Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

Forbes 2025 'மிகவும் சக்திவாய்ந்த நாடுகள்' பட்டியலில் அமெரிக்கா முதலிடம்; இந்தியாவின் இடம் என்ன?

ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள 2025ம் ஆண்டின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களில் இந்தியா இல்லாதது சமூகவலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது.

Forbes 2025 'மிகவும் சக்திவாய்ந்த நாடுகள்' பட்டியலில் அமெரிக்கா முதலிடம்; இந்தியாவின் இடம் என்ன?

Wednesday February 05, 2025 , 2 min Read

2025ம் ஆண்டிற்கான உலகின் 10 சக்தி வாய்ந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது ஃபோர்ப்ஸ் நிறுவனம். பல முக்கிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் பட்டியலில், அமெரிக்கா முதலிடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளன.

அதிக மக்கள் தொகை, நான்காவது பெரிய ராணுவம் மற்றும் ஐந்தாவது பெரிய பொருளாதாரம், என சர்வதேச அளவில் பல சிறப்புகளைக் கொண்ட இந்தியாவை இந்தப் பட்டியலில் 12வது இடத்தில் உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

WPP என்ற உலகளாவிய சந்தைப்படுத்தல் மற்றும் தகவல் தொடர்பு நிறுவனத்தின் ஒரு பிரிவு BAV குரூப், மற்றும் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்டன் பள்ளியைச் சேர்ந்த பேராசிரியர் டேவிட் ரீப்ஸ்டீன் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள், US நியூஸ் & வேர்ல்ட் ரிப்போர்ட்டுடன் இணைந்து இந்த தரவரிசை மாதிரியை உருவாக்கியுள்ளனர்.

2025ம் ஆண்டு பிப்ரவரி நிலவரப்படி, தலைமைத்துவம், பொருளாதார செல்வாக்கு, அரசியல் செல்வாக்கு, வலுவான சர்வதேச கூட்டணிகள் மற்றும் ஒவ்வொரு நாட்டின் ராணுவ வலிமை ஆகிய முக்கிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

forbes

சக்தி வாய்ந்த டாப் 10 நாடுகள்

இந்தப் பட்டியலில் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ள ஒவ்வொரு நாடுகளும், அதன் விபரங்களும் பின்வருமாறு:

1. அமெரிக்கா:

மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP): $30.34 டிரில்லியன்

மக்கள் தொகை: 345 மில்லியன்

அமைவிடம்: வட அமெரிக்கா.

2. சீனா:

மொத்த உள்நாட்டு உற்பத்தி: $19.53 டிரில்லியன்

மக்கள் தொகை: 1.419 பில்லியன்

அமைவிடம்: ஆசியா.

3. ரஷ்யா:

மொத்த உள்நாட்டு உற்பத்தி: $2.2 டிரில்லியன்

மக்கள் தொகை: 144 மில்லியன்

அமைவிடம்: ஆசியா.

4. ஐக்கிய இராஜ்ஜியம்:

மொத்த உள்நாட்டு உற்பத்தி: $3.73 டிரில்லியன்

மக்கள் தொகை: 69 மில்லியன்

அமைவிடம்: ஐரோப்பா.

5. ஜெர்மனி:

மொத்த உள்நாட்டு உற்பத்தி: $4.92 டிரில்லியன்

மக்கள் தொகை: 84 மில்லியன்

அமைவிடம்: ஐரோப்பா.

6. தென் கொரியா:

மொத்த உள்நாட்டு உற்பத்தி: $1.95 டிரில்லியன்

மக்கள் தொகை: 52 மில்லியன்

அமைவிடம்: ஆசியா.

7. பிரான்ஸ்:

மொத்த உள்நாட்டு உற்பத்தி: $3.28 டிரில்லியன்

மக்கள் தொகை: 66 மில்லியன்

அமைவிடம்: ஐரோப்பா.

8. ஜப்பான்:

மொத்த உள்நாட்டு உற்பத்தி: $4.39 டிரில்லியன்

மக்கள் தொகை: 123 மில்லியன்

அமைவிடம்: ஆசியா.

9. சவுதி அரேபியா:

மொத்த உள்நாட்டு உற்பத்தி: $1.14 டிரில்லியன்

மக்கள் தொகை: 34 மில்லியன்

அமைவிடம்: ஆசியா.

10. இஸ்ரேல்:

மொத்த உள்நாட்டு உற்பத்தி: $550.91 பில்லியன்

மக்கள் தொகை: சுமார் 9.38 மில்லியன்;

அமைவிடம்: ஆசியா.

flag

சக்திவாய்ந்த நாடுகளில் இந்தியாவின் இடம்

2025 பிப்ரவரி நிலவரப்படி, உலகின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 12வது இடத்தில் உள்ளது. அதேபோல், உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில், அமெரிக்கா, சீனா, ஜெர்மனி மற்றும் ஜப்பானைத் தொடர்ந்து இந்தியா 5வது இடத்தில் உள்ளது.

அதிக மக்கள் தொகை, நான்காவது பெரிய ராணுவம் மற்றும் ஐந்தாவது பெரிய பொருளாதாரம் கொண்ட இந்தியா, இந்தப் பட்டியல்களில் முன்னிலையில் இல்லாதது இந்திய மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இது பல கேள்விகளையும், விவாதங்களையும் சமூகவலைதளப் பக்கங்களில் கிளப்பியுள்ளது.