குப்பைகளுடன் அசுத்தமாகக் கிடந்த திருவண்ணாமலையில் உள்ள 8 குளங்களை சீரமைத்த இளைஞர் பட்டாளம்!
திருவண்ணாமலை கோவில்கள் நிறைந்த ஓர் அழகிய பகுதி. இங்குள்ள எட்டு குளங்கள் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் இருந்தன. அங்கு வசிப்பவர்கள் குப்பைகளையும் கழிவுகளையும் அவற்றில் சேர்த்து குப்பைத் தொட்டிகளாகவே குளங்களை மாற்றி வைத்திருந்தனர்.
இந்தக் குளங்களைப் பழைய நிலைக்கு திரும்பக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளது 20-30 இளைஞர்கள் அடங்கிய ஒரு குழு. இந்த இளைஞர்கள் 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சுத்தம் செய்யும் பணியைத் துவங்கினர். இந்தப் பணியை ஞாயிற்றுக்கிழமைகளில் மேற்கொண்டனர். தண்ணீரை சுத்தப்படுத்த சுமார் மூன்று முதல் நான்கு மணி நேரங்களை ஒதுக்கினர்.
நம்மில் பலர் நம் குழந்தைப் பருவத்தில் இந்தக் குளங்கள் தண்ணீரால் நிரம்பியிருப்பதைப் பார்த்திருப்போம். அதன் பிறகு இந்தப் பழமையான குளங்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை. அத்துடன் குப்பைகள் கொட்டப்படும் இடமாக மாறியது. பல நீர்நிலைகளில் கழிவுநீரும் கலக்கப்பட்டது. இது எங்களை கோபமடையச் செய்தது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று நினைத்தோம். எனவே குளங்களைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டோம்.
இந்த சுத்தப்படுத்தும் முயற்சிக்கு இந்தக் குழுவினர் ’நீர்த்துளி’ என பெயரிட்டனர். ஆரம்பத்தில் 30 நபர்களுடன் துவங்கப்பட்டு இந்த எண்ணிக்கை மெல்ல அதிகரித்தது. பொதுமக்களின் எண்ணற்ற தொடர் கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் கவனம் செலுத்தாத காரணத்தால் இந்நகரத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சுத்தப்படுத்தும் பணியை தாங்களாகவே மேற்கொள்ளத் துவங்கினர்.
இந்தியாவின் 91 பெரிய நீர்த்தேக்கங்களின் ஒட்டுமொத்த கொள்ளளவு 250 பில்லியன் கன அடி இருக்கையில் 157.8 பில்லியன் கன அடி அளவே நீர் உள்ளது என மத்திய நீர்வள ஆணையம் (CWC) தெரிவிக்கிறது. இதிலிருந்து இந்தியாவிலுள்ள நீர்த்தேக்கங்களில் உள்ள நீரின் அளவு 71 சதவீதம் மட்டுமே இருப்பது தெளிவாகிறது. இந்தியாவில் அதிகபட்ச நீர் அளவு கிழக்குப் பகுதியில் 44 சதவீதமாகவும் மத்திய பகுதியில் 36 சதவீதமாகவும் இருப்பதாக மத்திய நீர்வள ஆணையம் தெரிவிக்கிறது. தெற்குப் பகுதியில் 20 சதவீதமும், மேற்குப் பகுதியில் 26 சதவீதமும் வடக்குப் பகுதியில் 27 சதவீதமும் நீர் அளவு உள்ளது.
கட்டுரை : Think Change India