Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

Gold Rate Chennai: நகை வாங்குவோருக்கு நல்ல செய்தி - தொடர்ந்து சரியும் தங்கம் விலை!

தொடர்ந்து மூன்றாவது நாளாக ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்திருப்பது, நகை வாங்க விழைவோருக்கு மகிழ்ச்சியான தகவலாக உள்ளது.

Gold Rate Chennai: நகை வாங்குவோருக்கு நல்ல செய்தி - தொடர்ந்து சரியும் தங்கம் விலை!

Thursday September 19, 2024 , 2 min Read

தொடர்ந்து மூன்றாவது நாளாக ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்திருப்பது, நகை வாங்க விழைவோருக்கு மகிழ்ச்சியான தகவலாக உள்ளது.

சென்னையில் நேற்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.15 குறைந்து ரூ.6,850 ஆகவும், சவரன் விலை ரூ.120 குறைந்து ரூ.54,800 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.16 குறைந்து ரூ.7,473 ஆகவும், சவரன் விலை ரூ.128 குறைந்து ரூ.59,784 ஆகவும் இருந்தது. தற்போது மென்மேலும் விலை குறைந்துள்ளது.

தங்கம் விலை நிலவரம் - வியாழக்கிழமை (19.9.2024):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.25 குறைந்து ரூ.6,825 ஆகவும், சவரன் விலை ரூ.200 குறைந்து ரூ.54,600 ஆகவும் இருக்கிறது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.28 குறைந்து ரூ.7,445 ஆகவும், சவரன் விலை ரூ.224 குறைந்து ரூ.59,560 ஆகவும் இருக்கிறது.

கடந்த வாரத்தில் மட்டும் சவரனுக்கு ரூ.1,400 அளவுக்கு அதிகரித்த தங்கம் விலை இப்போது தொடர்ச்சியாக குறைந்து வருவது நகை வாங்க விழைவோருக்கு நிம்மதி தந்துள்ளது.

gold

வெள்ளி விலை:

சென்னையில் வியாழக்கிழமை (19-9-24) 1 கிராம் வெள்ளி விலை ரூ.96 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.96,000 ஆகவும் மாற்றமின்றி விற்பனையாகிறது.

காரணம் என்ன?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்குப் பிறகு, அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை அரை சதவீத அளவில் குறைத்துள்ளது. இதனால், சர்வதேச அளவிலான வர்த்தகத்தில் சாதகமான போக்கு நிலவுகிறது. இந்தப் பின்னணியில், மூன்றாவது நாளாக தங்கம் விலை சற்றே சரிந்துள்ளது.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,825 (ரூ.25 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.54,600 (ரூ.200 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,445 (ரூ.28 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.59,560 (ரூ.225 குறைவு)

தங்கம் விலை @ மும்பை

Edited by Induja Raghunathan