Gold Rate Chennai: நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்; தங்கம் விலை அதிரடி சரிவு!
சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.55 குறைந்து 7,230 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் ரூ.60 குறைந்து 7,887 ரூபாயாகவும் உள்ளது.
வெள்ளிக்கிழமையான இன்று (13-12-2024) சென்னையில் ஆபரணத்தங்கம் மற்றும் சுத்தத்தங்கங்களின் விலைகள் சரிந்துள்ளன. ஆபரணத்தங்கம் சவரன் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்தது.
தங்கம் விலை நிலவரம்: வெள்ளிக்கிழமை (13.12.2024):
சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.55 குறைந்து 7,230 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் ரூ.60 குறைந்து 7,887 ரூபாயாகவும் உள்ளது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.440 குறைந்து ரூ.57,840 ஆகவும் உள்ளன.
சென்னை சந்தையில் 10 கிராம், 22 காரட் ஆபரணத்தங்கம் விலை ரூ.550 குறைந்து ரூ.72,300 ஆகவும் 24 காரட் சுத்தத்தங்கம் 10 கிராம் விலை ரூ.600 சரிந்து ரூ.78,870-ற்கும், 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை ரூ.480 சரிந்து ரூ.63,096 என்றும் விற்பனையாகின்றன.
வெள்ளி விலையும் சரிவு:
வெள்ளி விலை வெள்ளிகிழமையான இன்று (13-12-24) 1 கிராம் விலை ரூ.3 குறைந்து 101 என்றும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,01000என்றும் உள்ளன.
காரணம்:
டாலர் மதிப்பு வலுவாக இருப்பதால் தங்கத்தில் பிற நாட்டு பணத்தில் முதலீடு செய்வது அதிக செலவினம் ஆகும். இதனையடுத்து, தங்கத்திற்கான தேவை குறைவதால் விலையும் குறைகிறது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,230(மாற்றம்ரூ.55குறைவு
> 22 காரட் தங்கம்8கிராம்-ரூ.57,840(மாற்றம்ரூ440குறைவு)
> 24 காரட் தங்கம்1கிராம்-ரூ.7,887(மாற்றம்ரூ60குறைவு)
> 24 காரட் தங்கம்8கிராம்-ரூ.63,096(மாற்றம்ரூ480குறைவு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,230(மாற்றம்ரூ.55குறைவு
> 22 காரட் தங்கம்8கிராம்-ரூ.57,840(மாற்றம்ரூ440குறைவு)
> 24 காரட் தங்கம்1கிராம்-ரூ.7,887(மாற்றம்ரூ60குறைவு)
> 24 காரட் தங்கம்8கிராம்-ரூ.63,096(மாற்றம்ரூ480குறைவு)