$1 பில்லியன் மதிப்பில் 788 ஏர் ஆம்புலன்ஸ் சப்ளை செய்ய சென்னை eplane ஒப்பந்தம்!
ICATT உடனான இந்த ஒப்பந்தத்தில், நோயாளிகள், உடல் உறுப்புகள், மருத்துவ கருவிகள், மருந்துகள் ஆகியவற்றை கொண்டு செல்லும் நேரத்தை குறைக்க eplane ஏர் ஆம்புலன்ஸ் நோக்கம் கொண்டுள்ளது. குறிப்பாக கிராமப்புறம் மற்றும் விபத்து நிகழும் பகுதிகளுக்கு இது பொருந்தும்.
இந்தியாவின் இ விடால் (eVTOL) நிறுவனமான இபிளேன் (eplane) ஸ்டார்ட்-அப், இந்தியாவின் ஏர் ஆம்புலன்ஸ் சேவை நிறுவனம் இண்டர்நேஷனல் கிரிடிகல் கேர் ஏர் டிரான்ஸ்பர் டீம் (ICATT), உடன் 788 ஏர் ஆம்புலன்ஸ்கள் வழங்குவதற்கான ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்ததின் மதிப்பு 1 பில்லியன் டாலருக்கும் அதிகமாகும்.
இவிடால் துறையில் மிகப்பெரிய ஆரம்ப நிலை ஒப்பந்தங்களில் ஒன்றாக இது அமைகிறது. நகரம் மற்றும் கிராமப்புற சுகாதார உள்கட்டமைப்பில் ஏர் மொபிலிட்டி வசதியை இணைக்கும் வகையில் அமைகிறது.

இந்த கூட்டு மூலம், ICATT இந்தியாவின் மிகப்பெரிய ஏர் ஆம்புலன்ஸ் வலைப்பின்னலை அமைக்க திட்டமிட்டுள்ளது. பூகோள சவால்களை மீறி நோயாளிகளுக்கு தேவையான அணுகல் வசதியை இது அளிக்கும். இபிளேன் விமானங்கள், ஏர் ஆம்புலன்ஸ் தர நிரணயத்தை பூர்த்தி செய்ய தேவையான தொழில்நுட்ப மற்றும் செயல்முறை அனுபவத்தை நிறுவனம் வழங்கும்.
இபிளேனின் முன்னிலை விமானமான, e200x, செயல்திறன் வாய்ந்த, அல்ட்ரா இலகுவான இவிடால் வாகனம் நீடித்த தன்மை கொண்ட வான் போக்குவரத்திற்காக வடிவமைக்கப்பட்டது.
8 மீட்டர் இறக்கை பரப்பு கொண்ட இந்த வாகனம் கட்டிட மேல் பகுதி அல்லது சாலையோர இடங்களில் இருந்து மேலெழுந்து பறக்கக் கூடியது. e200x, தரை வாகனங்களை விட நோயாளிகளை ஏழு மடங்கு வேகமாக கொண்டு செல்லக்கூடியது, என நிறுவனம் தெரிவிக்கிறது.
இந்த கூட்டு, நோயாளிகள், உடல் உறுப்புகள், மருத்துவ கருவிகள், மருந்துகள் ஆகியவற்றை கொண்டு செல்லும் நேரத்தை குறைக்கும் நோக்கம் கொண்டுள்ளது. குறிப்பாக கிராமப்புறம் மற்றும் விபத்து நிகழும் பகுதிகளுக்கு இது பொருந்தும்.
“உடல் உறுப்புகளை வான் வழியே கொண்டு செல்வதற்கான ஏற்ற தீர்வு இதுவாகும். உடல் உறுப்புக்கு பதிவு செய்யும் நோயாளிகளில் 95 சதவீதம் பேர், உறுப்பு கிடைப்பதற்கு முன் இறக்கின்றனர். இதற்கு முக்கியக் காரணம், உறுப்பு தானம் செய்பவர்கள் இல்லாதது அல்ல, லாஜிஸ்டிக்ஸ் தான்,” என்கிறார் ICATT நிறுவனர் டாக்டர்.ஷாலிடி நால்வத்.

2017ல் டாக்டர் ராகுல் சிங் சர்தார் மற்றும் டாக்டர்.ஷாலினியால் துவக்கப்பட்ட நிறுவனம் பெங்களூரு, போபால். மாலே- மாலத்தீவுகள் உள்ளிட்ட இடங்களில் செயல்படுகிறது. துபாயிலும் மையத்தை அமைக்க உள்ளது. இதுவரை நிறுவனம், 2,348 நோயாளிகளை வான் வழியே கொண்டு சென்றுள்ளது.
“ஏர் ஆம்புலன்ஸ்களை பெரிய அளவில் இயக்குவதன் மூலம், வேகமான அவசர சிகிச்சை அணுகல் வசதி கிடைப்பதோடு, விபத்து இடங்கள் மற்றும் மேம்பட்ட மருத்துவ வசதி இடையிலான இடைவெளியை குறைத்து, உயிரிழைப்புகளை குறைத்து மருத்துவ அணுகல் வசதியை மேம்படுத்துகிறது,” என்கிறார் இபிளேன் கம்பெனி நிறுவனர் பேராசிரியர் சத்யா சக்ரவர்த்தி.
சென்னையைச் சேர்ந்த இந்நிறுவனம், கடந்த ஆண்டு சிவில் ஏவியேஷன் இயக்குனரகத்தின் வடிவமைப்பு நிறுவன ஒப்புதலை பெற்றது. மின் வாகனத்திற்கான சான்றிதழுக்கான முக்கிய படியாக இது அமைகிறது.
நவம்பர் மாதத்தில், இபிளேன் பி சுற்றில் 14 மில்லியன் டாலர் திரட்டியது. ஸ்பெஷலே இன்வெஸ்ட் மற்றும் ஆண்டரேஸ் வென்சர்ஸ் இதில் தலைமை வகித்தன. நிறுவனத்தின் மேண்ட் ஏர்கிராப்ட், மேம்பாடு, சான்றிதழ் பணிகளுக்காக இந்த நிதி பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது. இந்த ஆண்டின் மத்தியில் விமான டெஸ்டிங் நடைபெற உள்ளது.
ஆங்கிலத்தில்: இஷான் பத்ரா, தமிழில்: சைபர் சிம்மன்

சென்னை eplane நிறுவன வாகனத்திற்கு சிவில் விமானப் போக்குவரத்து சான்றிதழ் பெற DGCA ஒப்புதல்!
Edited by Induja Raghunathan