ஏஐ துணையோடு விவசாய சேவை வழங்க Agrowing உடன், கருடா ஏரோஸ்பேஸ் கூட்டு!
இந்தியாவில் மேம்பட்ட ஆழ் நுட்பம் மற்றும் ஏஐ நுட்பத்தின் உதவியோடு, வான்வழி துல்லிய விவசாய சேவையை வழங்குவதற்காக, டிரோன் தொழில்நுட்ப நிறுவனம் கருடா ஏரோஸ்பேஸ் மற்றும் சர்வதேச சென்சார் அண்ட் இமேஜரி நிறுவனமான அக்ரோவிங் இணைந்து செயல்பட இருப்பதாக அறிவித்துள்ளன.
இந்தியாவில் மேம்பட்ட ஆழ் நுட்பம் மற்றும் ஏஐ நுட்பத்தின் உதவியோடு, வான்வழி துல்லிய விவசாய சேவையை வழங்குவதற்காக, டிரோன் தொழில்நுட்ப நிறுவனம் 'கருடா ஏரோஸ்பேஸ்' மற்றும் சர்வதேச சென்சார் அண்ட் இமேஜரி நிறுவனமான அக்ரோவிங் இணைந்து செயல்பட இருப்பதாக அறிவித்துள்ளன.
பொது பங்கு வெளியீட்டிற்கு தயாராகி வரும் கருடா ஏரோஸ்பேஸ், பல்வேறு துறைகளில் டிரோன் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. மேக் இன் இந்தியா வாயிலான செலவு குறைந்த டிரோன் பயன்பாடு மூலம், பாதுகாப்பான முறையில் துல்லியமான தரவுகளை சேகரிக்க நிறுவனம் வழி செய்கிறது.
இஸ்ரேல் நாட்டின் Agrowing, ஏஐ துணை கொண்டு இயங்கும் பல் நோக்கி சென்சார்களில் சர்வதேச அளவில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் மேம்பட்ட ஆழ் நுட்பம் மற்றும் ஏஐ நுட்பத்தின் உதவியோடு, வான்வழி துல்லிய விவசாய சேவையை வழங்குவதற்காக, டிரோன் தொழில்நுட்ப நிறுவனம் கருடா ஏரோஸ்பேஸ் மற்றும் அக்ரோவிங் இணைந்து செயல்பட இருப்பதாக கருடா ஏரோஸ்பேஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டு மூலம், கருடா ஏரோஸ்பேஸின் கிசான் டிரோன்கள், இந்திய விவசாயிகளுக்கு, சர்வதேச தரத்திலான நில அளவை சேவைகளை வழங்கும். இந்த மேம்பட்ட தீர்வுகள், கருடா ஏரோஸ்பேஸ் டிரோன்கள் மற்றும் அக்ரோவிங்கின் சென்சார், மற்றும் தொலைதூர இமேஜரி கொண்டு செயல்படும் என்று இது தொடர்பான நிறுவன செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
“கருடா ஏரோஸ்பேஸ் மற்றும் அக்ரோவிங் இடையிலான இந்த கூட்டு, விவசாய உற்பத்தி மற்றும் மண் வளம், பயிர், தண்ணீர் கண்காணிப்பு ஆகியவற்றை மேம்படுத்தும்,” என அக்ரோவிங் சி.இ.ஓ. ஈரா டிவிர் கூறியுள்ளார்.
விவசாயிகளுடன் இணைந்து செயல்படும் மற்றும் அவர்கள் தேவை அறிந்த நிறுவனமான கருடா விளங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
“விவசாய டிரோன்களில் கருடா ஏரோஸ்பேஸ் குறிப்பிடத்தக்க சந்தை பங்கு கொண்டுள்ளது. இந்த கூட்டு மூலம், எங்கள் கிசான் டிரோன்கள், பயிரிடப்படும் இடங்களில் பாதிப்புக்குள்ளாகும் பகுதியை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க உதவும்,” என்று நிறுவன நிறுவனர், சி.இ.ஓ அக்னிஷ்வர் ஜெயபிரகாஷ் கூறியுள்ளார்.
இலை அளவு துல்லியமான படங்கள் மூலம், முன்னதாக பாதிப்புகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க உதவும் சேவையை நிறுவனம் வழங்கும். கிசான் டிரோன்கள் திறனை தொடர்ந்து மேம்படுத்துவோம், என்றும் அவர் கூறியுள்ளார்.
Edited by Induja Raghunathan