Gold Rate Chennai: மாற்றமின்றி ‘கப் சிப்’ நிலையில் தங்கம், வெள்ளி விலை!
நகை வாங்குவோரை அதிர்ச்சியில் ஆழ்த்தி ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.7930 என்கிற உச்சத்தை அடைந்த தங்கம் விலை மாற்றமின்றி அதே நிலையில் தொடர்கிறது.
தங்கம் விலை நிலவரம் - வெள்ளிக்கிழமை (7.2.2025):
தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை அடைந்து வருகிறது. இந்திய வர்த்தக சந்தைகளில் தங்கத்தின் விலை ஏற்றத்துடனே இருந்து வருகிறது. சென்னையில் வெள்ளிக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை மாற்றமின்றி ரூ.7,930 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.63,440 ஆகவும் உள்ளது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.8,651 ஆகவும், சவரன் விலை ரூ.69,208 ஆகவும் உள்ளது.
வெள்ளி விலை: சென்னையில் இன்று (7.2.2025) 1 கிராம் வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.107.10 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,07,100 ஆகவும் விற்பனை ஆகிறது.

காரணம் என்ன? இந்திய ரிசர்வ் வங்கியின் கொள்கை வெளியீடு பெரிய அளவில் திருப்தி அளிக்காத நிலையில் முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் மீது அதிக அளவில் இருக்கிறது. இதனால் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சத்திலேயே இருக்கிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அதிரடி செயல்களால் உலகப் பொருளாதாரம் பதற்றத்தில் உள்ளது. பிப்ரவரி முதல் வாரத்தில் மட்டும் இந்தியாவில் 2.4% தங்கம் விலை உயர்வு கண்டுள்ளது. தங்கத்தின் விலை தற்போது இருப்பதை விட வரும் காலங்களில் மேலும் உச்சங்களை தொடும் என்றே நகை விற்பனையாளர்கள் கணிக்கின்றனர்.
தங்கம் விலை @ சென்னை
- 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,930 (மாற்றமில்லை)
- 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.63,440 (மாற்றமில்லை)
- 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,651 (மாற்றமில்லை)
- 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.69,208 (மாற்றமில்லை)
தங்கம் விலை @ மும்பை
- 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,930 (மாற்றமில்லை)
- 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.63,440 (மாற்றமில்லை)
- 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,651 (மாற்றமில்லை)
- 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.69,208 (மாற்றமில்லை)