'Brands of New India' - தங்கள் ப்ராடக்ட்களை சென்னை நிகழ்வில் காட்சிப்படுத்திய 30+ தமிழக D2C ப்ராண்ட்கள்!
இந்திய பிராண்ட்களை ஊக்குவிக்கும் வகையில் யுவர்ஸ்டோரி நடத்தி வரும் 'பிராண்ட்ஸ் ஆப் நியூ இந்தியா’ வின் D2C Carwaan Meetup சென்னை பதிப்பு நடைப்பெற்றது. இதில் 30+ ப்ராண்ட்கள் கலந்துகொண்டு தங்களின் ப்ராடக்ட்களை காட்சிப்படுத்தினர்.
இந்திய பிராண்ட்களை ஊக்குவிக்கும் வகையில் யுவர்ஸ்டோரி நடத்தி வரும் ’பிராண்ட்ஸ் ஆப் நியூ இந்தியா’ ’Brands of New India' நிகழ்ச்சியின் ‘D2C Carwaan Meetup' சென்னையில் ஏப்ரல் 30ம் தேதி நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தைச்சேர்ந்த D2C நிறுவனர்கள் தங்கள் தயாரிப்புகளை/ப்ராடக்ட்களை காட்சிப்படுத்தினர்.
உள்நாட்டு அதாவது ‘மேட் இன் இந்தியா’ பிராண்ட்களை ஊக்குவிக்கும் ’பிராண்ட்ஸ் ஆப் நியூ இந்தியா’ நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக யுவர்ஸ்டோரி நுகர்வோருடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் D2C பிரிவிலான நிறுவனர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சியை தலைநகர் தில்லி, மும்பை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் நடத்தியது.
இந்த வரிசையில் ஏப்ரல் மாதம் 30ம் தேதி சென்னை பதிப்பு ஐஐடி ரிசர்ச் பார்க் வளாகத்தில் நடைபெற்றது.
D2C என்பது ப்ரான்ட்கள் தங்களின் தயாரிப்பை வாடிக்கையாளர்களிடன் நேரடியாக ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலம் விற்பனை செய்வதாகும்.
D2C துறையில் உள்ள நிறுவனர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் இதர பங்குதாரர்கள் சந்தித்து எண்ணங்களை பரிமாறிக்கொள்வதற்கான வாய்ப்பாக அமையும் இந்த நிகழ்ச்சி, சென்னையில் வெற்றிகரமாக நடந்தது.
சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த டி2சி நிறுவனங்கள் யுவர்ஸ்டோரி நடத்திய ‘D2C Carwaan Meetup' சென்னையில் கலந்துகொள்ள விண்ணப்பித்திருந்தனர். 100+ அதிகமான விண்ணப்பங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 30+ டி2சி ப்ராண்ட் நிறுவனர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கலை, அக்ரி, ஆர்கானிக் உணவு வகைகள், பேஷன், ஸ்னாக்ஸ், ஹெல்த் பாணங்கள் என பலவித தயாரிப்புகளுடனான ப்ராண்ட்கள் இதில் கலந்து கொண்டு, யுவர்ஸ்டோரி குழுவினர், மற்றும் வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் முதலீட்டாளர்களிடம் தங்களின் ப்ராடக்ட்கள் குறித்து விளக்கினார்கள்.
சென்னையைச் சேர்ந்த ஃபிண்டெக் நிறுவனமான ’IppoPay' இந்நிகழ்வின் ஸ்பான்சர்களாக இருந்தனர்.
‘D2C Carwaan Meetup'-க்கு வருகை தந்த டான்சிம் சிஇஒ சிவராஜா ராமனாதன், காட்சிப்படுத்தப்பட்ட ப்ராண்ட்களையும், அதன் நிறுவனர்களையும் சந்தித்து அவர்களின் தயாரிப்பு குறித்தும், தொழிலை அடுத்தக்கட்டம் எடுத்துச்செல்ல சில அறிவுரைகளையும் வழங்கினார். அவர் நிறுவனர்கள் மத்தியில் பேசுகையில்,
“சிறு, குறு ஸ்டார்ட்-அப் தொழில் நிறுவனங்கள் மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு பெரிதும் உதவும் ஒரு முக்கிய துறையாகும். அதனால் தமிழக அரசின் ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைய, டான்சிம் சார்பில் இந்த டி2சி நிறுவனங்களுக்கு தேவைப்படும் உதவிகளையும், வழிகாட்டுதலையும் வழங்குவோம். இது குறித்து என்னை சந்தித்து உங்களின் தேவைகள் குறித்து பகிர்ந்து கொள்ளலாம்,” என்றார்.
நிகழ்வுக்கு வருகை தந்த மற்றொரு சிறப்பு விருந்தினரான கிஸ்ஃப்ளோ நிறுவனர் மற்றும் Dream TamilNadu நிறுவனர், சுரேஷ் சம்பந்தம், டி2சி நிறுவனர்களையும் அனைத்து ப்ராடக்ட்களையும் விரிவாக பார்வையிட்டார். தொழில் விரிவாக்கம் பற்றி பகிர்ந்து பேசிய அவர்,
“டி2சி பிரிவில் இருப்பவர்கள் தங்களின் தயாரிப்பில் ஒரு ப்ராடக்டில் கவனம் செலுத்துவது நல்லது. அந்த ப்ராடக்ட் வித்தியாசமாக, கிரியேட்டிவாக இருக்கும் பட்சத்தில் மக்களிடம் சென்றடையலாம், அதோடு அந்த ஒரு பொருளை அதிக அளவில் தயாரித்து விற்பனை செய்வதன் மூலம் தொழிலை பெருக்கமுடியும்,” என்று நிறுவனர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
சென்னை சந்திப்பில், முதலீட்டாளர்கள் சிலர் டி2சி நிறுவனர்களை சந்தித்து உரையாடினர். அதோடு யுவர்ஸ்டோரி குழுவினரிடமும் தங்கள் தயாரிப்புகளை நிறுவனர்கள் விரிவாக விளக்கினார்கள்.
Brands of New India பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்