்டீவ் பதில் கூறும்போது, "கடன் அளவை பொருத்தவரை பெரும்பாலும் கட்டுமானத்துக்காகவே கோரப்படுகிறது. மொத்த கடன் கோரிக்கைகளைப் பார்க்கும்போது, கல்வி பயிற்றுவிக்க தேவைப்படும் உபகரணங்கள், பர்னிச்சர்கள், கழிப்பிட வசதி ஏற்படுத்துததல் ஆகிய காரணங்களுக்காக அதிக அளவிலான கோரிக்கைகள் எழுகின்றன" என்றார்.
இந்தியாவை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?
உலகளவில் பல்வேறு வளர்ந்த நாடுகளிலும் குறைந்த கட்டணம் செலுத்தி படிக்கக்கூடிய தனியார் பள்ளிகளுக்கான தேவை இருக்கும்போது, ஸ்டீவும், பிரஜேஷூம் இந்தியாவை ஏன் தேர்தெடுத்தனர் என்பது குறித்து ஸ்டீவ் கூறும்போது, "இந்தியாவைப் போல் மக்கள்தொகை, பரப்பளவு கொண்ட நாடு ஏதும் இல்லை என்கிறார்.
சீனாவில் மக்கள்தொகை அதிகமே, இருந்தாலும் அங்கிருக்கும் ஒரு குழந்தை திட்டத்தால், பள்ளி செல்லும் குழந்தைகள் அதிகம். எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நாடு என்று பார்க்கும்போது இந்தியாவை தேர்வு செய்ய முடிந்தது. இந்தியாவில், 400 மில்லியன் குழந்தைகள் பள்ளி செல்லும் பருவத்தினராக உள்ளனர்" என்றனர்.
மேலும் ஒரு சுவையான தகவலையும் அவர் பகிர்ந்து கொண்டார், அதாவது, "இந்தியாவில் உள்ள 400 மில்லியன் பள்ளி செல்லும் குழந்தைகளில் பெரும்பாலானோர் நடுத்தர அல்லது குறைந்த வருமானம் கொண்ட பிரிவைச் சார்ந்தவர்களாகவே இருக்கின்றனர். எனவே, அவர்கள் மத்தியில் குறைந்த கட்டண தனியார் பள்ளிக்கான தேவை அதிகமாகவே இருக்கிறது" என்றார்.
வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் எத்தனை குறைந்த கட்டண தனியார் பள்ளிகளை வேண்டுமானாலும் திறந்து கொள்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதற்குக் காரணம் மக்களின் தேவை.
இறுதியாக ஸ்டீவின் பார்வையில், "இந்தியக் குடும்பங்களில் தங்கள் குழந்தைகளுக்கு தரமான கல்வி வழங்க வேண்டும் என்ற உந்து சக்தி அதிகமாகவே இருக்கிறது. இது இயற்கை நியதிபோல் ஆகிவிட்டது" என தனது கருத்தை பதிவு செய்தார்.
வர்த்தனா, பள்ளிகளுடனான உறவை மேம்படுத்திக்கொள்ள விரும்புகிறது. நல்ல நிர்வாகத்தின் கீழ் இருக்கும் தரமான பள்ளிகளைக் கண்டறிந்து அவர்களும் தங்கள் பள்ளி நிலையை மேலும் உயர்த்திக் கொள்ள உதவ வேண்டும் என்பதே வர்த்தனாவின் லட்சியமாக இருக்கிறது. பல்வேறு புதுமைகளை புகுத்தி, கற்றல் முறைகளை மேம்படுத்துவதே இப்போதைக்கு வர்த்தனாவின் மிகப் பெரிய இலக்காக இருக்கிறது.
பள்ளிகளில் இருந்து இடை நிற்றல் விகிதம் வெகுவாக குறைந்துள்ளது. குழந்தைகளின் கல்வித்தரம் குறிப்பிட்டுக் கூறும்படி மேம்பட்டிருக்கிறது என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.
2020-க்குள், வர்த்தனா இந்திய தேசம் முழுவதும் தனது அடையாளத்தை பரவுச் செய்யும் என்பதில் ஐயமில்லை. 20 மில்லியன் குழந்தைகள் பயனுறும் வகையில் 40,000 பள்ளிகளுடன் இணைந்து வர்த்தனா பணியாற்றும். இவ்வாறு தங்களது நம்பிக்கை ஸ்டீவும், பிரஜேஷூம் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இணையதள முகவரி: Varthana