Gold Rate Chennai: அடங்கியது ஆட்டம்; அப்பாடா - குறைந்தது தங்கம் விலை!
கடந்த சில நாட்களாகவே அடங்காமல் அதிரடி ஆட்டம் காணும் வகையில் உயர்ந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை தற்போது குறையத் தொடங்கியிருக்கிறது.
கடந்த சில நாட்களாகவே அடங்காமல் அதிரடி ஆட்டம் காணும் வகையில் உயர்ந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை தற்போது குறையத் தொடங்கியிருக்கிறது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது நகை வாங்க விழைவோருக்கு நிம்மதி தந்துள்ளது.
சென்னையில் வியாழக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.20 உயர்ந்து ரூ.8,310 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.160 உயர்ந்து ரூ.66,480 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.22 உயர்ந்து ரூ.9,066 ஆகவும், சவரன் விலை ரூ.176 உயர்ந்து ரூ.72,528 ஆகவும் இருந்தது. தற்போது விலை குறையத் தொடங்கியுள்ளது.
தங்கம் விலை நிலவரம் - வெள்ளிக்கிழமை (21.3.2025):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.40 குறைந்து ரூ.8,270 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.320 குறைந்து ரூ.66,160 ஆகவும் உள்ளது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.44 குறைந்து ரூ.9,022 ஆகவும், சவரன் விலை ரூ.352 குறைந்து ரூ.72,176 ஆகவும் இருக்கிறது.
வெள்ளி விலை:
சென்னையில் இன்று (21.3.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.2.10 குறைந்து ரூ.112 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.2,100 குறைந்து ரூ.1,12,000 ஆகவும் விற்பனை ஆகிறது.

காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. தற்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சற்றே கட்டுக்குள் உள்ளது. பங்குச் சந்தையும் வெகுவாக மீண்டதுடன் தொடர்ச்சியாக ஏற்றத்துடன் வர்த்தகம் ஆகிறது. இதனால், தங்கத்தின் மீதான முதலீடு குறைந்து, ஆபரணத் தங்கம் விலையும் சரியத் தொடங்கியிருக்கிறது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,270 (ரூ.40 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.66,160 (ரூ.320 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.9,022 (ரூ.44 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.72,176 (ரூ.352 குறைவு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,270 (ரூ.40 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.66,160 (ரூ.320 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.9,022 (ரூ.44 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.72,176 (ரூ.352 குறைவு)
Edited by Induja Raghunathan