இ-காமர்ஸில் ஆடம்பர பொருட்கள்: அசத்தும் பிரியா சச்தேவ்
"ராக்அண்ட்ஷாப்" (RocknShop) இந்த பெயருக்கு ஏற்றாற் போல் தனது தொழிலில் அசாத்திய வெற்றியை பதிவு செய்துள்ளார் பிரியா சச்தேவ்.
எல்லாம் ஆன்லைன் ஆகிவிட்ட உலகில் இ-காமர்ஸ் பிடித்து வைத்திருக்கும் இடம் பிரம்மாண்டமானது.
இந்நிலையில் இ-காமர்ஸில் தனக்கென ஒரு தனி இடத்தை தக்க வைத்திருக்கும் ராக்அண்ட்ஷாப் (RocknShop) தலைமைச் செயல் அதிகாரி (CEO) பிரியா சச்தேவை சந்திப்போம்.
கிட்ஷ் (Kitsch) என்ற மல்டி பிராண்ட், ரீட்டெயில் ஷாப் கிளைகள் பல கொண்டுள்ளன. இப்படி வெற்றிகரமாக ஒரு தொழிலை செய்து கொண்டிருக்க அவரைத் தூண்டியது ஃபேஷன் மீதான அவரது ஆர்வமும், விடாமுயற்சியுமே.
யுவர் ஸ்டோரியிடம் பிரியா பகிர்ந்து கொண்ட வெற்றிப் பயணம் குறித்து...
கிட்ஷ் (Kitsch) என்ற மல்டி பிராண்ட் ரீட்டெயில் ஷாப் துவக்க உந்துசக்தியாக இருந்தது எது? அதிலிருந்து எப்படி ராக்அண்ட்ஷாப் (RocknShop) உருப்பெற்றது?
ராக்அண்ட்ஷாப், (RocknShop) கிட்ஷ்-ன் விரிவாக்காமே. இதுவே இந்தியாவின் சில்லறை வணிகத்தின் எதிர்காலம்.
உங்கள் தொழில் வெற்றியின் தாரக மந்திரம் என்ன?
எப்போதுமே புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள தயாராக இருங்கள். உங்கள் கனவை நோக்கி பயணியுங்கள். இதுவே எனது வெற்றியின் பின் இருக்கும் மந்திரம்.
ஆன்லைனில் தங்கள் தயாரிப்புகளை விற்க முடியும் என்ற நம்பிக்கையை ஆடம்பர பொருட்களை விற்கும் நிறுவனங்களிடம் எப்படி உண்டாக்கினீர்கள்?
அது அவ்வளவு பெரிய சிரமமான விஷயமாக இல்லை. அவர்களுக்கு எங்களை தனிப்பட்ட முறையில் தெரியும். எங்கள் கடைகளில் ஏற்கெனவே அவர்கள் பொருட்களை வாங்கி விற்று வருவதால், அவர்களுக்கு எங்கள் மீது நன்மதிப்பும், நம்பிக்கையும் உண்டு.
எல்லா டிபார்ட்மென்ட் கடைகளும் இப்போது இ-காமர்ஸ் செய்கின்றன. அப்படி இருக்கும்போது இது போன்ற ஸ்பெஷாலிட்டி பொடிக்குகள் எந்த வகையில் வித்தியாசப்படுகின்றன?
ஸ்பெஷாலிட்டி பொட்டிக்குகள் அதாவது தனிச்சிறப்பான பொட்டிகளுக்கென்று ஒரு வரவேற்பு இருக்கிறது. இது ஒரு புத்தம் புது களம். இவற்றில் வாடிக்கையாளர்கள் திருப்திக்கு முதலிடம் கொடுக்கப்படுகிறது. சீசன் அதாவது பண்டிகை காலங்களுக்கு ஏற்றவாறு பேஷன் பொருட்களை எங்களால் வாடிக்கையாளர்களிடம் எடுத்துச் செல்ல முடிகிறது.
சகோதரிகளாகவும் தொழிலில் பார்டனராகவும் இருந்து கொண்டு, பிசினஸ் பொறுப்புகளை எப்படி பகிர்ந்து கொள்கிறீர்கள்?
எங்கள் அனுபவமே எங்களை ஒன்றிணைத்துள்ளது. நேரத்தை எப்படி ஆக்கபூர்வமாக செலவிடுவது என திட்டமிட்டுக் கொள்வோம். ஆக்கச்சிந்தனை மற்றும் இ-காமர்ஸ் சார்ந்த விஷயங்களை நான் கவனித்துக் கொள்வேன். என் சகோதரி சாரு அன்றாட பணிகளை கவனித்துக் கொள்வார்.
குடும்பத்தினருடன் ஏற்படுத்தியிருக்கும் பிசினஸ் பார்டனர்ஷிப்பை எப்படி கையாள்கிறீர்கள்?
குடும்ப உறுப்பினரையே பிசினஸ் பார்ட்னராக கொண்டுள்ளதால் சில நேரங்களில் கடையைத் தாண்டியும் எங்கள் அலுவல் நீடிக்கிறது. குடும்பத்தையும், தொழிலையும் வெவ்வேறாக பிரிக்க முடிவதில்லை.
புதிதாக யாரையாவது பணியமர்த்தும்போது நீங்கள் அவர்களிடம் எதிர்பார்க்கும் முக்கியமான சிறப்பம்சங்கள் என்னென்ன?
நம்பிக்கை. என் முதல் எதிர்பார்ப்பு இதுவே. எவ்வளவு தூரம் அந்த நபர் தன்னம்பிக்கை கொண்டவராக இருக்கிறார் என்பதையே நாங்கள் முதலில் சோதிக்கிறோம். அடுத்ததாக புத்தாகச் சிந்தனை. மூன்றாவது பணி அனுபவம்.
ராக்அண்ட்ஷாப்-ஐ (RocknShop) வெற்றிகரமாக நடத்துவதில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்னென்ன? அவற்றை எப்படி சமாளித்தீர்கள்?
எல்லா புது தொழில் முயற்சிகளிலும் அதற்கேற்ப சவால்கள் இருக்கும். சவால்கள் சிறியதாக இருக்கலாம் பெரியதாக இருக்கலாம். ஆனால், சவால்களை வெற்றிகரமாக சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கையே அவசியமானது.
கிட்ஷ் (Kitsch) நிறுவனத்தை தொடங்கும் முன்னர் நீங்கள் என்னவாக இருந்தீர்கள்? உங்களை ஒரு தொழில் முனைவராக மாற்றியது எது?
கிட்ஷ் (Kitsch) தொடங்குவதற்கு முன்னாள் நான் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் சி.எஸ்.எஃப்.பி. கிரெடிட் சேவை மையத்தில் பணியாற்றி வந்தேன். அதன் பின்னர் என் தந்தையின் ஆட்டோமேட்டிவ் தொழிலை கவனித்துக் கொண்டேன்.
ஆடம்பர பொருட்களை விற்பனை செய்யும் இ-காமர்ஸ் வர்த்தக நிறுவனங்கள் மத்தியில் நீங்கள் உங்கள் நிறுவனத்துக்கான மார்க்கெட்டை எப்படி தக்கவைத்துக் கொள்கிறீர்கள்?
எனக்குத் தெரிந்தவரை ஆடம்பர பொருட்களை விற்பனை செய்யும் இ-காமர்ஸ் வர்த்தக நிறுவனங்கள் இன்னும் அதிகளவில் பெருகவில்லை. இருப்பினும், வெகு விரைவில் இத்துறையிலும் இ-காமர்ஸ் வர்த்தக நிறுவனங்கள் பெருகும் என எதிர்பார்க்கிறேன். அப்போது சவால்களை எதிர்கொள்வது குறித்து திட்டமிட்டு வருகிறேன்.
ராக்அண்ட்ஷாப்-ஐ (RocknShop) தொடங்கப்பட்டதன் முதல் எப்போதாவது அதை மார்க்கெட்டிங் செய்ய பிரத்யேக முயற்சி எடுத்திருக்கிறீர்களா? மக்கள் தொடர்பு பணிகள் என்னென்ன செய்திருக்கிறீர்கள்? இது எவ்வளவு தேவையானது என நீங்கள் கருதுகிறீர்கள்? இளம் தொழில் முனைவோருக்கு நீங்கள் சொல்லும் அறிவுரை என்ன?
வெளியாட்கள் மூலம் விளம்பரம் செய்வதும் அவசியம். அதேபோல் நிறுவனத்துக்குள்ளும் இது தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களை நடத்த வேண்டும்.
ஏனெனில், சரியான தகவல்களை பறிமாறிக் கொள்ள இது ஒரு சரியான தளத்தை ஏற்படுத்தித் தரும்.
தொழில் முனையும் பெண்களுக்கு உங்கள் அறிவுரை?
உங்கள் கனவுகளை மெய்ப்படச் செய்யுங்கள். உங்கள் தொழில் திறன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்.