'ஆதார் திட்டத்தை 1.30 பில்லியன் டாலருக்கு பதிலாக 20 மில்லியன் டாலரில் செய்திருக்கலாம்' - சபீர் பாட்டியா அதிரடி!
ஆதார் திட்டம் செலவு மிக்க தவறான நடவடிக்கை என்றும், 1.30 பில்லியன் டாலருக்கு பதிலாக, 20 மில்லியன் டாலரில் இதை செய்திருக்கலாம் என்று, ஹாட்மெயில் நிறுவனர் சபீர் பாட்டியா கூறியுள்ளார்.
ஆதார் திட்டம் செலவுமிக்க தவறான நடவடிக்கை என்றும், 1.30 பில்லியன் டாலருக்கு பதிலாக, 20 மில்லியன் டாலரில் இதை செய்திருக்கலாம் என்று, ஹாட்மெயில் நிறுவனர் சபீர் பாட்டியா கூறியுள்ளார். பிரகார் குப்தாபின் பாட்காஸ்டிங் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய சபீர் பாட்டியா இவ்வாறு அதிரடியாக கருத்து தெரிவித்தார்.
ஆதார் திட்டம் பயோமெட்ரிக் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது மிகவும் தவறானது என்றும் இதைவிட எளிமையான, செலவு குறைந்த தொழில்நுட்பங்கள் கருத்தில் கொள்ளப்படவில்லை, என்றும் அவர் தெரிவித்தார்.

"உங்கள் பயோமெட்ரிக் எல்லாவற்றையும் ஆதார் திட்டம் சேகரித்தது. ஆனால், இவை எங்கே பயன்படுத்தப்படுகின்றன? எல்லா ஸ்மார்ட்போன்களிலும் இந்த வசதி இருக்கும், வீடியோ மற்றும் வாய்ஸ் பிரிண்ட் நுட்பம் ஏற்றதாக இருந்திருக்கும்," என்று சபீர் பாட்டியா கூறினார்.
இதை 20 மில்லியன் டாலருக்கும் குறைவாக உருவாக்கியிருக்கலாம் என்றார்.
ஆதார் திட்டத்தை செயல்படுத்தியவர்களின் தொழில்நுட்ப ஆற்றலையும் அவர் கேள்விக்குள்ளாக்கினார்.
"இதை செய்தது யாராக இருந்தாலும் அவர் தொழில்நுட்பவாதியாக இருக்க முடியாது. அவர்களுக்கு தொழில்நுட்பமும் தெரியாது, கோடிங்கும் செய்திருக்க மாட்டார்கள். இதுவே பிரச்சனைக்குக் காரணம்” என்று கூறினார்.
நான் தொழில்நுட்பத்தை எனது கைகளால் உருவாக்கி இருக்கிறேன். எந்த தொழில்நுட்பத்தை எதற்காக எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது எனக்குத்தெரியும் என்று அவர் மேலும் கூறினார்.
"நம்முடைய குரலும், வீடியோக்களும் தனித்தன்மை வாய்ந்தவை என்று வாய்ஸ் பிரிண்ட் நுட்பம் பற்றி கூறினார். தரவுபட்டியலில் சேமிக்கப்படும் வாய்ஸ் பிரிண்ட் தனித்தன்மை வாய்ந்த அடையாளமாக விளங்கும் என்றும் கூறினார். இந்த தொழில்நுட்பத்தை செலவில்லாமல் உருவாக்கி இருக்கலாம்," என்றார்.
யுபிஐ டிஜிட்டல் பரிவர்த்தனை வசதி பற்றி குறிப்பிட்டவர், இது வென்மோ பேமெண்ட் சேவை போன்றது தான் பெரிதாக எதுவுமில்லை, என்றார்.
Edited by Induja Raghunathan