Gold Rate Chennai: நீடிக்காத மகிழ்ச்சி: தங்கம் விலை மீண்டும் உயர்வு!
பொங்கல் பண்டிகையன்று சற்றே குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை, மறுநாளே மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கிவிட்டது. இதனால், நகை வாங்க விழைவோருக்கு கொஞ்சம் பாதகம்தான்.
பொங்கல் பண்டிகையன்று சற்றே குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை, மறுநாளே மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கிவிட்டது. இதனால், நகை வாங்க விழைவோருக்கு கொஞ்சம் பாதகம்தான்.
சென்னையில் செவ்வாய்க்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.10 குறைந்து ரூ.7,330 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.80 குறைந்து ரூ.58,640 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.11 குறைந்து ரூ.7.996 ஆகவும், சவரன் விலை ரூ.88 குறைந்து ரூ.63,968 ஆகவும் இருந்தது. தற்போது மீண்டும் தங்கம் விலை கூடியுள்ளது.
தங்கம் விலை நிலவரம் - புதன்கிழமை (15.1.2025):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.10 உயர்ந்து ரூ.7,340 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.80 உயர்ந்து ரூ.58,720 ஆகவும் உள்ளது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.11 உயர்ந்து ரூ.8,007 ஆகவும், சவரன் விலை ரூ.88 உயர்ந்து ரூ.64,056 ஆகவும் உள்ளது.
வெள்ளி விலை:
சென்னையில் இன்று (15.1.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.1 உயர்ந்து ரூ.101 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,000 உயர்ந்து ரூ.1,01,000 ஆகவும் விற்பனை ஆகிறது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. தற்போது டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு இப்போது வரலாறு காணாத வீழ்ச்சி கண்டுள்ளது. சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை சற்றே உயர்ந்துள்ளதாலும் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,340 (ரூ.10 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.58,720 (ரூ.80 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,007 (ரூ.11 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.64,0576 (ரூ.88 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை

Edited by Induja Raghunathan