Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

மலிவு விலையில் லேப்டாப் - ஏழை மாணவர்களின் வளமான எதிர்காலத்துக்கு உதவிடும் Primebook!

ஐஐடி முன்னாள் மாணவர்களால் நிறுவப்பட்ட பிரைம்புக் நிறுவனம், மாணவர்களின் வளமான எதிர்கால வாழ்விற்கு மலிவு விலையில் மடிகணினிகளை தயாரித்து, மாற்றத்திற்கு வித்திட்டு வருகிறது.

மலிவு விலையில் லேப்டாப் - ஏழை மாணவர்களின் வளமான எதிர்காலத்துக்கு உதவிடும் Primebook!

Friday March 07, 2025 , 5 min Read

ஐஐடி முன்னாள் மாணவர்களால் நிறுவப்பட்ட பிரைம்புக் நிறுவனம், மாணவர்களின் வளமான எதிர்கால வாழ்விற்கு மலிவு விலையில் மடிகணினிகளை தயாரித்து, மாற்றத்திற்கு வித்திட்டு வருகிறது...

பதினைந்து வயதான அர்ஜுனுக்கு அறிவியல் படிப்பில் ஆர்வம் அதிகம். ஆனால், உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் உள்ள அவனது பள்ளியில் அவனது கனவுகளை நிறைவேற்ற போதுமான வளங்கள் இல்லை. அவனது குடும்பத்தாலும் ஒரு கணினி வாங்க முடியவில்லை.

நகர்ப்புறங்களில் உள்ள அவனது சகாக்கள் ஆன்லைன் பயிற்சிகள் மற்றும் டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்தி கற்றுக்கொள்ள முடியும் என்றாலும், அர்ஜுன் கடன் வாங்கிய பாடப்புத்தகங்களை மட்டுமே நம்பியிருந்தான். அறிவியலில் சிறந்து விளங்க வேண்டும் என்ற அவனது கனவு அடைய முடியாததாகத் தோன்றியது - பிரைம்ஓஎஸ் மூலம் இயக்கப்படும் குறைந்த விலை மடிக்கணினி அவனது பள்ளியை அடையும் வரை...

primebook

இந்தியாவின் டிஜிட்டல் பிளவைக் குறைக்கும் மடிகணினி!

டெல்லியைச் சேர்ந்த மலிவு விலை மடிக்கணினி தயாரிப்பாளரான பிரைம்புக்கின் கணினி மூலம், அர்ஜுன் அவனது சகாக்களுடன் இணையவும், குறியீட்டு முறை மற்றும் அறிவியல் கருத்துக்களை ஆன்லைனில் ஆராயவும் முடிந்தது. வளர்ந்து வரும் டிஜிட்டல் பிளவு (கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் வசதி உள்ளவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் இடையே உள்ள இடைவெளி) காரணமாக இந்தியாவில் இன்று மில்லியன் கணக்கான மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை அர்ஜுனின் கதை பிரதிபலிக்கிறது.

இந்த இடைவெளியை குறைக்கும் பொருட்டும், மாணவர்களின் வளமான எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் மலிவு விலையிலான கணினிகளை தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கினர் ஐஐடி டெல்லி முன்னாள் மாணவர்களான அமன் வர்மா மற்றும் சித்ரன்ஷு மஹந்த்.

2018ம் ஆண்டு இரு நண்பர்களால் நிறுவப்பட்ட நிறுவனம், இதுவரை, 50,000 யூனிட்டுகளுக்கு மேல் விற்பனை செய்துள்ளது. மேலும், 2024ம் நிதியாண்டில் ரூ.50 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. டெல்லியின் குடிசைவாழ் பகுதிகளில் அவர்கள் தன்னார்வத் தொண்டு செய்தபோது தான் பிரைம்புக் எனும் ஸ்டார்ட்அப்பை தொடங்குவதற்கான யோசனை பிறந்துள்ளது.

கற்றுக்கொள்ள ஆர்வம் இருப்பினும் அப்பகுதியில் இருந்த மாணவர்களுக்கு போதுமான டிஜிட்டல் அணுகல் இல்லாதது, அவர்களின் கல்வியை பாதித்ததை, அவர்கள் அப்பகுதியில் பணிபுரியும் போது உணர்ந்துள்ளனர்.

"படிக்கவும், கற்றுக்கொள்ளவும் ஆர்வத்துடனும், அதற்கான வளங்கள் இல்லாத மாணவர்களை நாங்கள் சந்தித்தோம். ஒரு எளிய கணினி சாதனம் இல்லாதது அவர்களது திறன் வளர்ச்சியை எந்தளவிற்கு தடுக்கிறது என்பதைக் கண்கூடாக பார்த்தோம். ஸ்மார்ட்போன்கள் புழக்கம் அதிகரித்து இருப்பினும், ஆராய்ச்சி, பணிகள் மற்றும் டிஜிட்டல் கற்றல் தளங்களை அணுகுவதற்கும், மாணவர்களின் குறிப்பிட்ட தேவைகளையும் அவை பூர்த்தி செய்வதில்லை. பிரச்சனை என்னவெனில் மலிவு விலையில் கணினி கிடைக்கவில்லை என்பது மட்டுமல்ல. இந்தியாவில் மாணவர்களின் தனித்துவமான தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட ஒரு தயாரிப்பு இல்லாததுதான் பிரச்சினை," என்று பிரைம்புக்கின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மஹந்த் யுவர்ஸ்டோரியிடம் பகிர்ந்தார்.

மலிவுவிலையில் மடிகணினி உருவாக்கி ரூ.50 கோடி வருவாய்!

மத்திய கல்வி அமைச்சகத்தின் ஒருங்கிணைந்த மாவட்ட கல்வி தகவல் அமைப்பு (UDISE) 2023-௸-24 அறிக்கையின்படி, இந்தியாவில் 57% பள்ளிகளில் மட்டுமே செயல்பாட்டு கணினிகள் உள்ளன, மேலும் 53% பள்ளிகளில் இணைய அணுகல் உள்ளது. இது குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மாணவர்கள் இன்னும் அத்தியாவசிய டிஜிட்டல் வளங்கள் இல்லாமல் இருப்பதை எடுத்துக்காட்டுகிறது. பிரைம்புக்கின் முதன்மை மடிக்கணினி பிரைம்ஓஎஸ்ஸில் இயங்குகிறது. ஆண்ட்ராய்டு அடிப்படையிலான இயக்க முறைமை மற்றும் 200,000க்கும் மேற்பட்ட கல்வி செயலிகளுடன் இணக்கமானது.

பிரைம்புக் வைஃபை மாடல் ரூ.12,990 விலையிலும், மற்றும் ரூ.14,990 விலையில் பிரைம்புக் 4ஜி மாடல் என இரண்டு மாடல்களை வடிவமைத்துள்ளனர்.

"எளிமையான, மலிவு மற்றும் மிகவும் செயல்பாட்டுடன், மாணவர்கள் தயக்கமின்றி பயன்படுத்தக்கூடிய ஒரு தயாரிப்பை நாங்கள் வழங்க விரும்பினோம்."

மடிக்கணினி ஆனது மீடியாடெக் MT8788 ஆக்டா-கோர் செயலியால் இயக்கப்படுகிறது. இது 2.0 GHz வேகத்தில் இயங்குகிறது. பல்பணிக்கு உகந்தாற்போன்று மென்மையான செயல்திறனை உறுதி செய்கிறது. 4 ஜிபி LPDDR4 ரேம் மற்றும் 64 ஜிபி அல்லது 128 ஜிபி (SD கார்டு வழியாக 512 ஜிபி வரை விரிவாக்கக்கூடியது) சேமிப்பு விருப்பங்களுடன், இது பல்வேறு பணிகளுக்கு போதுமான இடத்தை வழங்குகிறது. வசதியான பார்வைக்காக பிரைம்புக் 11.6-இன்ச் HD IPS டிஸ்ப்ளே (1366 x 768 தெளிவுத்திறன்) கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த சாதனம் 4G மற்றும் Wi-Fi இணைப்பு இரண்டையும், மற்றும் புளூடூத் மற்றும் USB போர்ட்களையும் ஆதரிக்கிறது. கூடுதலாக, ஆறு மணி நேர பேட்டரி ஆயுளைக் கொண்டுள்ளது. வெறும் 1.06 கிலோ எடை கொண்டது, என்று பிரைம்புக்கின் அம்சங்களை விவரித்தார் அவர்.

இதுவரை, பிரைம்புக் நிறுவனம் 50,000 யூனிட்டுகளுக்கு மேல் விற்பனை செய்துள்ளது. மேலும், 2024ம் நிதியாண்டில் ரூ.50 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. கடந்த காலாண்டில் மட்டும் ரூ.18 கோடி வருவாய் ஈட்டியது. 2025ம் நிதியாண்டுக்குள் ரூ.70 கோடி வருவாயை அடைய இலக்கு வைத்துள்ளது.

தவிர கடந்த ஆகஸ்ட் மாதத்தில், ஷார்க் டேங்க் இந்தியாவிடமிருந்து ரூ.75 லட்சம் நிதியைப் பெற்றது. வினீதா சிங், அமன் குப்தா, பியுஷ் பன்சல் மற்றும் அனுபம் மிட்டல் ஆகியோரிடமிருந்து தனிப்பட்ட நிதியையும், ஐந்துபேரிடமிருந்தும் ஒருங்கிணைந்த நிதியையும் பெற்றது. இறுதியில், இந்த ஸ்டார்ட்அப் பியுஷ் பன்சல் மற்றும் அமன் குப்தாவிடமிருந்து 3% பங்குக்கு முதலீட்டை ஏற்றுக்கொண்டது.

வரும் ஏப்ரல் மாதத்தில் பிரைம்புக் 2.0 வைஃபை மாடல் (சுமார் ரூ.13,990 முதல் ரூ.14,990 வரை) மற்றும் பிரைம்புக் 2.0 4ஜி மாடல் (ரூ.16,990 விலை) உள்ளிட்ட மூன்று புதிய மாடல்களை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் புக் போன்று டீடாச்சாபெல் கீபோர்ட் மாடலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. பிரிக்கக்கூடிய கீபோர்ட் மாடலின் விலையை ரூ.18,000 முதல் ரூ.19,000 வரை நிர்ணயித்துள்ளது.

ஆரம்பத்தில், பிரைம்புக், NGOக்கள், பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து, பின்தங்கிய மாணவர்களைச் சென்றடைய, B2B மார்க்கெட்டை இலக்காகக் கொண்டது. இந்தியாவில் சாதனங்களைத் தயாரிப்பதாகக் கூறும் இந்த ஸ்டார்ட்அப், தரத்தில் சமரசம் செய்யாமல் மலிவு விலையில் மடிக்கணினியை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொண்டது. ஆரம்பகால சோதனைகளில் பேட்டரி உகப்பாக்கம் மற்றும் மென்பொருள் இணக்கத்தன்மை உள்ளிட்ட தொழில்நுட்ப சிக்கல்கள் வெளிப்பட்டன.

prime book

"டிஜிட்டல் கல்வி கருவிகளுக்கான தேவை உலகளாவியது..."

"எங்களது முதல் பதிப்பில் வரம்புகள் இருந்தன. மேலும், NGOக்கள் மற்றும் பைலட் பயனர்களிடமிருந்து வந்த பீட்பேக்குகள் தயாரிப்பைச் செம்மைப்படுத்த உதவின. இதற்கிடையில், தொற்றுநோய் சிரமத்தைச் சேர்த்தது. விநியோகச் சங்கிலிகளை சீர்குலைத்தது. வெளியீட்டை தாமதப்படுத்தியது. இருப்பினும், வடிவமைப்பை மேம்படுத்தவும் குறைபாடு விகிதத்தை 3% க்கும் குறைவாகக் குறைப்பதற்கான நேரத்தை அது அளித்தது. அது ஒரு கடினமான கட்டம். ஆனால் ஒவ்வொரு சவாலும் எங்களை புதுமைப்படுத்தத் தூண்டியது, என்றார் அவர்.

2023ம் ஆண்டு, பிரைம்புக் நுகர்வோர் சந்தையில் நுழைந்து, நடுத்தர மற்றும் குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு லேப்டாப்களை அணுகக்கூடியதாக மாற்ற போட்டித்தன்மையுடன் விலை நிர்ணயம் செய்தது. கூடுதலாக, ஆப்பிரிக்க நாடுகள், பங்களாதேஷ், நேபாளம் மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட சர்வதேச சந்தைகளில் விரிவடைய பிரைம்புக் திட்டமிட்டுள்ளது, அங்கு மலிவு விலையிலான கல்வி சார்ந்த சாதனங்களுக்கு அதிக தேவையுள்ளன.

"ஒவ்வொரு நாடுகளுக்கும் இடையே சவால்கள் வேறுபடலாம். ஆனால் மலிவு விலையிலான டிஜிட்டல் கல்வி கருவிகளுக்கான தேவை உலகளாவியது. மாணவர்களின் வளர்ந்து வரும் தேவைகளுக்கு ஏற்ப, பிரிக்கக்கூடிய திரைகள் மற்றும் மெட்டல் பாடி கொண்ட லேப்டாப்கள் போன்ற புதிய தயாரிப்பு வரிசைகளையும் ஆராய்ந்து வருகிறோம். தொடர்ந்து புதுமைகளை உருவாக்க விரும்புகிறோம், எங்கள் சாதனங்கள் மாணவர்களின் வளர்ந்து வரும் தேவைகளுக்கு பொருத்தமானதாக இருப்பதை உறுதிசெய்கிறோம்," என்றார்.

டெக்னாவியோவின் கூற்றுப்படி, 2023ம் ஆண்டு மற்றும் 2028ம் ஆண்டுக்கு இடையில் இந்திய ஆன்லைன் கல்வி சந்தை அளவு 6.47 பில்லியன் டாலர் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Chromebook போன்ற நிறுவனங்களிடமிருந்து, குறிப்பாக ரூ.20,000க்கும் உள்ளான விண்டோஸ் மடிக்கணினி பிரிவில் நேரடி போட்டியை எதிர்கொள்கிறது. கூடுதலாக, பிரிக்கக்கூடிய சாதனத்தை அறிமுகப்படுத்திய பிறகு, இது ஒரு டேப்லெட் மற்றும் கீபோர்டை இணைக்கும் தயாரிப்புகளுடன் போட்டியிடும்.

"Chromebooks போன்ற சாதனங்கள் போட்டியாக இருந்தாலும், இயக்க முறைமைகளில் உள்ள வேறுபாடும் கல்வியில் கவனம் செலுத்துவதும் எங்களை வேறுபடுத்துகிறது," என்றார் மஹந்த்.