Gold Rate Chennai: ஏறிய வேகத்தில் இறக்கம்: ரூ.66,000-க்கு கீழ் சென்ற தங்கம் விலை!
வார கடைசி நாளில் நகை வாங்குவோருக்கு நற்செய்தியாக, ஆபரணத் தங்கம் விலை வெகுவாக குறைந்துள்ளது. ஏறிய வேகத்தில் இறங்கி வரும் தங்கம் விலை இரு தினங்களில் மட்டும் சவரனுக்கு ரூ.640 சரிந்துள்ளது. இந்தப் போக்கு தொடரலாம் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
வார கடைசி நாளில் நகை வாங்குவோருக்கு நற்செய்தியாக, ஆபரணத் தங்கம் விலை வெகுவாக குறைந்துள்ளது. ஏறிய வேகத்தில் இறங்கி வரும் தங்கம் விலை இரு தினங்களில் மட்டும் சவரனுக்கு ரூ.640 சரிந்துள்ளது. இந்தப் போக்கு தொடரலாம் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
சென்னையில் வெள்ளிக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.40 குறைந்து ரூ.8,270 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.320 குறைந்து ரூ.66,160 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.44 குறைந்து ரூ.9,022 ஆகவும், சவரன் விலை ரூ.352 குறைந்து ரூ.72,176 ஆகவும் இருந்தது. இதே அளவில் இன்றும் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
தங்கம் விலை நிலவரம் - சனிக்கிழமை (22.3.2025):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.40 குறைந்து ரூ.8,230 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.320 குறைந்து ரூ.65,840 ஆகவும் உள்ளது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.44 குறைந்து ரூ.8,978 ஆகவும், சவரன் விலை ரூ.352 குறைந்து ரூ.71,824 ஆகவும் இருக்கிறது.
வெள்ளி விலை:
சென்னையில் இன்று (22.3.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.2 குறைந்து ரூ.110 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.2,000 குறைந்து ரூ.1,10,000 ஆகவும் விற்பனை ஆகிறது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. தற்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சற்றே கட்டுக்குள் உள்ளது. பங்குச் சந்தையும் வெகுவாக மீண்டதுடன் தொடர்ச்சியாக ஏற்றத்துடன் வர்த்தகம் ஆகிறது. இதனால், தங்கத்தின் மீதான முதலீடு குறைந்து, ஆபரணத் தங்கம் விலையும் சரியத் தொடங்கியிருக்கிறது. இந்தப் போக்கு நீடித்து மென்மேலும் குறைய வாய்ப்பு உள்ளதாக வர்த்தக நிபுணர்கள் கருதுகின்றனர்.

தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,230 (ரூ.40 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.65,840 (ரூ.320 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,978 (ரூ.44 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.71,824 (ரூ.352 குறைவு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,270 (ரூ.40 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.66,160 (ரூ.320 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.9,022 (ரூ.44 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.72,176 (ரூ.352 குறைவு)
Edited by Induja Raghunathan