Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

Gold Rate Chennai: மீண்டும் ரூ.64,000-ஐ நெருங்கும் தங்கம் விலை - வெள்ளியும் ஏறுமுகம்...

ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் சவரனுக்கு ரூ.64,000-ஐ தொடும் வகையில் ஏற்றம் கண்டு வருவது நகை வாங்க விழைவோருக்கு நெகட்டிவ் நியூஸாக அமைந்துள்ளது.

Gold Rate Chennai: மீண்டும் ரூ.64,000-ஐ நெருங்கும் தங்கம் விலை - வெள்ளியும் ஏறுமுகம்...

Friday February 14, 2025 , 2 min Read

ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் சவரனுக்கு ரூ.64,000-ஐ தொடும் வகையில் ஏற்றம் கண்டு வருவது நகை வாங்க விழைவோருக்கு நெகட்டிவ் நியூஸாக அமைந்துள்ளது. அதேபோல், வெள்ளி விலையும் உயரத் தொடங்கியிருப்பது கவனிக்கத்தக்கது.

சென்னையில் வியாழக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.40 உயர்ந்து ரூ.7,980 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.320 உயர்ந்து ரூ.63,840 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.38 உயர்ந்து ரூ.8,705 ஆகவும், சவரன் விலை ரூ.304 உயர்ந்து ரூ.69,640 ஆகவும் இருந்தது. இந்நிலையில், தங்கம் விலை சற்றே அதிகரித்துள்ளது.

தங்கம் விலை நிலவரம் - வெள்ளிக்கிழமை (14.2.2025):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.10 உயர்ந்து ரூ.7,990 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.80 உயர்ந்து ரூ.63,920 ஆகவும் உள்ளது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.11 உயர்ந்து ரூ.8,716 ஆகவும், சவரன் விலை ரூ.88 உயர்ந்து ரூ.69,728 ஆகவும் உள்ளது.

வெள்ளி விலை:

சென்னையில் இன்று (14.2.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.1 உயர்ந்து ரூ.108 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,000 உயர்ந்து ரூ.1,08,000 ஆகவும் விற்பனை ஆகிறது.

காரணம் என்ன?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. அமெரிக்கா - சீனா இடையிலான வரிவிதிப்பு யுத்தம் உள்ளிட்ட காரணங்களால் சர்வதேச பங்குச் சந்தைகளில் தடுமாற்றம் நிலவுகிறது. தங்கத்தில் முதலீடு செய்வதே இப்போதைக்கு பாதுகாப்பு என்று மக்கள் நம்புகின்றனர். இந்தக் காரணங்களால், சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளதால் ஆபரணத் தங்கத்தின் விலையும் வரலாறு காணாத புதிய உச்சங்களைத் தொட்டு வந்தது.

gold

இந்நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடர்ந்து மீண்டெழுந்த வண்ணம் உள்ளது உள்ளிட்ட சில காரணங்களால் தங்கம் விலை பெரிதாக உயராமல் ஓரளவு கட்டுக்குள் வரத் தொடங்கியிருக்கிறது. எனினும், தற்போதைய ஏறுமுகம் தொடரும் என்றே வர்த்தகர்கள் கருதுகின்றனர்.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,990 (ரூ.10 உயர்வு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.63,920 (ரூ.80 உயர்வு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,716 (ரூ.11 உயர்வு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.69,728 (ரூ.88 உயர்வு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,990 (ரூ.10 உயர்வு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.63,920 (ரூ.80 உயர்வு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,716 (ரூ.11 உயர்வு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.69,728 (ரூ.88 உயர்வு)


Edited by Induja Raghunathan