Gold Rate Chennai: அப்பாடா... சரிந்தது தங்கம் விலை - நகை வாங்க உகந்த தருணம்?
ஆபரணத் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.360 குறைந்துள்ளது. அடுத்தடுத்த நாட்களில் விலை உயர்வு இருக்கலாம், என கணிக்கப்படுவதால் இதுவே நகை வாங்குவோருக்கு உகந்த தருணம் என வர்த்தகர்கள் கூறுகின்றனர்.
ஆபரணத் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.360 குறைந்துள்ளது. அடுத்தடுத்த நாட்களில் விலை உயர்வு இருக்கலாம், என கணிக்கப்படுவதால் இதுவே நகை வாங்குவோருக்கு உகந்த தருணம் என வர்த்தகர்கள் கூறுகின்றனர்.
சென்னையில் வியாழக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.35 அதிகரித்து ரூ.8,070 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.280 உயர்ந்து ரூ.64,560 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.39 அதிகரித்து ரூ.8,804 ஆகவும், சவரன் விலை ரூ.312 உயர்ந்து ரூ.70,432 ஆகவும் இருந்தது. இப்போது தங்கம் விலை ஓரளவு குறைந்துள்ளது.
தங்கம் விலை நிலவரம் - வெள்ளிக்கிழமை (21.2.2025):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.45 குறைந்து ரூ.8,025 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.360 குறைந்து ரூ.64,200 ஆகவும் உள்ளது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.49 குறைந்து ரூ.8,804 ஆகவும், சவரன் விலை ரூ.392 குறைந்து ரூ.70,040 ஆகவும் உள்ளது.
வெள்ளி விலை:
சென்னையில் இன்று (21.2.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.108 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,08,000 ஆகவும் விற்பனை ஆகிறது.

காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தின் தொடரும் அதிரடி நடவடிக்கைகளின் தாக்கத்தால் சர்வதேச பங்குச் சந்தைகளில் நிலையற்ற சூழல் நிலவுகிறது. இதனால், தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பதும் தொடர்வதால் ஆபரணத் தங்கத்தின் விலையும் கூடி வருகிறது. தற்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மீண்டெழத் தொடங்கியது உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை ஓரளவு குறைந்துள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,025 (ரூ.45 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.64,200 (ரூ.360 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,804 (ரூ.49 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.70,040 (ரூ.392 குறைவு)
தங்கம் விலை @ மும்பை

Edited by Induja Raghunathan